ருசியான தக்காளி கொத்சு செய்ய தெரியுமா.?

Advertisement

தக்காளி கொத்சு

ஹாய் நண்பர்களே..! இன்றைய சமையல் குறிப்பில் ருசியான தக்காளி கொத்சு செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். சமையலுக்கு தக்காளி மிகவும் முக்கியமான ஒரு பொருள். அந்த தக்காளியில் நிறைய ரெசிபிகள் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் தக்காளி தொக்சு சாப்பிடாதவர்களுக்கு இன்றைய பதிவு பயனுள்ளதாக இருக்கும். சமைக்கும் தாய்மார்களுக்கு இந்த ரெசிபி கொஞ்சம் புதியதாக இருக்கும். இந்த தக்காளி தொக்ஸை இட்லி, தோசை, பொங்கல், சப்பாத்தி இவை அனைத்திற்கும் சைடிஷாக சாப்பிடலாம்.

தக்காளி இல்லாமல் சட்னி செய்வது எப்படி?

தக்காளி கொத்சு செய்ய தேவையான பொருட்கள்:

  •  நறுக்கிய தக்காளி- 7
  • தேங்காய் துருவல்- 1/4 கப் 
  • பாசி பருப்பு- 100 கிராம் 
  • சோம்பு- 1 தேக்கரண்டி 
  • கடுகு- 1 தேக்கரண்டி 
  • கடலை பருப்பு- 1 தேக்கரண்டி 
  • மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி 
  • நறுக்கிய வெங்காயம்- 1
  • பச்சை மிளகாய்- 5
  • மிளகாய் தூள்- 1 தேக்கரண்டி 
  • எண்ணெய்- தேவையான அளவு 
  • உப்பு- தேவையான அளவு 

தக்காளி கொத்சு செய்முறை விளக்கம்:

ஸ்டேப்- 1

முதலில் ஒரு மிக்சிஜாரில் துருவிய தேங்காய் மற்றும் 1 தேக்கரண்டி சோம்பு சேர்த்து நன்றாக கெட்டியாக அரைத்து தனியாக வைக்க வேண்டும். அடுத்தாக அடுப்பை பற்ற வைத்து அதில் குக்கரை வைத்து குக்கரில் பாசி பருப்பு 100 கிராம் , கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து 2 விசில் விட்டு நன்றாக வேகா வைத்து தனியாக வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்- 2

அடுத்ததாக அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்த உடன் எடுத்து வைத்துள்ள கடுகு, கடலை பருப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கருவேப்பிலை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

ஸ்டேப்- 3

அதன் பிறகு நறுக்கிய தக்காளியை அடுப்பில் வதக்கி வைத்திருக்கும் பொருட்களுடன் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வதங்கிய பிறகு மஞ்சள் தூள் சேர்த்து தக்காளியை நன்றாக மசித்து விடுங்கள். வெங்காயம், தக்காளியில் இருந்து தண்ணீர் விடும் அதன் பிறகு 1/4 தேக்கரண்டி மிளகாய் தூள் சேர்த்து 2 நிமிடம் அப்படியே வேக விடுங்கள்.

ஸ்டேப்- 4

மிளகாய் தூள் சேர்த்து வெந்த பிறகு அடுத்ததாக வேக வைத்துள்ள பாசி பருப்பு, அரைத்து வைத்துள்ள தேங்காயை இதனுடன் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 4-லிருந்து 5 நிமிடம் வரை கொதிக்க விடுங்கள். கொதித்து முடிந்தவுடன் கொத்தமல்லி இலையை அதன் மேல் தூவிவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான் சுவையான தக்காளி கொத்சு தயார்.

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement