அரிசி மாவில் சுவையான ஸ்வீட் செய்வது எப்படி? Rice Flour Sweet Recipes In Tamil..!
அரிசி மாவு ஸ்நாக்ஸ்: ஹலோ ஃப்ரண்ட்ஸ்..! இன்றைய பொதுநலம் பதிவில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய அரிசி மாவில் சுவையான ஸ்வீட் (Rice Flour Sweet Snacks) வீட்டிலே எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க..!
![]() |
அரிசி மாவில் ஸ்வீட் செய்ய – Arisi maavu sweet recipes in tamil -தேவையான பொருட்கள்:
- அரிசி மாவு – 1 கப்
- பால் – 1 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- தேங்காய் துருவல் – 1/2 கப்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 1:
Rice Flour Sweet: முதலில் அரிசி மாவு 1 கப் எடுத்துக்கொள்ளவும். அடுத்து இந்த ரெசிபி ரெடி பண்ண கடாயில் 1 கப் பால் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
பால் சுவை பிடிக்காதவர்கள் தண்ணீர் கூட சேர்த்துக்கொள்ளலாம்.
இந்த பால் மிதமான அளவிற்கு சூடு வந்தால் போதும். அதன்பிறகு பாலுடன் சர்க்கரை 1/2 கப் சேர்த்து மிதமான சூட்டில் வைத்து நன்றாக கிளற வேண்டும்.
அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 2:
Rice Flour Sweet: அடுத்து தேங்காய் துருவல் 1/2 கப், பாலுடன் சேர்த்து நன்றாக கிளறிக்கொள்ள வேண்டும்.
அடுத்து வாசனைக்காக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்.
ஏலக்காய் தூள் சேர்த்தபிறகு இதனையும் நன்றாக கிளற வேண்டும்.
அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 3:
அரிசி மாவு ரெசிபி: அடுத்து அந்த பாலில் எடுத்துவைத்துள்ள அரிசி மாவை இதனுடன் சேர்க்க வேண்டும். மிதமான சூட்டில் வைத்தே இதை நன்றாக கிளறிவிட வேண்டும்.
அடுத்து நன்றாக கிளறிய பிறகு அடுப்பை நிறுத்தி கொள்ளலாம். 1 மணி நேரம் இதை மூடிவைக்க வேண்டும். நன்றாக ஆறியபின் தனியாக ஒரு பவுலில் மாற்றிக்கொள்ளவும்.
அடுத்து இந்த மாவை சப்பாத்தி மாவின் பதம் போல் நன்றாக பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 4:
அரிசி மாவு ரெசிபி: அடுத்து சப்பாத்தி மாவின் பதம் போல் வந்த பிறகு உருண்டையாக உருட்டி அதை தட்டி கொள்ளவும்.
மாவை உருண்டை வடிவில் தட்டிய பிறகு பாத்திரத்தின் மூடி அல்லது குக்கி கட்டரால் கட் செய்துகொள்ளவும்.
எல்லா மாவையும் இதே போல் செய்து தனியாக ஒரு தட்டில் எடுத்துவைத்து கொள்ளவும்.
![]() |
அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 5:
அரிசி மாவு ஸ்நாக்ஸ்: அடுத்து இந்த அரிசி மாவில் நட்ஸ் வகைகளையும் சிறிதாக நறுக்கி சேர்த்து செய்தால் இன்னும் சுவை கிடைக்கும்.
இப்போது தனியாக தட்டில் எடுத்து வைத்ததை வேக வைக்க வேண்டும்.
அதற்கு தனியாக ஒரு கடாயில் 2 கப் அளவிற்கு தண்ணீர் எடுத்து கொண்டு உள்ளே ஒரு ஸ்டாண்ட் வைத்துக்கொள்ளவும்.
அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 6:
Rice Flour Sweet Dish: ஸ்டாண்ட் இல்லாத பட்சத்தில் வீட்டில் இருக்கும் இட்லி பாத்திரம் கூட பயன்படுத்தலாம்.
அடுத்து இந்த ஸ்வீட்டின் மேல் ஆவி நீர் பட்டால் ஸ்வீட்டானது வீணாகி விடும்.
அதனால் மூடியின் மேல் துணியை கட்டி மூடிவைக்க வேண்டும். அப்போதுதான் ஆவி நீர் ஸ்வீட் மேல் விழாது.
அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 7:
Rice Flour Sweet Dish: துணியை கட்டி மூடியபிறகு மிதமான சூட்டில் 2 நிமிடம் வேகவைக்க வேண்டும்.
அரிசி மாவு ஏற்கனவே நன்றாக வெந்ததனால் இப்போது 2 நிமிடம் வேகவைத்தால் போதும்.
2 நிமிடம் வேகவைத்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கிக்கொள்ளலாம்.
அடுத்ததாக சிறிதளவு தேங்காய் துருவி வைத்துக்கொள்ளவும்.
அரிசி மாவில் ஸ்வீட் செய்வது எப்படி செய்முறை விளக்கம் 8:
Rice Flour Sweet Snacks: பின் வேக வைத்த கேக்கை தேங்காய் துருவலில் போட்டு கேக்கின் இரண்டு பகுதியிலும் தொட்டு எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து கேக் அழகாக தெரிவதற்கு பிஸ்தாவை கேக்கின் மேல் வைக்கவும்.
அவ்ளோதாங்க இந்த அரிசி மாவு கேக் ரெடி. அரிசி மாவில் செய்த மாறியே இருக்காது அவ்ளோ ஒரு சுவையான ரெசிபி இது. கண்டிப்பா எல்லாரும் உங்க வீட்டுல ட்ரை பண்ணி பாருங்க.
குறிப்பு:
இந்த ரெசிபியை காலை உணவாக, இரவு உணவாக, மாலை நேர தின்பண்டங்களாக கூட இதை சாப்பிடலாம்.
இந்த கேக்கை ஃப்ரிட்ஜில் 1 வாரத்திற்கு கூட வெச்சி சாப்பிடலாம். வீணாகின்ற தன்மை கிடையாது.
கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க ஃப்ரண்ட்ஸ்.
நன்றி வணக்கம்…
![]() |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |