மிகவும் சுலபமான வெரைட்டி ரைஸ் வகைகள் | Variety Rice in Tamil

வெரைட்டி ரைஸ் செய்வது எப்படி? | Variety Rice List in Tamil

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கு மதியம் என்ன மாதிரியான உணவுகளை செய்ய வேண்டும் என்ற யோசனை இல்லத்தரசிகளுக்கு அதிகம் இருக்கும். இந்த பதிவு பெண்களுக்கு மட்டுமல்ல, வெளியூருக்கு சென்று வேலை பார்க்கும் ஆண்களுக்கும் உதவியாக இருக்கும். சரி வாங்க நாம் இந்த தொகுப்பில் சில சுவையான வெரைட்டி ரைஸ்களை சுலபமான முறையில் எப்படி செய்யலாம் என்று படித்து தெரிந்து கொள்வோம்.

வெரைட்டி ரைஸ் இன் தமிழ் | Easy Variety Rice in Tamil

கொத்தமல்லி சாதம்:

Variety Rice List in Tamil

தேவையான பொருட்கள்:

 1. கொத்தமல்லி – தேவையான அளவு
 2. பச்சை மிளகாய் – 2
 3. பூண்டு – 8
 4. இஞ்சி துண்டு – 1
 5. சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
 6. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 7. நெய் – 1 டேபிள் ஸ்பூன்
 8. கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
 9. கடலை பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 10. உளுத்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
 11. கருவேப்பிலை – சிறிதளவு
 12. பெருங்காய தூள் – கால் டேபிள் ஸ்பூன்
 13. வெங்காயம் – 2
 14. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்: 1

Variety rice list in Tamil: முதலில் தேவையான அளவு அரிசி எடுத்து அதனை கழுவி வேக வைத்து, சாதத்தை எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

ஒரு மிக்சியில் தேவையான அளவு கொத்தமல்லி, 2 பச்சை மிளகாய், 8 பூண்டு, தோல் நீக்கிய இஞ்சி துண்டு 1, சீரகம் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 3

பின் ஒரு கடாயில் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து சூடாக்கவும். பின் கடுகு 1 டேபிள் ஸ்பூன் சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் 1 டேபிள் ஸ்பூன் உளுத்தம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து வறுக்கவும். பின் அதில் கருவேப்பிலை, கால் டேபிள் ஸ்பூன் பெருங்காய தூள் சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 4

பின் அதில் நறுக்கிய வெங்காயம் 2, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின்னர் அரைத்து வைத்த கொத்தமல்லி பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக வைக்கவும்.

பின்னர் அதில் வேக வைத்த சாதத்தை சேர்த்து மிக்ஸ் பண்ணவும். அவ்வளவு தான் சுவையான கொத்தமல்லி சாதம் தயார்.

கருவேப்பிலை சாதம்:

வெரைட்டி ரைஸ் செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

 1. எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
 2. கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
 3. உளுத்தம் பருப்பு – சிறிதளவு
 4. கடலை பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்
 5. சிவப்பு மிளகாய் – 2
 6. கருவேப்பிலை – 2 கொத்து
 7. பச்சை மிளகாய் – 2
 8. நெய் – 1 டேபிள் ஸ்பூன்
 9. நிலக்கடலை, முந்திரி – தேவையான அளவு
 10. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 11. கருவேப்பிலை பொடி – 2 டேபிள் ஸ்பூன்
 12. உப்பு – தேவையான அளவு

செய்முறை:

ஸ்டேப்: 1

Easy Variety Rice in Tamil: முதலில் தேவையான அளவு அரிசி எடுத்து அதனை கழுவி வேக வைத்து, சாதத்தை எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின் ஒரு கடாயில் எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன், 1 டேபிள் ஸ்பூன் கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்தவுடன் சிறிதளவு உளுத்தம் பருப்பு, அரை டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு, 2 சிவப்பு மிளகாய், 2 கொத்து கருவேப்பிலை, கீறிய பச்சை மிளகாய் 2 சேர்த்து 2 நிமிடம் வதக்கவும். 2 நிமிடம் கழித்து இதை வேக வைத்த சாதத்தில் சேர்க்கவும்.

ஸ்டேப்: 3

பின் கடாயில் 1 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அதில் தேவையான அளவு நிலக்கடலை, முந்திரி சேர்த்து வதக்கவும். இதையும் வேக வைத்த சாதத்தில் சேர்க்கவும்.

ஸ்டேப்: 4

பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு (எலுமிச்சை சாறுக்கு பதிலாக புளி சாறு சேர்த்து கொள்ளலாம்), தேவையான அளவு உப்பு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கருவேப்பிலை பொடி சேர்த்து கிளறினால் சுவையான கருவேப்பிலை சாதம் தயாராகிவிடும்.

மசாலா சாதம்:

Variety Rice in Tamil

தேவையான பொருட்கள்:

 1. எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
 2. நெய் – 1 டேபிள் ஸ்பூன்
 3. வெங்காயம் – 2
 4. பச்சை மிளகாய் – 2
 5. இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டேபிள் ஸ்பூன்
 6. தக்காளி – 2
 7. கேரட், பச்சை பட்டாணி – 1 கப்
 8. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 9. மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 10. மஞ்சள் தூள் – அரை டேபிள் ஸ்பூன்
 11. கரம் மசாலா – அரை டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப்: 1

Variety Rice in Tamil: முதலில் தேவையான அளவு அரிசி எடுத்து அதனை கழுவி வேகவைத்து, சாதத்தை எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின் ஒரு கடாயில் எண்ணெய் 1 டேபிள் ஸ்பூன், நெய் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து சூடாக்கவும். பின் அதில் நறுக்கிய வெங்காயம் 2, கீறிய பச்சை மிளகாய் 2, தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.

ஸ்டேப்: 3

வெங்காயம் வதங்கிய பிறகு 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் நறுக்கிய தக்காளி 2 சேர்க்கவும். அதன் பிறகு அதில் நறுக்கிய கேரட், பச்சை பட்டாணி 1 கப் சேர்த்து மிக்ஸ் செய்து 5 நிமிடம் வரை வேக வைக்கவும்.

ஸ்டேப்: 4

பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், அரை டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை டேபிள் ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து 1 நிமிடம் வேக வைக்கவும். இதில் உள்ள பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின்னர் வேக வைத்த சாதத்தை சேர்த்து மிக்ஸ் செய்தால் அருமையான மசாலா சாதம் தயார்.

ஆரோக்கியமான கஞ்சி வகைகள்

சோயா பிரைட் ரைஸ்:

Easy Variety Rice in Tamil

தேவையான பொருட்கள்:

 1. Soya Chunks – தேவையான அளவு
 2. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
 3. கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன்
 4. இஞ்சி பூண்டு பேஸ்ட் – அரை டேபிள் ஸ்பூன்
 5. மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
 6. சோளமாவு – 2 டேபிள் ஸ்பூன்
 7. food colour – 1 சிட்டிகை
 8. எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
 9. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
 10. தண்ணீர் – தேவையான அளவு
 11. பூண்டு  – 4
 12. வெங்காயம்  – 2
 13. பச்சை மிளகாய் – 2
 14. தக்காளி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
 15. சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
 16. வினிகர் – அரை டேபிள் ஸ்பூன்
 17. மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

ஸ்டேப்: 1

Easy Variety Rice in Tamil: சாதத்தை வடித்து எடுத்து வைத்து கொள்ளவும்.

Soya Chunks தேவையான அளவு எடுத்து அதை சூடான நீரில் சேர்த்து 10 நிமிடம் ஊறவைக்கவும். 10 நிமிடம் கழித்து அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விட்டு வேறொரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின் அதில் தேவையான அளவு உப்பு, 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, அரை டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 டேபிள் ஸ்பூன் மைதா மாவு, 2 டேபிள் ஸ்பூன் சோளமாவு, food colour 1 சிட்டிகை, எலுமிச்சை சாறு 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 3

பின் ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து சூடாக்கவும். பின் அதில் மிக்ஸ் செய்து வைத்திருக்கும் Soya Chunks சேர்த்து பொரிக்கவும்.

ஸ்டேப்: 4

பின்னர் ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் பொடிதாக நறுக்கிய பூண்டு 4 சேர்த்து வதக்கவும். பின் நறுக்கிய வெங்காயம் 2, கீறிய பச்சை மிளகாய் 2, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாஸ், 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், அரை டேபிள் ஸ்பூன் வினிகர் சேர்க்கவும்.

ஸ்டேப்: 5

பின்னர் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின் அதில் வேகவைத்த சாதம் சேர்த்து மிக்ஸ் பண்ணவும். அதன் பிறகு அதில் பொறித்த Soya Chunks சேர்த்தால் சுவையான சோயா பிரைட் ரைஸ் தயார்.

Breakfast Recipes In Tamil

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal