உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி | Urulaikilangu Varuval in Tamil
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தெரியாத என்று நினைக்கலாம். ஆனால் நாங்கள் சொல்லப்போவது வித்தியாசமாகவும், மொறுமொறுப்பாகவும் எப்படி செய்வது என்று தான் சொல்லப்போகிறோம்.
பொதுவாக உருளைக்கிழங்கை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். காலையில் குழந்தைகளுக்கு, பணியில் செல்லும் கணவர்களுக்கு சாப்பாடு அவசரமாக செய்வோம். அப்படி செய்யும் போது சீக்கிரமாக ஒரு சைடிஷ் செய்ய வேண்டுமென்றால் இதை ட்ரை பண்ணுங்க ..!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி |
உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
- வெங்காயம் – 2
- தக்காளி – 1
- உருளைக்கிழங்கு – 1
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மல்லி தூள் – 1/4 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- பூண்டு – 4 பல்
- மிளகு – 5
- எண்ணெய் – 5 ஸ்பூன்
உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை 1:
- முதலில் வெங்காயம், தக்காளியை பொடிப்பொடியாக வெட்டி கொள்ளவும்.
- உருளைக்கிழங்கு வட்டமான வடிவத்தில் கொஞ்சம் கனமாக வெட்டி கொள்ளவும்.
- அடுத்து பூண்டு மற்றும் மிளகை இடித்து எடுத்து வைக்கவும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை 2:
- முதலில் அடுப்பை பத்த வைக்கவும். அதில் கடாயை வைக்க வேண்டும். கடாய் சூடான பிறகு 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
- அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் வந்தவுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும். தக்காளி சுருங்கிய பதம் வந்தவுடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
- மூன்றையையும் எண்ணெயிலே கொஞ்சம் உப்பு சேர்த்து வதக்கவும். உருளைக்கிழங்கு பாதி பதம் வேகும் வரை வதக்கவும். தீ மிதமான சூட்டிலே இருக்க வேண்டும்.
உருளைக்கிழங்கு வறுவல் செய்முறை 3:
- அதிலேயே கொஞ்சம் எண்ணெய் ஊற்றி மஞ்சள் தூள் சிறிதளவு, காரத்துக்கேற்ற மிளகாய் தூள், மல்லி தூள் சிறிதளவு சேர்த்து வதக்கவும். கொஞ்சமாக தண்ணீர் தெளித்து வதக்க வேண்டும்.
- அதன் பின் இடித்து வைத்த பூண்டு மிளகை சேர்க்கவும். உருளைக்கிழங்கு உடையாமல் வதக்க வேண்டும்.
- பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். உருளைக்கிழங்கில் மசாலா சேர்ந்து சிவந்தநிறம் மற்றும் மொறுமொறுப்பு பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
உருளைக்கிழங்கு வறுவல் சிறப்பு:
- உருளைக்கிழங்கு சாப்பிட்டால் கால் வலி மற்றும் வாயு பிரச்சனை என்று சில நபர்கள் சாப்பிடமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு உருளைக்கிழங்கு பிடிக்கும் சாப்பிடமுடியலேயே.! என்று வருத்தமாக இருப்பார்கள். இனி வருத்தப்பட வேண்டாம்.
- ஏனென்றால் இதில் பூண்டு மிளகு சேர்ப்பதால் வாயு பிரச்சனை இருக்காது. ஆகவே இப்படி செய்த உருளைக்கிழங்கு வறுவலை தயக்கம் இல்லாமல் சாப்பிடலாம்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |