இறால் வறுவல் | Prawn Fry Recipe in Tamil
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் எல்லோருக்கும் பிடித்த இறால் வறுவலை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்வோம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் இறால். வீட்டில் செய்யும் உணவு பொருட்களை வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் பிடிக்காத உணவுகள் கூட பிடித்துவிடும். அந்த வகையில் இறால் வறுவல் இப்படி செய்து அசத்துங்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இறாலில் கிரேவி, குழம்பு, வறுவல் செய்ய தெரியும். ஆனால் பிரியாணி செய்ய தெரியுமா.? இறால் பிரியாணி எப்படி செய்வது தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து படியுங்கள் ⇒ கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் கம கமக்கும் இறால் பிரியாணி செய்வது எப்படி?
இறால் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
- இறால் – அரை கிலோ
- பச்சை மிளகாய் – 5
- இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- வெங்காயம் – 2
- மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
- மிளகுத்தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி – சிறிதளவு
- உப்பு -தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
இறால் வறுவல் செய்முறை:1
முதலில் இறாலில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1 தேக்கரண்டி மிளகாய் தூள், 2 தேக்கரண்டி மல்லித்தூள், 1 தேக்கரண்டி மிளகு தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்யவும். பின் 15 நிமிடம் ஊற வேண்டும்.
கொத்தமல்லி, பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இறால் வறுவல் செய்முறை:2
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலையை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
இறால் வறுவல் செய்முறை:3
அடுத்து அதில் ஊற வைத்த இறால் கலவையை வாணலியில் போட்டு நன்றாக பிரட்டவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து வேக விடவும். இறால் விரைவில் வெந்து விடும்.
இறால் வறுவல் செய்முறை:4
அவ்வளவு தான் சூப்பரான இறால் வறுவல் ரெடி. இதை படிப்பதோடு மட்டுமில்லாமல் வீட்டில் செய்து அசத்துங்கள்.
இட்லி, தோசை, சாதம் உள்ளிட்டவைகளுடன் தொட்டு, பிரட்டி சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |