1/2 கப் ரவை போதும் மிருதுவான ரசகுல்லா செய்வது எப்படி..?

Advertisement

ரவையில் ரசகுல்லா செய்வது எப்படி..? 

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பார்க்கப்போவது நாம் அனைவருக்கும் பிடித்த மிருதுவான ரசகுல்லா செய்வது எப்படி..? என்பதை பற்றித் தான். அதுவும் நமது வீட்டில் உள்ள 1/2 கப்  ரவையை வைத்து ரசகுல்லா செய்வது எப்படி.? என்பதை பார்க்கலாம். பொதுவாக பாலை மட்டும் வைத்துதான் ரசகுல்லா செய்திருப்போம். ஆனால்  ரவையை வைத்து ரசகுல்லா செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த பதிவில் கூறியிருப்பது போல் ஒருமுறை ரசகுல்லா  செய்து பாருங்கள் மீண்டும் மீண்டும் செய்து சுவைப்பீர்கள். பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

தேவையான பொருட்கள் : 

  1. ரவை – 1/2 கப் 
  2. பால் – 4 கப் 
  3. சர்க்கரை – 1 1/2 கப் 
  4. நெய் – 5 டேபிள் ஸ்பூன் 
  5. தண்ணீர் – 1 1/4 கப் 
  6. குங்குமப்பூ – 1 சிட்டிகை 
  7. ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன் 
  8. கேசரி பவுடர் – 1/4 டீஸ்பூன் 

செய்முறை:

rava recipes for snacks

ஸ்டேப் – 1:

முதலில் அடுப்பை பற்றவைத்து அதில் ஒரு அடிகனமான கடாயை வைத்து அதில் 4 டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் ஊற்றி அதில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1/2 கப் ரவையை சேர்த்து நன்கு அதனுடைய பச்சை வாசம் போகின்ற அளவிற்கு வறுக்கவும்.

ஸ்டேப் – 2:

பின்னர் இதனுடன் 4 கப் பாலை சேர்த்து நன்கு கலந்துவிடவும் பாலில் ரவை நன்கு வெந்து திரண்டு வரும்பொழுது அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் சர்க்கரையில் இருந்து 1/2 கப் மட்டும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். இவை நன்கு வெந்து திரண்டு வரும் சமயத்தில் 1 டேபிள் ஸ்பூன் நெய்யை ஊற்றி கலந்துவிட்ட பிறகு அடுப்பிலிருந்து இறக்கி அதனை ரசகுல்லா உருண்டைகள் உருட்டும் மாவுப்பதத்திற்கு வரும் வரை ஆறவிடுங்கள்.

ஸ்டேப் – 3:

இப்பொழுது அடுப்பில் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் 1 கப் சர்க்கரையை சேர்த்து அதில் 1 1/4 கப் தண்ணீரை ஊற்றி அதில் உள்ள சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும்.

ஓரளவு கொதித்து ரொம்ப தண்ணீராகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாக சர்க்கரை பாகுபோலவும் இல்லாமல் ரசகுல்லாவை போட்டு வைக்கக்கூடிய ஜீரா போல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 1/4 டீஸ்பூன் கேசரி பவுடர், 1/4 டீஸ்பூன் ஏலக்காய்தூள் மற்றும் 1 சிட்டிகை குங்குமப்பூ சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.

ஸ்டேப் – 4:

rasgulla recipe in tamil

சர்க்கரை ஜீரா நன்கு கொதித்து கொண்டிருக்கும் நேரத்தில் நாம் முன்பு தயார் செய்து வைத்து இருந்த ரசகுல்லா மாவை நன்கு பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொதித்துக் கொண்டிருக்கும் சர்க்கரை ஜீராவில் போட்டு 4-5 நிமிடத்திற்கு நன்கு கொதிக்கவிட்டு பின்னர் அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். 1 மணிநேரத்திற்கு நமது ரசகுல்லாவை அந்த சர்க்கரை ஜீராவில் ஊறவிடுங்கள் அதன் பிறகு அதனை எடுத்து அனைவருக்கும் பரிமாறலாம்.

இப்பொழுது சுவையான மற்றும் மிருதுவான ரவை ரசகுல்லா ரெடி வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இந்த ரவை ரசகுல்லாவை செய்து சுவைத்து பாருங்கள்.

இதையும் பாருங்கள் => 1 கப் ரவை இருக்கா அப்போ இந்த மாதிரி குலாப்ஜாமூன் செய்து பாருங்க

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal

 

Advertisement