காய்கறி இல்லாத இட்லி சாம்பார்
நண்பர்களே வணக்கம் ராயல சீமா சாம்பார் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்…! சாம்பார் என்றால் காய்கறிகள் தான் முக்கியம் அதுவும் இட்லி சாம்பார் என்றால் காய்கறிகள் இல்லாமல் பெண்கள் யாரும் சாம்பார் வைக்க மாட்டார்கள். ஆனால் இனி கவலை வேண்டாம் வீட்டில் எந்த காய்கறிகளும் இல்லையென்றாலும் சூப்பரான சாம்பார் செய்யலாம் வாங்க அது எப்படி என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
- துவரம் பருப்பு – 1 கப்
- எண்ணெய் – 200 கிராம்
- சின்ன வெங்காயம் – 20
- சீரகம்- 1 ஸ்பூன்
- மிளகாய் – 8
- மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்
- ஊறவைத்த புளி – எலுமிச்சை அளவு
- நெய் – 1 ஸ்பூன்
- பூண்டு – 4 இடித்தது
- கடுகு – 1 ஸ்பூன்
- உளுத்தப்பருப்பு – 1 ஸ்பூன்
- கடலை பருப்பு – 1 ஸ்பூன்
- கருவேப்பிலை, கொத்தமல்லி – கொத்து
- சீரகம் – 1 ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- உப்பு – தேவையான அளவு
இதையும் படியுங்கள் ⇒ சின்ன வெங்காய சாம்பார் இப்படி செய்து பாருங்கள்.!
ஸ்டேப்: 1
முதலில் கடாயை எடுத்துக்கொள்ளவும் அதில் சிறிதளவு எண்ணெய் ஊறிக்கொள்ளவும் அதன் பின் அதில் துவரம்பருப்பை சேர்க்கவும் அதனை நன்கு வறுக்கவும்.
ஸ்டேப்: 2
பின்பு அதன்கூடவே சின்ன வெங்காயம் – 20, சீரகம்- 1 ஸ்பூன், மிளகாய் – 8, மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன், ஊறவைத்த புளி – எலுமிச்சை அளவு சேர்த்து அனைத்தையும் நன்கு வதக்கிக்கொள்ளவும்.
இதையும் படியுங்கள் ⇒சாம்பார் பொடி செய்வதற்கு தேவையான பொருட்களின் அளவுகள் தெரியுமா.?
ஸ்டேப்: 3
அடுத்து குக்கரை எடுத்து அதில் வதங்கி வைத்த அனைத்தையும் சேர்த்து அத்துடன் பருப்புக்கு ஏற்ற தண்ணீரை ஊற்றி மூடி வைத்து 5 விசில் விடவும்.
ஸ்டேப்: 4
பின்பு அதனை திறந்து பருப்பை கடைந்து தனியாக வைக்கவும்.
ஸ்டேப்: 5
கடைசியாக கடாயை எடுத்து அதில் நெய் ஊற்றி கடுகு – 1 ஸ்பூன், உளுத்தப்பருப்பு – 1 ஸ்பூன், கடலை பருப்பு – 1 ஸ்பூன், சீரகம் – 1 ஸ்பூன் பொரிந்த பின் அதில் கருவேப்பிலையை போட்டு பொரிந்தவுடன் பெருங்காயம் சேர்த்து கொள்ளவும், கடைசியாக கடைந்து வைத்த பருப்பை எடுத்து அதனுடன் சேர்த்து கலந்து விடவும் கடைசியாக உப்பு கொத்தமல்லி சேர்த்து கலந்து விட்டு இறக்கிவிடவும்.
செய்து பாருங்கள் 👉👉 கோவில் ஸ்டைலில் சாம்பார் சாதம் செய்வது எப்படி.?
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | samayal kurippugal in tamil |