வாழைக்காய், உருளைக்கிழங்கு மட்டும் இருந்தால் போதும் மழைக்காலத்திற்கு ஏற்ற சூடான மற்றும் ருசியான ஸ்நாக்ஸ் ரெடி ..!

simple snacks recipes in tamil

மழைக்காலத்திற்கு ஏற்ற மிகவும் ருசியான ஸ்நாக்ஸ் ரெசிபி..!

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பு பதிவில் மழைக்காலத்திற்கு ஏற்ற மிகவும் ருசியான மற்றும் மிகவும் எளிமையான ஸ்நாக்ஸ் ரெசிபி பற்றித் தான் பார்க்க இருக்கின்றோம். இந்த மழைக்காலத்தில் குளிருக்கு இதமாக இருக்க மாலை நேரத்தில் வடை ,பச்சி போன்ற ஸ்நாக்ஸ் வகைகளை செய்து சாப்பிட்டிருப்போம் . ஆனால் இன்றைய பதிவில் கூறியுள்ள ஸ்நாக்ஸ் ரெசிபியை மட்டும் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள் மீண்டும் மீண்டும் செய்து தருமாறு கேட்டுக்கொண்டே இருக்கும் அளவிற்கு இதன் ருசி சும்மா தாறுமாறா இருக்கும். சரி வாங்க பதிவினுள் செல்லலாம்.

இதையும் படியுங்கள் => மாலை நேரத்தில் டீயுடன் இந்த ஸ்னாக்ஸ் செஞ்சி சாப்பிட்டு பாருங்க..!

மிகவும் ருசியான ஸ்நாக்ஸ் ரெசிபி:

easy potato snacks recipes in tamil

முதலில் இந்த ஸ்நாக்ஸ் ரெசிபிக்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

 1. வாழைக்காய் – 2
 2. உருளைக்கிழங்கு – 4
 3. இஞ்சிபூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன் 
 4. பெரிய வெங்காயம் – 2
 5. மஞ்சள்தூள் -1/2 டீஸ்பூன் 
 6. மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன் 
 7. கரம் மசாலா – 1/2 டீஸ்பூன் 
 8. அரிசி மாவு – 4 டீஸ்பூன் 
 9. உப்பு – 1 டீஸ்பூன் 
 10. கருவேப்பிலை – 1 கைப்பிடி அளவு 
 11. கொத்தமல்லி இலை – 1 கைப்பிடி அளவு
 12. எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்  
 13. தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப் -1:

முதலில் நாம் எடுத்து வைத்திருந்த 2 வாழைக்காய் மற்றும் 4 உருளைக்கிழங்கு ஆகியவற்றை இரண்டாக நறுக்கி குக்கரில் அவற்றை போட்டு அவை வேகுவதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு வேக வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2:

பிறகு வேகவைத்த வாழைக்காய் மற்றும் உருளைக்கிழங்கின் தோலை உரித்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து அவற்றை நன்கு மசித்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 1/2 டீஸ்பூன் கரம் மசாலா, 4 டீஸ்பூன் அரிசி மாவு மற்றும் 1 டீஸ்பூன் உப்பு ஆகிவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

ஸ்டேப் -3:

பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 2 பெரிய வெங்காயம், 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை ஆகியவற்றை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக்  நன்கு கலந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டேப் -4:

அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பணியாரச் சட்டியை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் எண்ணெயை சேர்த்து அதில் நாம் உருட்டி வைத்திருந்த உருண்டைகளை போட்டு நன்கு வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்பொழுது நமது ருசியான ஸ்நாக்ஸ் ரெடியாகிவிட்டது இதனை அனைவருக்கும் பரிமாறலாம். நீங்களும் உங்கள் வீட்டில் இந்த ஸ்நாக்ஸ் ரெசிபியை செய்து சுவைத்து பாருங்கள்.

இதையும் படியுங்கள் => மிகவும் ருசியான அவல் உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி..?

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal