சுவையான ரசமலாய் செய்வது எப்படி..!
பொதுவாக நம்ம வீட்ல செய்கின்ற ஸ்விட்ஸ் என்றாலே ஒரு தனி சுவை தான். அந்த வகையில் இன்னைக்கு நாம சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சுவையான ரசமலாய் செய்வது எப்படி என்று பார்ப்போம். இந்த ரசமலாய் செய்வது மிகவும் கடினமான வேலை என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர், இருந்தாலும் இந்த ரசமலாய் செய்முறை பொறுத்தவரை சில டிரிக்ஸ் இருக்கு, அப்படி செய்தாலே போதும் இந்த ரசமலாய் மிக எளிமையாக செய்துவிட முடியும்.
சைனீஸ் ஸ்பெஷல் டிராகன் சிக்கன் செய்வது எப்படி? |
சரி வாங்க எளிமையான முறையில் ரசமலாய் செய்வது எப்படி என்று இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
சுவையான ரசமலாய் செய்வது எப்படி..!
தேவையான பொருட்கள்:
- முழு கொழுப்பு பால் – ஒரு லிட்டர்
- எலுமிச்சை பழம் – இரண்டு
- சோள மாவு – ஒரு தேக்கரண்டி
- தண்ணீர் – 4 கப்
- சர்க்கரை – ஒரு கப்
- ஏலக்காய் – 1/2 தேக்கரண்டி
- பால் – 500 மில்லி
- குங்குமப்பூ – சிறிதளவு.
- சர்க்கரை – 1/4 கப்
- பாதாம் மற்றும் பாஸ்தா – தேவையான அளவு.
சுவையான ரசமலாய் செய்வது எப்படி..!
ரசமலாய் செய்முறை ஸ்டேப் 1:
பாத்திரத்தில் முக்கால் லிட்டர் பாலை ஊற்றி சுண்ட காய்ச்சவும்.
பால் நன்றாக சுண்டியதும், அதில் இரண்டு எலுமிச்சை பழத்தின் சாறை ஊற்றி பாலை திரிய விடவும்.
ரசமலாய் செய்முறை ஸ்டேப் 2:
பால் திரிந்ததும் இறக்கி வைத்து ஒரு வடிகட்டியில் துணி விரித்து அவற்றில் திரிந்த பாலை ஊற்றி, இரண்டு முறை தண்ணீர் ஊற்றி அலச வேண்டும். பின்பு அந்த துணியிலேயே தண்ணீரை முழுவதுமாக வடித்து விடவும். அதாவது 15 நிமிடங்கள் வரை இறுக்கமாக கட்டி வைத்திருந்தால், இந்த பன்னீரில் இருக்கும் தண்ணீர் முழுவதும் வடிந்து விடும்.
ரசமலாய் செய்முறை ஸ்டேப் 3:
15 நிமிடம் கழித்து தண்ணீர் வடிந்த பின்னர் தயாராக எடுத்துக் கொள்ளவும். ரசமலாய் செய்ய பன்னீர் தயார். இந்த பன்னீரில் ஒரு ஸ்பூன் சோளமாவு சேர்த்து சிறிது நேரம் வரை பிசைய வேண்டும். பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வேண்டிய வடிவங்களில் தட்டி வைக்கவும்.
ரசமலாய் செய்முறை ஸ்டேப் 4:
பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் நான்கு கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும், தண்ணீர் நன்றாக கொதித்ததும், ஒரு கப் சர்க்கரை சேர்க்க வேண்டும். சர்க்கரை நன்றாக கரைந்ததும், உருட்டி வைத்துள்ள பன்னீர் உருண்டைகளை சேர்த்து 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். பின்பு அடுப்பில் இருந்து இறக்கி பன்னீர் உருண்டைகளை, ஒரு பவுலில் எடுத்து அவற்றில் தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.
ரசமலாய் செய்முறை ஸ்டேப் 5:
இப்போது ரசமலாயை பாலில் ஊறவைக்க ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் பாலை ஊற்றி காய்ச்சவும். அதில் ஏலக்காய் பொடி, குங்குமப் பூ, சீனி சேர்த்து கலக்கவும். மிதமான தீயில் காய்ச்சவும்.
ரசமலாய் செய்முறை ஸ்டேப் 6:
பால் நன்கு காய்ந்ததும் அதில் தயார் செய்து வைத்திருக்கும் பன்னீர் உருண்டைகளை போட்டு மூடி விடவும். 5 நிமிடம் கழித்து திறந்து மெதுவாக உடைந்து போகாமல் கிளறவும். இப்போது சுவையான ரசமலாய் ரெடி. பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கி வைக்கவும்.
ரசமலாயை தனியாக கிண்ணத்தில் போட்டு ஃப்ரிட்ஜ்சில் 6 மணி நேரம் வைத்து ஜில் என்றும் சாப்பிடலாம் சுவை கூடுதலாக இருக்கும்.
வாழைப்பழ கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..! |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சுவை சுவையான சமையல் குறிப்புகள்!!! |