புதினா சட்னி செய்முறை | Pudina Chutney Recipe in Tamil
புதினா பல நபர்களுக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் இதனை பிரியாணியில் மட்டும் சேர்ப்பார்கள். அதையும் எடுத்து கீழே போட்டுவிடுவோம். எல்லாரும் விரும்பி சாப்பிடுகிற மாதிரி புதினாவை சட்னி செய்து சாப்பிடலாம். தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, பூண்டு சட்னி என்று ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிடாமல் இந்த மாதிரி புதினா சட்னி செய்து சாப்பிடலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
- புதினா – 1/2 கப்
- பச்சைமிளகாய் -2
- பூண்டு – 2 பல்
- இஞ்சி -1 துண்டு
- உப்பு -தேவையான அளவு
- கடுகு – 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை – சிறிதளவு
- புளி- சிறிதளவு
புதினா சட்னி செய்முறை:
கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் 2 நறுக்கிய சின்ன வெங்காயம், 1 துண்டு இஞ்சி, 2 பல் பூண்டு சேர்த்து வதக்கவும்.அதனுடன் புதினா இலை சேர்த்து வதக்கவும்.
வதக்கி வைத்த பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து, அதனுடன் திருகிய தேங்காய், பச்சை மிளகாய் 2, தேவையான அளவு உப்பு, பொட்டு கடலை சிறிதளவு சேர்த்து அரைக்கவும்.
தாளிப்பதற்கு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து, கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு அரைத்து வைத்த சட்னியை ஊற்றவும்.
ஒரு நிமிடத்தில் இட்லி தோசைக்கு சூப்பரான சட்னி..! வறுத்து அரைக்க வேண்டியதில்லை..!
கொத்தமல்லி சட்னி தேவையான பொருட்கள்:
- கொத்தமல்லி – சிறிதளவு
- எண்ணெய் –2 தேக்கரண்டி
- உளுத்தப்பருப்பு – 1/2 தேக்கரண்டி
- கடலைப்பருப்பு –1/2 தேக்கரண்டி
- இஞ்சி – 1 துண்டு
- தேங்காய் – 1/4 கப்
- உப்பு – தேவையான அளவு
- கடுகு – 1 தேக்கரண்டி
- கருவேப்பிலை -சிறிதளவு
கொத்தமல்லி சட்னி செய்முறை:
கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் 1/2 உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து பொன்னிறம் வரும் வரை வைத்தவும். அதனுடன், 1 துண்டு இஞ்சி, கொத்தமல்லி தலை சேர்த்து வதக்கவும்.
வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்சி ஜாரில் சேர்த்து, அதனுடன் 1/4 கப் திருகிய தேங்காய், தேவையான அளவு உப்பு, சிறிதளவு புளி சேர்த்து அரைத்து கொள்ளவும்.
தாளிப்பதற்கு கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் 1/2 தேக்கரண்டி கடுகு சேர்த்து,கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு அரைத்து வைத்த சட்னியை ஊற்றவும்.
ஒரே சட்னி செய்யாமல் இந்த சட்னி செய்து பாருங்க..! சுவை சும்மா அள்ளும்’
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |