உருளைக்கிழங்கை வைத்து மிகவும் சுவையான Break Fast இப்படி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

potato dosa recipe in tamil

Potato Breakfast Recipe in Tamil

தினமும் காலையில் ஒரே மாதிரியாக இட்லி, தோசை, சப்பாத்தி என்று சாப்பிட்டு அலுத்து போயிருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே ஏதாவது வித்தியாசமாக சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் இன்று காலை உணவை ரசித்து ருசித்து சாப்பிட கூடிய ஒரு ரெசிபி செய்வது எப்படி என்று இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ள போகிறோம். அதுவும் உருளைக்கிழங்கை வைத்து மிகவும் சுவையான Breakfast செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇https://bit.ly/3Bfc0Gl

Potato Breakfast Recipe in Tamil: 

உருளைக்கிழங்கு தோசை

  1. உருளைக்கிழங்கு – 3
  2. பெரிய வெங்காயம் – 2
  3. பூண்டு – 4 பற்கள்
  4. மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  5. அரிசிமாவு – 1 கப்
  6. எண்ணெய் – 1 ஸ்பூன்
  7. கொத்தமல்லி – சிறிதளவு
  8. உப்பு – தேவையான அளவு
சுவையான மொறு மொறு சோயா கட்லெட் செய்ய தெரியுமா..?

செய்முறை:

ஸ்டேப் -1

உருளைக்கிழங்கை

முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து கொள்ளவும். பின் அதை ஒரு கிண்ணத்தில் எடுத்து ஆறவிட வேண்டும். பின் அதன் தோலை நீக்கிவிட்டு மாவு போல மசித்து கொள்ள வேண்டும்.

ஸ்டேப் -2

பின் அதில் பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி போட வேண்டும். அதுபோல பூண்டு பற்களையும் பொடிப்பொடியாக நறுக்கி அதில் சேர்த்து கொள்ளவும்.

ஸ்டேப் -3

பிறகு அதில் 1/2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதில் 1 கப் அளவிற்கு அரிசிமாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

உருளைகிழங்கு பட்டாணி மசாலா ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்

ஸ்டேப் -4

மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும்

பிறகு அதில் 1 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து கலந்து விடவும்.

ஸ்டேப் -5

பின் தோசை கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி கொள்ளவும். தோசை கல் சூடானதும் அதில் நாம் கரைத்து வைத்திருக்கும் மாவை தோசை போல ஊற்றி கொள்ள வேண்டும்.

தோசை வெந்ததும் எடுத்து பரிமாற வேண்டும். அவ்வளவு தான் நண்பர்களே நீங்களும் இதுபோல செய்து சாப்பிட்டு பாருங்கள்..!

என்னது உருளைக்கிழங்கை வைத்து இப்படி கூட பண்ணலாமா..?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal