ஆரோக்கியமான ராகி பக்கோடா சுவையாக செய்யலாம் வாங்க.

Advertisement

ராகி பக்கோடா செய்வது எப்படி.?

ராகியை பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். ஆனால் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதாவது 100 கிராம் கேழ்வரகில் கால்சியம் 364 மில்லி கிராம், இரும்பு 4.62 மில்லி கிராம், மெக்னீசியம் 146 மில்லி கிராம், பாஸ்பரஸ் 210 மில்லி கிராம், பொட்டாசியம் 443 மில்லி கிராம், மாங்கனீசு 3.19 மில்லி கிராம், மற்றும் துத்தநாகம் 2.53 மில்லி கிராம் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்துள்ள ராகியை மிஸ் பண்ணலாமா..! வாங்க சூப்பரா Evening Snaks செய்யலாம்.

இதையும் படியுங்கள் ⇒ 10 நிமிடத்தில் மீந்துபோன சாதத்தை வைத்து சூப்பரான மாலை நேர ஸ்னாக்ஸ் செய்து பாருங்கள்

பக்கோடா செய்ய தேவையான பொருட்கள்: 

  1. கேழ்வரகு மாவு – 1 கப்
  2. வெங்காயம் – 1
  3. பொட்டுக்கடலை மாவு – 2 தேக்கரண்டி
  4. பச்சைமிளகாய் – 3
  5. பெருங்காயம் தூள் -சிறிதளவு
  6.  கறிவேப்பிலை -சிறிதளவு
  7. உப்பு -தேவையான அளவு
  8. எண்ணெய் – தேவையான அளவு

ராகி பக்கோடா எப்படி செய்வது.?

ராகி பக்கோடா செய்வது எப்படி

ஸ்டேப்:1

முதலில் வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் நறுக்கி கொள்ளவும்.

ஸ்டேப்:1

பின்பு ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், சிறிதளவு கறிவேப்பிலை  தேவையான அளவு உப்பு, சிறிதளவு பெருங்காய தூள் போன்றவை சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஸ்டேப்:3

பின்பு அதில் ராகி மாவு, பொட்டுக்கடலை மாவு போன்றவை சேர்த்து, மாவு கெட்டியாகும் பதத்திற்கு தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும்.

ஸ்டேப்:3

பின் அடுப்பை பற்ற வைத்து கொள்ளவும். பின் அதில் ஒரு கடாயை வைக்க வேண்டும். அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும்.

ஸ்டேப்:4

எண்ணெய் காய்ந்ததும் கலந்து வைத்துள்ள ராகி மாவை உதிரி உதிரியாக போட்டு பொரித்தெடுக்கவும்.

ஸ்டேப்:5

அவ்வளவு தாங்க சுவையான ராகி பக்கோடா தயார்..! ருசிக்கலாம் வாங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>  சமையல் குறிப்புகள்

 

Advertisement