புரட்டாசி பொறந்துடுச்சினு கவலை கொள்ள வேண்டாம் சாம்பாருக்கு சைடிஷ் கறிவருவல்போல உருளைக்கிழங்கு வறுவல்

Advertisement

உருளைக்கிழங்கு கறிவருவல்

நண்பர்களே வணக்கம் அசைவ வாடையை கூட பிடிக்க முடியாது என்று நினைத்திருப்பவர்கள் அனைவருக்குமே இந்த பதிவானது உதவியாக இருக்கும். தினமும் உருளைக்கிழங்கு இல்லாமல் வீட்டில் எந்த ஒரு சாப்பாட்டையும் செய்யமாட்டார்கள். அது ஒரு பக்கம் இருந்தாலும் இந்து புரட்டாசி மாதம் என்பது கவலையாக இருக்கும். எந்த அசைவ உணவை சாப்பிட முடியாது என்று அனைவருமே கவலைகொள்ளும் நேரத்தில் உங்களுக்காக இந்த பதிவில் உருளைக்கிழகை வைத்து அசைவ ருசியில் ஒரு சூப்பரான சாம்பார் ரசத்திற்கு ஏற்ற சைடிஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்..!

தேவையான பொருட்கள்:

  1. உருளைக்கிழங்கு – 2 (சின்னதாக இருந்தாலும் உங்களுக்கு தேவையான அளவு)
  2. நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
  3. கடுகு – 1/2 ஸ்பூன்
  4. உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்,
  5. சீரகம் – 1 ஸ்பூன்,
  6. கருவேப்பிலை – 1 கொத்து,
  7. மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்,
  8. உப்பு – தேவையான அளவு,
  9. மிளகாய் தூள் – தேவையான அளவு,
  10. மிளகுத்தூள் – 1/2 ஸ்பூன்,
  11. சீரகத்தூள் – 1/2 ஸ்பூன்,
  12. தனியாத்தூள் – 1.1/2 ஸ்பூன்.

செய்முறை:

ஸ்டேப்-1

முதலில் உருளைக்கிழங்கில் உள்ள மண்களை கழுவிக்கொள்ளுங்கள். அதில் நிறைய கிருமிகள் இருக்கும். நுண் கிருமிகள் நீங்குவதற்காக 5 நிமிடம் சூடு தண்ணீரில் போட்டுக்கொள்ளவும்.

 உருளைக்கிழங்கு கறிவருவல்

பின்பு அதனை நீல் வட்டமாக நறுக்கி தனியாக வைத்துக்கொள்ளவும். அப்படி இல்லையென்றாலும் உங்களுக்கு சின்ன உருளைவேண்டுமென்றாலும் அதற்கு ஏற்றது போல் அப்படி வைத்துக்கொள்ளலாம்.

ஸ்டேப்-2

இப்போது அடுப்பில் கடாயை வைத்து அதில் நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் ஊற்றிக்கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரியவிடவும்.

பொரியும் போது அதில் கருவேப்பிலை, சீரகம், உளுந்து ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப்-3

1 நிமிடம் வதங்கிய பின் வட்டமாக நறுக்கிய உருளைக்கிழங்கை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி அதில் போடவும். மிருதுவாக கலந்து கொள்ளவும்.

ஸ்டேப்-4

பின்பு அதில் தேவையான அளவிற்கு உப்பு மற்றும் மஞ்சள் தூள் தூவி இதனையும் சேர்த்து கலந்து விடவும்.

பின்பு 4 நிமிடம் மீடியமாக அடுப்பை வைத்து வேகவிடவும்.

ஸ்டேப்-5

வெந்த பிறகு நாம் எடுத்து வைத்துள்ள மசாலா பொருட்களை சேர்த்துக்கொள்ளவும். அதாவது மல்லித்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள் என மசாலா பொருட்களை சேர்த்து கலந்து விடவும்.

ஸ்டேப்-6

கடைசியாக 4 நிமிடம் வேகவிடவும். பின்பு மசாலா பொருட்கள் அனைத்தும் அதில் சேர்த்து உருளைக்கிழங்கு நன்றாக மசாலாவுடன் கலந்து இருக்கும்.

அவ்வளவு தான் இப்போது அசைவ உருளைக்கிழங்கு வறுவல் ரெடி வாங்க பார்ப்போம் சாம்பார் சாதத்தில் சேர்த்து சாப்பிட்டு பார்ப்போம்..! படித்து பார்த்து ட்ரை பண்ணி பாருங்கள்..!

உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்
Advertisement