17 வகையான காய்கறிகள் சேர்த்த பொங்கல் குழம்பு செய்முறை..!

Advertisement

பொங்கல் குழம்பு செய்வது எப்படி?

Pongal Kulambu Seivathu Eppadi: ஹாய் பிரண்ட்ஸ் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. தமிழர்களின் பாரம்பரிய திருநாளான தை பொங்கல் அன்று குளித்து, புதிய ஆடைகள் அணிந்து பகலவனுக்கு முதலில் பொங்கல் வைத்து மிக விமர்சனமாக கொண்டாடும் நாள் தான் பொங்கல். இந்த பொங்கல் அன்று சர்க்கரை பொங்கல் மற்றும் வெண்பொங்கல் ஆகிய இரண்டு பொங்கலையும் அனைவரது வீட்டிலும் வைப்பார்கள். சர்க்கரை பொங்கலுக்கு எந்த ஒரு சைடிஷ்ஷும் தேவையில்லை.. ஆனால் வெண்பொங்கலுக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு சைடிஷ் இருந்தால் தான் அனைவராலும் சாப்பிட முடியும். ஆக இந்த பதிவில் வெண்பொங்கலுக்கு ஏற்றது போல் ஒரு அருமையான குழம்பு செய்முறையை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். ஆக இந்த பதிவை தொடர்ந்து படித்து பயன்பெறுங்கள்..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

தேவையான பொருட்கள்:Pongal Kulambu

  1. கடுகு – 1/2 ஸ்பூன்
  2. சீரகம் – 1/4 ஸ்பூன்
  3. வெந்தயம் – 1/4 ஸ்பூன்
  4. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
  5. பெருங்காயத்தூள் – இரண்டு சிட்டிகை
  6. மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
  7. மல்லி தூள் – 1 1/2 ஸ்பூன்
  8. சீரகம் தூள் – 1/4 ஸ்பூன்
  9. துவரம்பருப்பு – 150 கிராம்
  10. சின்ன வெங்காயம் – 20
  11. கருவேப்பிலை – 2 கொத்து
  12. புளி – நெல்லிக்காய் அளவு
  13. பூண்டு – 10 நறுக்கியது
  14. தக்காளி – 2 நறுக்கியது
  15. வெண்டைக்காய் – ஒரு கையளவு
  16. சக்கரைவள்ளி கிழங்கு – ஒரு கையளவு
  17. கருணை கிழங்கு – ஒரு கையளவு
  18. உருளைக்கிழங்கு – ஒரு கையளவு
  19. கத்தரிக்காய் – ஒரு கையளவு
  20. வாழைக்காய்- ஒரு கையளவு
  21. முருங்கைக்காய் – ஒரு கையளவு
  22. கொத்தவரங்காய் – ஒரு கையளவு
  23. குடைமிளகாய் – ஒரு கையளவு
  24. மஞ்சள் பூசணிக்காய் – ஒரு கையளவு
  25. பச்சை மொச்சைக்காய் – ஒரு கையளவு
  26. கேரட் – ஒரு கையளவு
  27. அவரைக்காய் – ஒரு கையளவு
  28. முள்ளங்கி – ஒரு கையளவு
  29. புடலங்காய் – ஒரு கையளவு
  30. பீன்ஸ் – ஒரு கையளவு
  31. மாங்காய் – ஒரு கையளவு
  32. உப்பு – தேவையான அளவு
  33. துருவிய தேங்காய் – ஒரு கையளவு
  34. எண்ணெய் – தேவையான அளவு

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
21 வகை காய்கறிகள் சேர்த்து பொங்கல் குழம்பு செய்முறை..!

பொங்கல் குழம்பு செய்முறை – Pongal Kulambu Seivathu Eppadi:pongal kulambu seivathu eppadi

முதலில் மேல் கூறப்பட்டுள்ள அனைத்து காய்கறிகளையும் சுத்தமாக கழுவி உங்களுக்கு தேவையான அளவிற்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சமைப்பதற்கு தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

பின் புளியை தண்ணீரில்ஊறவைத்து கொள்ளவும்

பின் குக்கரில் துவரம்பருப்பு 150 கிராம், சிறிதளவு வெங்காயம், சிறிதளவு தக்காளி, சிறிதளவு சீரகம், சிறிதளவு பெருங்காயத்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி மூன்று விசில் விட்டு வேகவைக்கவும்.

மூன்று விசில் வந்த பிறகு அடுப்பை அணைத்து விடவும். பின் குக்கரில் உள்ள பிரஷர் போகும் வரை காத்திருக்கவும். குக்கரில் உள்ள பிரஷர் அனைத்தும் அடங்கிய பிறகு குக்கரை திறந்து அவற்றில் இருக்கும் தண்ணீரை தனியாக எடுத்துவிட்டு, பருப்பை ஒரு முறை நன்றாக கடைந்துகொள்ளுங்கள்.

பின் பருப்பு தண்ணீரிலேயே கடைந்து வைத்துள்ள பருப்பை சேர்த்து தனியாக வைத்துவிடவும்.

பின்பு அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை வைத்து அதில் இரண்டு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் சேர்த்து  தாளிக்கவும்.

பின் அதனுடன் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் சிவக்கும் வரை வதக்கவும்.

வெங்காயம் சிவந்த பிறகு தக்காளி சேர்த்து வதக்க வேண்டும். இந்த தக்காளியுடன் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

தக்காளி நன்கு வதங்கியதும் முதலில் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள். பின்பு மாங்காயை தவிர நறுக்கி வைத்துள்ள மற்ற அனைத்து காய்கறிகளையும் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கிவிடவும்.

பின்பு ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், 1 1/2 ஸ்பூன் மல்லி தூள், 1/4 ஸ்பூன் சீரகம் தூள், ஒரு சிட்டிகை பெருங்காயம் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்பொழுது நறுக்கி வைத்துள்ள மாங்காயையும் அதில் சேர்த்து வதக்கவும்.

பின்பு ஊறவைத்துள்ள புளியை கரைத்து வதக்கி வைத்துள்ள காய்கறியுடன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்கவிடவும்.

10 நிமிடம் கழித்து துருவி வைத்துள்ள தேங்காவை அதில் சேர்த்து இரண்டு அல்லது மூன்று நிமிடம் கொதிக்கவைத்து இறக்கினால் போதும் அருமையான பொங்கல் குழம்பு தயார். கண்டிப்பாக இந்த பொங்கலுக்கு ட்ரை செய்யுங்கள்..

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பொங்கல் ஸ்பெஷல் மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement