புளி குழம்பு வைப்பது எப்படி? | Puli Kulambu Seivathu Eppadi

Advertisement

புளி குழம்பு வைப்பது எப்படி தமிழில் | Puli Kuzhambu Seivathu Eppadi in Tamil

ஹலோ நண்பர்களே நாம் இன்றைய சமையல் குறிப்பு பகுதியில் புளி குழம்பு செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். பெரும்பாலான வீட்டில் வாரத்திற்கு ஏழு நாட்களில் ஓரிரு நாள் தான் அசைவம் இருக்கும், மற்ற நாட்களில் சைவம் தான் அதிலும் குறிப்பாக இரண்டு நாளில் சாம்பார், புளி குழம்பு கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் செய்து விடுவார்கள். ஒரு சிலருக்கு இந்த புளி குழம்பை எப்படி சுவையாக வைக்க வேண்டும் என்ற டிப்ஸ் தெரிந்திருக்கும், ஆனால் ஒரு சிலருக்கு எப்படி வைப்பது என்று தெரிந்திருக்காது. புளி குழம்பு செய்ய தெரியவில்லை என்றால் கீழே எப்படி சுவையாக புளி குழம்பு செய்யலாம் என்ற முழு ரெசிபியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை படித்து அனைத்து இல்லத்தரசிகளும் பயன் பெறுங்கள்.

தேவையான பொருட்கள்:

Puli Kuzhambu Seivathu Eppadi in Tamil

  • நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் – 6
  • கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
  • வெந்தயம் – கால் டேபிள் ஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 1 கப்
  • பூண்டு – 1 கை
  • கருவேப்பிலை – 1 கொத்து
  • இஞ்சி பூண்டு விழுது – அரை டேபிள் ஸ்பூன்
  • தக்காளி ஜூஸ் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு
  • மஞ்சள் தூள் – கால் டேபிள் ஸ்பூன்
  • மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
  • காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • புளிக்கரைசல் – 150 ml
  • வெல்லம் – 50 கிராம்
  • வெண்டைக்காய் – தேவையான அளவு (வேறு காய்கறிகளும் சேர்த்து கொள்ளலாம்)

செய்முறை:

Puli Kuzhambu Seivathu Eppadi in Tamil

ஸ்டேப்: 1

  • முதலில் ஒரு கடாயில் அரை லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி தேவையான அளவு நறுக்கிய வெண்டைக்காய் சேர்த்து வறுத்து கொள்ளவும் (வெண்டைக்காய்க்கு பதிலாக உருளை கிழங்கு, கருணை கிழங்கு, கத்தரிக்காய் அல்லது வேறு காய்கறிகளை சேர்த்து கொள்ளலாம்) வெண்டைக்காய் வறுத்து வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

  • பின் மற்றொரு கடாயில் 4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து அதில் 6 சிவப்பு மிளகாய் சேர்த்து வறுக்கவும். சிவப்பு மிளகாய் வறுத்த பிறகு 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

  • கடுகு பொரிந்த பிறகு கால் டேபிள் ஸ்பூன் வெந்தயம், 1 கை தோல் நீக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும். பூண்டு வதங்கிய பிறகு சின்ன வெங்காயம் 1 கப் சேர்த்து கோல்டன் பிரவுன் கலர் வரும் வரை வதக்கவும்.

ஸ்டேப்: 4

  • பின் அதில் 1 கொத்து கருவேப்பிலை, அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் அதில் தக்காளி ஜூஸ் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதன் பிறகு அதில் தேவையான அளவு உப்பு, கால் டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 5

  • பின் அதில் 150 ml புளிக்கரைசல் சேர்க்கவும். அதில் 50 கிராம் வெல்லம் சேர்க்கவும் (வெல்லம் விருப்பம் இருந்தால் சேர்க்கவும், இல்லையென்றால் சேர்க்க வேண்டாம்). இதை 5-7 நிமிடம் வரை கொதிக்க வைக்கவும் (குழம்பு கெட்டியாக இருந்தால் 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்)

ஸ்டேப்: 6

  • 5-7 நிமிடம் கழித்து வறுத்து வைத்த வெண்டைக்காய் சேர்த்து மிக்ஸ் செய்து 1 நிமிடம் கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவு தான் சுவையான புளிக்குழம்பு தயார்.
கல்யாண வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி?

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்
Advertisement