21 வகை காய்கறிகள் சேர்த்து பொங்கல் குழம்பு செய்முறை..!

Pongal Kulambu Seivathu Eppadi

பொங்கல் குழம்பு செய்முறை – Pongal Kulambu Seivathu Eppadi

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.. பொங்கல் அன்று அனைவரது வீட்டிலும் பல வகையான காய்கறிகளை சேர்த்து குழம்பு வைப்பது வழக்கம். அதிலும் பலரது வீட்டில் பாரம்பரியமாக அதாவது வழிவழியாக பொங்கல் அன்று பல காய்கறிகளை சேர்த்து குழம்பு வைப்பார்கள். அந்த வகையில் இந்த பதிவில் 21 வகை காய்கறிகள் சேர்த்து பொங்கல் குழம்பு செய்வது எப்படி என்று இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க..

தேவையான பொருட்கள்:

 1. துவரம் பருப்பு – 1/4 கிலோ
 2. சீரகம் – ஒரு ஸ்பூன்
 3. பூண்டு – 10 பற்கள்
 4. பெருங்காயம் தூள் – ஒரு ஸ்பூன்
 5. பெரிய வெங்காயம் – 2 (பொடிதாக நறுக்கியது)
 6. தக்காளி – 3 (பொடிதாக நறுக்கியது)
 7. முருங்கைகாய் – 1/4 கப்
 8. முள்ளங்கி – 1/4 கப்
 9. மாங்காய் – சிறிதளவு
 10. பரங்கிக்காய் – 1/4 கப்
 11. பீன்ஸ் – 1/4 கப்
 12. கேரட் – 1/4 கப்
 13. மொச்சை காய் – 1/2 கப்
 14. கருணை கிழங்கு – 1/4 கப்
 15. வாழைக்காய் – 1/4 கப்
 16. சேப்பங்கிழங்கு – 1/4 கப்
 17. கீரையின் தண்டு – சிறிதளவு
 18. பச்சை மிளகாய் – 10
 19. கொத்தவரங்காய் – 1/4 கப்
 20. அவரைக்காய் – 1/4 கப்
 21. கத்திரிக்காய் – 1/4 கப்
 22. கோவக்காய் – 50 கிராம்
 23. சௌசௌ – 1/4 கப்
 24. வெண்டைக்காய் – 1/4 கப்
 25. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
 26. மிளகாய் தூள் – 2 1/2 ஸ்பூன்
 27. மல்லி தூள் – 1 1/4 ஸ்பூன்
 28. சாம்பார் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
 29. உப்பு – தேவைக்கேற்ப
 30. புளி – சிறிய எலுமிச்சை அளவு
 31. தேங்காய் துருவல் – 1/4 கப்
 32. சோம்பு – 1/4 ஸ்பூன்
 33. எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன்
 34. கடுகு – ஒரு ஸ்பூன்
 35. கருவேப்பிலை – சிறிதளவு
 36. காய்ந்த மிளகாய் – 3
 37. சின்ன வெங்காயம் – பொடிதாக நெருங்கியது சிரித்தளவு

இதையும் கிளிக் செய்து பாருங்கள்–> பொங்கல் ஸ்பெஷல் மொச்சை பயறு மசாலா செய்வது எப்படி?

பொங்கல் குழம்பு செய்முறை விளக்கம் – Pachai Mochai Payaru Masala in Tamil:

ஸ்டேப்: 1

அடுப்பில் ஒரு பெரிய அகலமான பாத்திரத்தை 2 1/2 கப் தண்ணீர் ஊற்றி துரம்பருப்பை சேர்க்கவும். பின் அதனுடன் பொடிதாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை சேர்க்க வேண்டும். இறுதியாக 10 பூண்டு பற்கள், சிறிதளவு சீரகம், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து பருப்பை நன்கு வேகவைக்கவும்.

ஸ்டேப்: 2

பருப்பு நன்கு வெந்ததும் மேல் கூறப்பட்டுள்ள 21 வகை காய்கறிகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கில் பருப்பில் சேர்த்து கிறித்தளவு, பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி விடுங்கள்.

ஸ்டேப்: 3

அதன் பிறகு மேல் கூறப்பட்டுள்ள அளவின் படி மிளகாய் தூள், மல்லி தூள், தேவையான அளவு  உப்பு மற்றும் சாம்பார் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள்.

ஸ்டேப்: 4

காய்கறிகள் நன்கு வெந்து, மசாலா பொருள்களின் பச்சை வாசனை நீங்கியதும் புளியை கரைத்து ஊற்றுங்கள். ஒரு கொத்தி வந்த பிறகு தேங்காய் துருவலில் சிறிதளவு சோம்பு சேர்த்து நன்கு அரைத்து அதனையும் குழம்பில் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்கவிடுங்கள்.

ஸ்டேப்: 5

பின் மற்றொரு கடையில் எண்ணெய் ஊற்றவும் எண்ணெய் நன்கு சூடேறியதும் காய்ந்த மிளகாய் 3, கடுகு ஒரு ஸ்பூன், நறுக்கிய சின்ன வெங்காயம் சிறிதளவு மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்து விடுங்கள். தாளித்த இந்த கலவையை சாம்பாரில் ஊற்றுங்கள். அவ்வளவு தான் சுவையான பொங்கல் சாம்பார் தயார் இந்த பொங்கலுக்கு உங்கள் வீட்டில் செய்து அசத்துங்கள் நன்றி வணக்கம்.

பாரம்பரிய முறையில் பால் பொங்கல் செய்வது எப்படி?

 

சர்க்கரை பொங்கல் செய்முறை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து பாருங்கள் –> சர்க்கரை பொங்கல் வைப்பது எப்படி?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்