மீந்து போன 2 இட்லியில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி..! Potato Recipes In Tamil..!

potato recipes

இட்லி, உருளைக்கிழங்கு வைத்து வடை செய்வது எப்படி..! Easy Potato Snacks Recipes In Tamil..!

Potato Recipes: நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் மீந்து போன இட்லி, உருளைக்கிழங்கை வைத்து சூப்பரான வடை ரெசிபி எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்க போகிறோம். மாலை நேரத்தில் வீட்டில் இருக்கக்கூடியவர்களுக்கு சுவையாக ஏதேனும் சாப்பிட தோன்றும். அந்த வகையில் பொதுநலம் பதிவில் வீட்டில் உள்ள பொருளை வைத்து சுலபமான முறையில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய இட்லி மற்றும் உருளையை வைத்து வடை எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!

newசுவையான ஆலு டகோஸ் எப்படி செய்வது..! Aloo Tacos Recipes..!

ஸ்னாக்ஸ் ரெசிபி செய்ய – தேவைப்படும் பொருள்:

 1. இட்லி – 2
 2. வேகவைத்த உருளைக்கிழங்கு – 1(துருவியது)
 3. பெரிய வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)
 4. ஜீரகம் – சிறிதளவு 
 5. அரிசி மாவு – 3 ஸ்பூன் 
 6. உப்பு – தேவையான அளவு 
 7. மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன் 
 8. கொத்தமல்லி – சிறிதளவு 
 9. பிரட் – 2(மிக்ஸி ஜாரில் அரைத்தது)
 10. எண்ணெய் – தேவையான அளவு 

இட்லி, உருளைக்கிழங்கு வைத்து சுவையான ரெசிபி செய்முறை:

ஸ்டேப் 1:

முதலில் ஒரு பவுலில் வேகவைத்த ஒரு உருளைக்கிழங்கை எடுத்து துருவி எடுத்துக்கொள்ளவும். அதே பவுலில் 2 இட்லியை நன்றாக உதிர்த்துவிட்டு கொள்ளவும். இட்லியை உதிர்த்து விடும் முன் தண்ணீரில் 1 நிமிடம் இட்லியை ஊறவைத்து கொண்டால் இட்லியானது நன்கு உதிரியாக கிடைக்கும்.

ஸ்டேப் 2:

உதிர்த்து விட்ட இட்லியை சேர்த்த பிறகு நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளவும். வெங்காயம் சேர்த்த பிறகு சிறிதளவு சீரகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்டேப் 3:

சீரகம் சேர்த்த பிறகு 3 ஸ்பூன் அரிசி மாவினை சேர்த்துக்கொள்ளவும். அடுத்து உப்பு தேவையான அளவிற்கு சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப் 4:

அடுத்து மிளகாய் தூள் 1/2 ஸ்பூன் சேர்க்கவும். உங்களுக்கு காரம் எந்த அளவிற்கு வேண்டுமோ அந்த அளவில் சேர்த்துக்கொள்ளலாம். மிளகாய் தூள் சேர்த்த பிறகு கொத்தமல்லி சிறிதளவு சேர்த்துக்கொள்ளவும்.

newஉருளைக்கிழங்கு முட்டை ரெசிபி..! potato omelette receipes..! Evening Snacks..!

ஸ்டேப் 5:

இப்போது எல்லாவற்றையும் சேர்த்த பிறகு பவுலில் உள்ளதை தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ளவும். கையில் மாவு ஒட்டாமல் இருப்பதற்கு சிறிதளவு எண்ணெயை கையில் தேய்த்து கொள்ளவும்.

ஸ்டேப் 6:

இப்போது மாவினை உருண்டை வடிவில் உருட்டி நன்றாக தட்டை வடிவில் தட்டிய பிறகு உருண்டையின் நடு பகுதியில் சிறியதாக ஓட்டை போட்டுக்கொள்ளவும். மிக்ஸி ஜாரில் 2 பிரெட் துண்டுகளை அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப் 6:

அரைத்து வைத்த பிரெட் துண்டுகளில் ரெடி செய்த உருண்டைகளை இந்த பிரெட் துகள்களில் பிரட்டி எடுத்துக்கொள்ளவும். அடுத்து கடாயில் பொரித்து எடுப்பதற்கு தேவையான எண்ணெயை ஹீட் செய்யவும்.

ஸ்டேப் 7:

எண்ணெய் நன்றாக காய்ந்த பிறகு பிரெட் துகள்களில் பிரட்டியதை இந்த எண்ணையில் போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எடுக்கவும். இந்த வடையை இரண்டு புறமும் நன்றாக திருப்பிவிட்டு எடுக்கவும்.

அவ்ளோதாங்க இந்த சுவையான இட்லி, உருளைக்கிழங்கு வைத்து செய்த வடை ரெசிபி தயார். வீட்டில் மீந்துபோகும் இட்லியை இனி தூக்கிபோடாமல் இந்த ரெசிபியை எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா எல்லாருக்கும் பிடிக்கும். நன்றி வணக்கம்..!

newஇந்த Secret Recipe சேர்த்தால் போதும் மொறு மொறுன்னு உளுந்து வடை செய்யலாம்.!


சுவையான ஆலு டகோஸ் எப்படி செய்வது..! Aloo Tacos Recipes..!

potato recipesநண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் உருளைக்கிழங்கு(potato recipes) வைத்து ஒரு சூப்பரான ஆலு டகோஸ் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். தினமும் ஒரே உணவை செய்து சாப்பிட்டு வருவதால் எல்லாருக்கும் சலிப்பு தன்மை ஏற்பட்டு விடும். அதனால் வீட்டிலே காலை உணவை எளிமையான முறையில் மாற்ற இதோ உங்களுக்காக ஒரு சூப்பர் டிஷை படித்து தெரிந்துகொள்ளுவோம்.

newஉருளைக்கிழங்கு முட்டை ரெசிபி..! potato omelette receipes..! Evening Snacks..!

ஆலு டகோஸ் செய்ய – தேவையான பொருட்கள்:

 1. மைதா மாவு – 1 கப் 
 2. பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன் 
 3. உப்பு – தேவையான அளவு 
 4. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் 
 5. தண்ணீர் – 1/4 கப் 
 6. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு – 3
 7. பெரிய வெங்காயம் – (நீட்ட வடிவில் நறுக்கியது 1)
 8. சில்லி ஃப்ளேக் – 1 டீஸ்பூன் 
 9. மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் 
 10. கொத்தமல்லி – சிறிதளவு 
 11. ரெட் சில்லி சாஸ் – 1 ஸ்பூன் அளவு 
 12. துருவிய சீஸ் – சிறிதளவு 

சுவையான ஆலு டகோஸ் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

முதலில் ஒரு பவுலில் மைதா மாவு 1 கப் அளவிற்கு எடுத்துக்கொள்ளவும். மைதா மாவுடன் பேக்கிங் பவுடரை 1 டீஸ்பூன் அளவிற்கு சேர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்து தேவையான அளவிற்கு உப்பு, 3 டேபிள் ஸ்பூன் அளவு எண்ணெய், 1/4 கப் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் அளவிற்கு 5 – 10 நிமிடம் பிசைந்து கொள்ளவேண்டும்.

உருளையை வைத்து ஆலு டகோஸ் எப்படி செய்வது செய்முறை விளக்கம் 2:

அடுத்து பிசைந்த மாவில் எண்ணெய் சிறிதளவு தடவி மூடி 15 நிமிடம் தனியாக வைத்திருக்க வேண்டும். அடுத்ததாக 3 வேகவைத்த உருளைக்கிழங்கு எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். நன்றாக மசித்த பின்னர் இதை தனியாக வைக்கவும்.

உருளைக்கிழங்கு ரெசிபி செய்வது எப்படி செய்முறை விளக்கம் 3:

இப்போது கடாயை ஹீட் செய்துகொள்ளவும். ஹீட் செய்த கடாயில் 1 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் ஊற்றவும். கடாயில் இருக்கும் எண்ணெய் நன்றாக ஹீட் ஆன பிறகு நீட்ட வடிவில் நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கி விடவேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சில்லி ஃப்ளேக் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கவும்.

ஆலு டகோஸ் ரெசிபி செய்ய செய்முறை விளக்கம் 4:

சில்லி ஃப்ளேக் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள் 1 டீஸ்பூன் சேர்த்து வதக்கி கொள்ளவும். வதங்கிய பிறகு அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். இப்போது வதக்கி வைத்த வெங்காயத்தை ஆற வைக்க வேண்டும். ஆறவைத்த பிறகு மசித்து வைத்த உருளைக்கிழங்கில் வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கு ஆலு டகோஸ் எப்படி செய்வது செய்முறை விளக்கம் 5:

வதக்கிய வெங்காயம் மற்றும் மசித்த உருளைக்கிழங்கை பிசைந்த பிறகு சிறிதளவு கொத்தமல்லி சேர்த்து இதையும் பிசைந்து வைத்து கொள்ளவும். இப்போது முதலில் பிசைந்து வைத்த மைதா மாவினை உருண்டையாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து தேய்த்த மாவை சூடான பேனில் மிதமான அளவிற்கு போட்டு எடுக்கவும்.

உருளைக்கிழங்கு டகோஸ் ரெசிபி செய்வதற்கு செய்முறை விளக்கம் 6:

அடுத்து தேய்த்த மாவில் சில்லி சாஸ் இதில் தடவ வேண்டும். சாஸ் தடவிய பிறகு துருவிய சீஸை அரை பக்க அளவிற்கு தூவ வேண்டும். சீஸை தூவிய பிறகு கொத்தமல்லியுடன் மசித்து வைத்த உருளைக்கிழங்கை பாதி அளவிற்கு எடுத்து இதில் ஒரு பக்கமாக வைத்து இதன் மேல் சிறிதளவு சீஸ் தூவி மறு பக்கத்தை மடக்கி விடவேண்டும்.

உருளையை வைத்து ஆலு டகோஸ் எப்படி செய்வது செய்முறை விளக்கம் 7:

இப்போது கடாயில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் எடுத்து ஹீட் செய்யவும். எண்ணெய் நன்றாக ஹீட் ஆனப்பிறகு செய்த டக்கோஸை இரண்டு பக்கமும் மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடம் பொறித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்ளோதாங்க இந்த சூப்பரான உருளைக்கிழங்கு டகோஸ் ரெடி. கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க..!

newபலவகையான பன்னீர் ரெசிபி செய்முறை தெரிஞ்சிக்கலாம் வாங்க..! Paneer recipe in tamil..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்