வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உளுந்து சாதம் செய்வது எப்படி.?

Updated On: October 21, 2024 5:38 PM
Follow Us:
urad dal rice recipe in tamil
---Advertisement---
Advertisement

உளுந்தோரை சாதம் செய்முறை | Urad Dal Rice Recipe in Tamil

என்னதான் வித்தியசமான சமையல் செய்து சாப்பிட்டாலும் கோவில் சாப்பாடுக்கு தனி ருசிதான். அதுவும் பெருமாள் கோவிலில் கொடுக்கும் சாதத்திற்கு என்றும் தனி பெரும் ருசி உள்ளது. பெரும்பாலும் அவர்கள் என்ன சேர்த்து சாதம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் அந்த ரகசியத்தை இப்போது உங்களுக்கு சொல்லிக்கொடுக்க போகிறேன்.

இன்று நாம் ஐயர் வீட்டில் செய்யும் அருமையான உணவை எப்படி செய்கிறது என்பதை தெரிந்துகொள்ள போகிறோம். அதேபோல் கோவிலில் வித்தியாசமான நிறத்தில் அதாவது காபி தூள் நிறத்தில் இருக்கும். அது என்ன சாதம் அந்த சாதத்தின் செய்முறையை பற்றி பார்ப்போம்..!

Ulundhu Sadam in Tamil:

உளுந்தோரை சாதம் செய்முறை:

  • உளுத்தம் பருப்பு – 3 டீஸ்பூன்
  • சிவப்பு மிளகாய் – 5 மிளகாய்
  • மிளகு – 1/4 டீஸ்பூன்
  • சீரகம் – 1/4 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • வேர்க்கடலை – கொஞ்சம்

குறிப்பு: 1  இதில் நெய், முந்திரி சேர்த்துக்கொள்ளலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 உளுந்து களி நன்மைகள் 

செய்முறை: 1

 உளுந்தோரை சாதம் செய்முறை

  • அடுப்பை பற்றவைத்து கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு 3 ஸ்பூன் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து கொள்ளவும்.
  • அடுத்து அதனுடன் மிளகாய், 1 கொத்து கருவேப்பிலை, 1/4 ஸ்பூன் மிளகு, 1/4 ஸ்பூன் சீரகம் சேர்த்து நன்கு வறுத்துக் கொள்ளவும். கருக விடாமல் சிவந்த பின்பு அடுப்பை விட்டு இறக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும். அதன்பின் அதனை ஒரு மிக்சி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளலாம்.
  • அடுத்து அதே கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு, 1/4 ஸ்பூன் கடுகு, 1/4 ஸ்பூன் உளுந்து சேர்த்து, கடுகு பொரிந்த உடன் அதில் 1 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து சிறிது நேரம் அப்படியே வறுத்துக்கொள்ளவும்.
  • அடுத்து அதில் 1 கொத்து கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும். அதன் பின் அதனுடன் 1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
  • பின்பு அதில் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடியை அதில் சேர்க்கவும். இப்போது இது அனைத்தும் சேர்த்து மீடியம் பிலேமில் வைத்து கலந்துவிடவும்.
  • கடைசியாக உப்பு சேர்த்து கலந்துவிடவும். இந்த உளுந்தோரை ராகு பகவானுக்கு மிகவும் விசேஷம். ஆகவே இதனை கோவிலில் கொடுப்பார்கள். இதனை வீட்டில் மதிய உணவுக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.

இதையும் தெரிந்துகொள்ளலாம் 👉👉👉  ஐயர் வீட்டு தக்காளி குழம்பு செய்யலாம் வாங்க..

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement

Suvalakshmi

எனது பெயர் சுவலட்சுமி. Pothunalam.com இணையதளத்தில் Senior Content Writer ஆக பணியாற்றுகிறேன். அழகுக்குறிப்பு, ஆன்மீகம், தொழில் போன்ற செய்திகளில் தொடர்ந்து இந்த தளத்தில் எழுதி வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

palapalam kolukattai in tamil

இந்த வருட விநாயகர் சதுர்த்திக்கு ஸ்பெஷலானா பலாப்பழம் பூரணம் கொழுக்கட்டை செய்து பாருங்கள்

potato payasam recipe in tamil

விநாயகர் சதுர்த்திக்கு இப்படி ஒரு பாயசம் செய்து விடுங்கள்

மூக்கடைப்பு பிரச்சனையை தீர்க்கும் மிளகு சாதம்..!

Chicken Dum Biryani in Tamil

ஓண‌ம் ஸ்பெஷல்!!! சிக்கன் தம் பிரியாணி செய்முறை..!

Bread Spring Roll Recipe in Tamil

School -ல் இருந்து வரும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நாக்ஸ் செஞ்சி கொடுங்க..!

paruppu sadam in cooker tamil

பக்கத்து தெரு வரைக்கும் மணக்கும் ஐயர் வீட்டு பருப்பு சாதம் செய்வது எப்படி.?

Food To Boost Child Memory in Tamil

குழந்தைகளுக்கு ஞாபக மறதி நீங்கி ஞாபகசக்தி அதிகரிக்க இதை மட்டும் செய்து கொடுங்கள்..!

அடிக்கிற வெயிலுக்கு வீட்டிலேயே கேரட் ஐஸ் கிரீம் இந்த மாதிரி செஞ்சி சாப்பிட்டு பாருங்க..! டேஸ்ட் வேற லெவல இருக்கும்..!

mutton murtabak recipe in tamil

வாட்டர் பாட்டில் இருந்தால் ருசியான ஜாலர் முர்தபா செய்து பாருங்கள்