சுவையிலும் சரி, சத்திலும் சரி இந்த சட்னியை அடிச்சுக்க முடியாது..

Advertisement

உளுந்து சட்னி செய்வது எப்படி.?

இட்லி,தோசைக்கு சாம்பார், பொடி அல்லது சட்னி ஏதவது இருந்தால் தான் சாப்பிட முடியும். ஒரே மாதிரி சட்னி செய்து சாப்பிடாமல் வித்தியாசமாக சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்களுக்கெல்லாம் உதவும் வகையில் இன்றைய பதிவில் சுவையும், சத்தும் நிறைந்த உளுந்து சட்னி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

உளுந்து சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • உளுந்து – 4 தேக்கரண்டி
  • காய்ந்த மிளகாய் – 5
  • எண்ணெய் – 2 தேக்கரண்டி
  • கடுகு – 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • வெங்காயம்- 2
  • தக்காளி-2

உளுந்து சட்னி செய்முறை:

ulunthu chutney recipe in tamil

அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் சூடானதும் 4 தேக்கரண்டி உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து சிவந்த நிறம் வந்ததும் தனியாக எடுத்து கொள்ளவும்.

பின் அதிலே காய்ந்த மிளகாய் சேர்த்து தனியாக வதக்கி எடுத்து கொள்ளவும்.

ஒரு முறை கடலை பருப்பு சட்னியை இப்படி செய்து பாருங்க..

பிறகு நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கி கொள்ளவும். வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும், நறுக்கி வைத்த தக்காளி 2 சேர்த்து வதக்கி கொள்ளவும். தக்காளி சுருங்கிய பதம் வர வரைக்கும் வதக்க வேண்டும்.

வதக்கிய பொருட்கள் ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்து கொள்ளவும்.

தாளிப்பதற்கு அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி  சூடானதும், கடுகு சேர்க்கவும், கடுகு பொரிந்ததும், உளுத்தப்பருப்பு, கருவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்த சட்னியை சேர்க்கவும்.

செட்டிநாடு ஸ்பெஷல் காரா சட்னி வெறும் 2 நிமிடத்தில் ருசியாக செய்யலாம் வாங்க..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal Kurippugal
Advertisement