உருளைகிழங்கு பட்டாணி மசாலா
வணக்கம் நண்பர்களே இன்றைய சமையல் பதிவில் ஒரு அருமையான உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா மிகவும் எளிதாக எப்படி செய்வது என்றுதான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். இந்த உருளைகிழங்கு பட்டாணி மசாலாவை, நீங்கள் சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, பொங்கல் போன்ற எல்லாவிதமான உணவுகளிலும் சேர்த்து சாப்பிடலாம். மேலும் இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் அளவிற்கு எப்படி செய்வது என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.
மிகவும் சுவையான பட்டாணி உருளைக்கிழங்கு கட்லெட் செய்வது எப்படி..? |
உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- உருளைகிழங்கு- 4
- பச்சை பட்டாணி- 1 கப்
- பெரிய வெங்காயம்-1
- இஞ்சிபூண்டு விழுது- 1 டீஸ்பூன்
- தக்காளி-2
- மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்
- மஞ்சத்தூள்- 1/2 டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- சோம்பு- 1/2 டீஸ்பூன்
- கொத்தமல்லி- சிறிதளவு
- பச்சைமிளகாய்- 2 கீறியது
- எண்ணெய்- 2 டீஸ்பூன்
உருளைகிழங்கு பட்டாணி மசாலா செய்முறை:
ஸ்டேப்:1
முதலில் ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, அதில் உருளைகிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை சேர்த்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டும் வேகவைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்க வேண்டும்.
உருளைகிழங்கும் வெந்த பிறகு அதனுடைய தோலை நீக்கி கொண்டு நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஸ்டேப்:2
அடுத்ததாக ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைக்க வேண்டும், கடாய் சூடானதும் அதில் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் சோம்பு சேர்த்து கொள்ள வேண்டும், சோம்பு பொறிந்த பிறகு, அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
ஸ்டேப்:3
வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கிய பிறகு, அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் தக்காளியை அரைத்து ஊற்ற வேண்டும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.
ஸ்டேப்:3
அடுத்ததாக மசாலா எல்லாம் சேர்த்த பிறகு அதில் தண்ணீர் சிறிதளவு தெளித்து விட வேண்டும். பிறகு நாம் வேகவைத்து எடுத்து வைத்த உருளைகிழங்கு, பட்டாணியை அதில் சேர்த்து பொறுமையாக கிளறி விட வேண்டும், பிறகு அதில் கொத்தமல்லி சேர்த்து , ஒரு 5 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து, அதன் பிறகு இறக்கி விட வேண்டும்.
இப்பொழுது உருளைகிழங்கு மசாலா ரெடி வாங்க சாப்பிடலாம், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்ததால் நீங்களும் செய்து அசத்துங்கள்.
உருளைக்கிழங்கு பெப்பர் ப்ரை..! ஒருமுறை இதை செய்து கொடுங்கள் அதன் பின் இதை மட்டும் தான் செய்வீர்கள் |
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |