ரேஷன் அரிசியில் அல்வா
வணக்கம் பொதுநலம்.காம் நேயர்களே..! இன்று நாம் பார்க்கப்போகும் ரெஸிபி ரேஷன் அரிசியில் அல்வா. நம் அனைவரின் வீட்டிலேயும் ரேஷன் அரிசியை இட்லி மாவு,தோசை மாவு அறைக்கத்தான் பெரும்பாலும் பயன் படித்திருப்போம் ஆனால் அந்த ரேஷன் அரிசியை பயன்படுத்தி அல்வா செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்..! வாங்க பதிவினுள் செல்லலாம்.
தேவையான பொருட்கள்:
ரேஷன் அரிசி அல்வா செய்வதற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.
- ரேஷன் அரிசி – 1 கப்
- தேங்காய்ப்பால் – 4 கப்
- பிரிஞ்சி இலை – 2 இலை
- ஏலக்காய்தூள் – 1/4டீஸ்பூன்
- நாட்டுச்சர்க்கரை – 1 கப்
- நெய் – 3 டீஸ்பூன்
- முந்திரி – 6
- உலர்திராட்சை – 6
- பாதாம் – 6
- பிஸ்தா – 6
செய்முறை:
ஸ்டேப் -1
முதலில் ஒரு பாத்திரத்தில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1 கப் ரேஷன் அரிசியை எடுத்து நன்றாக தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்து அதனை 1 மணிநேரம் ஊறவைக்க வேண்டும்.
ஸ்டேப் -2
பிறகு ஒரு அடிக்கான பாத்திரத்தில் நாம் ஊறவைத்திருக்கும் 1 கப் ரேஷன் அரிசியை சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 4 கப் தேங்காய்ப்பாலில் 3 கப் அளவிற்கு சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 2 பிரிஞ்சி இலையையும் சேர்த்து நன்கு வேகவிடவும்.
ஸ்டேப் -3
அரிசி வெந்துகொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு பாத்திரத்தில் 1 கப் நாட்டுச்சர்க்கரை மற்றும் 1 கப் தேங்காய்ப்பாலை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்.
ஸ்டேப் -4
இப்பொழுது நாம் வேகவைத்த ரேஷன் அரிசி தேங்காய்ப்பாலை நன்றாக உள்வாங்கி நன்றாக வெந்திருக்கும். அதனுடன் நாம் கொதிக்கவைத்திருக்கும் தேங்காய்ப்பால் நாட்டுச்சர்க்கரை கலவையை வடிகட்டி சேர்த்து கொள்ளவும்.இந்த கலவை நன்றாக குலைந்து வெந்து திரண்டு வரும் அந்த நேரத்தில் நாம் எடுத்து வைத்திருந்த நெயில் 2 டீஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்துவிடவும்.
ஸ்டேப் -5
இந்த கலவை வெந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய்யை சேர்த்து அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் 6 முந்திரி,6 உலர்திராட்சை,6 பாதாம்,6 பிஸ்தா இவையெல்லவற்றையும் ஒன்றுமிரண்டுமாக உடைத்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஸ்டேப் -6
இப்பொழுது நாம் வேகவைத்திருந்த ரேஷன் அரிசி தேங்காய்ப்பால்,நாட்டுச்சர்க்கரை கலவை நன்றாக வெந்திருக்கும். அதனுடன் நாம் வறுத்து வைத்திருந்த முந்திரி,உலர்திராட்சை,பாதாம்,பிஸ்தா இவற்றையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்துவிட்டு இறக்கி வைத்துவிடவும்.
நம்முடைய ரேஷன் அரிசி அல்வா ரெடி வாங்க சுவைக்கலாம்..! நீங்களும் இதை செய்து சுவைத்து பாருங்கள்.
தர்பூசணி தோலில் அல்வா செய்வது எப்படி ..!| Watermelon skin halwa recipe in tamil |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |