இனி வீட்டிலே செய்யலாம் ரெட் வெல்வெட் கேக்..! Red Velvet Cake Recipe..!

Advertisement

ரெட் வெல்வெட் கேக் செய்வது எப்படி..! How To Make Homemade Red Velvet Cake..!

How To Make Red Velvet cake: ஹாய் ஃப்ரண்ட்ஸ் இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ரெட் வெல்வெட் கேக் வீட்டிலே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த ரெட் வெல்வெட் கேக்கை பலரும் கடைகளில் மட்டும்தான் வாங்கி சாப்பிட முடியும் என்று பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் இருந்தபடியே தங்கள் குழந்தைக்கு ரெட் வெல்வெட் கேக் எப்படி செய்து கொடுக்கலாம்னு  இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துகொள்ளுங்கள். சரி வாங்க இப்போது இந்த ரெட் வெல்வெட் கேக் எப்படி செய்யலாம் அதற்கு தேவையான பொருள்கள் என்னென்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..!

newசுவையான சாக்லேட் கேக் செய்வது எப்படி? Cake recipe without oven in tamil

ரெட் வெல்வெட் கேக் – தேவையான பொருட்கள்:

  1. All Purpose Flour – 2 1/2 கப் 
  2. கோகோ பவுடர் – 2 டேபிள் ஸ்பூன் 
  3. பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன் 
  4. உப்பு – 1 டீஸ்பூன் 
  5. வெண்ணெய் – 1/2 கப் 
  6. சர்க்கரை – 1 1/2 கப் 
  7. முட்டை – 2
  8. Vegetable Oil – 1 கப் 
  9. வினிகர் – 1 டீஸ்பூன் 
  10. பட்டர் மில்க் – 1 கப் 
  11. வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்ஸ் – 2 டீஸ்பூன் 
  12. ரெட் புட் கலர் – 1 டேபிள் ஸ்பூன் 
  13. கிரீம் சீஸ் – 2 கப் 
  14. பவுடர்ட் சுகர் – 1 1/2 கப் 

ரெட் வெல்வெட் கேக் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:

How To Make Red Velvet cake

முதலில் ஒரு பவுலில் All Purpose Flour மாவினை 2 1/2 கப் அளவிற்கு எடுத்து கொள்ளவும். இதனுடன் கோகோ பவுடர் 2 டேபிள் ஸ்பூன் அளவு சேர்த்துக்கொள்ளவும். அடுத்து பேக்கிங் சோடா 1 டீஸ்பூன், உப்பு 1 டீஸ்பூன் அளவிற்கு எடுத்து நன்றாக சல்லடையில் சலித்து எடுத்துக்கொள்ளவும். சல்லடையில் சலித்ததை கிளறி விடவேண்டும்.

ரெட் வெல்வெட் கேக் செய்முறை விளக்கம் 2:

How To Make Red Velvet cake

இப்போது தனியாக ஒரு பவுலில் வெண்ணை 1/2 கப், சர்க்கரை 1 1/2 கப்  எடுத்துக்கொள்ளவும். இதனை பீட்டரால்(Hand Beater) நன்றாக மசித்து கொள்ளவும். அடுத்து இதில் முட்டை இரண்டு சேர்த்து பீட்டரால் மசித்துக்கொள்ள வேண்டும்.

வீட்டிலே செய்யலாம் ரெட் வெல்வெட் கேக் செய்முறை விளக்கம் 3:

How To Make Red Velvet cake

முட்டையை பீட்டரால் நன்றாக மசித்த பிறகு vegetable ஆயில் 1 கப் அளவிற்கு சேர்த்து hand beater-ஆல் மிக்ஸ் செய்துகொள்ளவும். நன்றாக மிக்ஸ் செய்த பிறகு வினிகர் 1 டீஸ்பூன், பட்டர் மில்க் 1 கப் சேர்த்து பீட்டரால் மிக்ஸ் செய்யவும்.

ரெட் வெல்வெட் கேக் எப்படி செய்வது செய்முறை விளக்கம் 4:

இப்போது முட்டை, வினிகர், பட்டர் மில்க் கலவையில் சேர்க்க வேண்டியது சலித்து வைத்த மாவினை சேர்த்து Hand Beater-ல் மிக்ஸ் செய்யவும். அடுத்து வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்ஸ் 2 டீஸ்பூன், ரெட் புட் கலர் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து பீட்டரில் மிக்ஸ் செய்துகொள்ள வேண்டும்.

சுவையான ரெட் வெல்வெட் கேக் செய்ய செய்முறை விளக்கம் 5:

How To Make Red Velvet cake

நன்றாக கலந்த பிறகு 20 cm அகலமான Cake Tin-ல் மிக்ஸ் செய்ததை நன்றாக குலுக்கிய பிறகு ஊற்றவும். இதை ஓவனில் 350F (175 செல்ஸியசில்) 35 அல்லது 40 நிமிடம் வேகவைக்கவும். வேகவைத்து வெளியில் எடுத்த பின் Wire Rack-ல் வைத்து 10 நிமிடம் கூல் செய்து கேக்கை எடுக்கவும்.

newஅடுப்பில் கேக் செய்வது எப்படி? தெளிவான செய்முறை விளக்கம்..!

கேக் கிரீம் தயாரிக்க – தேவையான பொருட்கள்:

  1. கிரீம் சீஸ் – 2 கப் 
  2. பவுடர்ட் சுகர் – 1 1/2 கப் 
  3. வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்ஸ் – 1 டீஸ்பூன் 
  4. Heavy Cream – 1 1/4 கப் 

கிரீம் செய்வதற்கு செய்முறை விளக்கம் 1:

How To Make Red Velvet cake கிரீம் செய்வதற்கு ஒரு பவுலில் கிரீம் சீஸ் 2 கப், பவுடர்ட் சுகர் 1 1/2 கப், வெண்ணிலா எக்ஸ்ட்ராக்ட்ஸ் 1 டீஸ்பூன் சேர்த்து Hand Beater-ல் நன்றாக மிக்ஸ் செய்யவும்.

ரெட் வெல்வெட் கேக் கிரீம் தயாரிக்க செய்முறை விளக்கம் 2:

How To Make Red Velvet cake தனியாக ஒரு பவுலில் Heavy Cream 1 1/4 கப் அளவிற்கு எடுத்து hand Beater ஆல் கலக்கவும். ரெடி செய்த சீஸ் கிரீமை இந்த பவுலில் சேர்த்து கலந்துகொள்ளவும். கிரீம் ரெடி.

ரெட் வெல்வெட் கேக் செய்முறை விளக்கம் 3:

How To Make Red Velvet cake இப்போது Wire Rack-ல் இருந்து எடுத்த கேக்கை மேல் பகுதியை கட் செய்துகொள்ளவும். கட் செய்த பகுதியில் உங்களுக்கு எந்த வடிவில் டிசைன் வேண்டுமோ அதுபோன்று கட் செய்யவும். கட் செய்து மீதம் கேக் துகள்களை உதிர்த்துவிட்டு பவுலில் தனியாக வைத்துக்கொள்ளவும்.

ரெட் வெல்வெட் கேக் (red velvet cake recipe in tamil) எப்படி செய்வது செய்முறை விளக்கம் 4:

How To Make Red Velvet cake

இப்போது இரண்டு பகுதியாக வெட்டிய கேக்கை முதல் பகுதியை எடுத்து செய்துவைத்துள்ள கிரீமை தடவவும். கிரீம் தடவிய பிறகு இரண்டாவது கேக் லேயரை கிரீம் மேல் வைக்கவும். அதன் மேல் மற்றும் சுற்றிலும் கிரீமை தடவிவிட வேண்டும்.

சுவையான ரெட் வெல்வெட் கேக் செய்ய செய்முறை விளக்கம் 5:

How To Make Red Velvet cake

இப்போது தனியாக எடுத்துவைத்துள்ள கேக் துகள்களை கேக்கின் சுற்றியுள்ள பகுதியில் வைக்கவும். கிரீம் மேல் பகுதியில் உங்களுக்கு தேவைப்படும் வடிவில் கட் செய்ததை கிரீம் மேல் வைக்கவும். கிரீம் மேல் வைத்த பிறகு ஃப்ரிட்ஜில் 2 அல்லது 3 மணிநேரம் வைக்கவும். அவ்ளோதாங்க அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெட் வெல்வெட் கேக் ரெடி. எல்லாரும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க நன்றி வணக்கம்..!

newபிளம் கேக் செய்வது எப்படி?..! Plum cake recipe in tamil..!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement