Lunch-க்கு இந்த சாதம் செய்து பாருங்க குழம்பு செய்ய தேவை இல்லை.. வெறும் 10 நிமிடம் போதும்..!

Advertisement

Variety Rice Recipes in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் உங்கள் குழந்தைக்கும்.. உங்கள் வீட்டில் வேலைக்கு செல்லும் செல்லும் பெரியவர்களும்.. கல்லூரிக்கு செல்லும் மாணவர்களுக்கும் Lunch-க்கு  எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை செய்து கொடுக்கிரங்களா? அப்படினா ஒரு முறை இந்த வெரைட்டி ரைஸ் ட்ரை செய்து பாருங்கள். மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இந்த வெரைட்டி ரைஸ் செய்ய என்னென்ன பொருட்கள் தேவைப்படும், எப்படி செய்ய வேண்டும் என்ற விவரங்களை நாம் இப்பொழுது பார்த்துவிடலாம்.

தேவையான பொருட்கள்:

  1. அரசி – 1/4 கிலோ
  2. காய்ந்த மிளகாய் – காரத்திற்கு ஏற்ப 6
  3. உரித்த பூண்டு பற்கள் – 15
  4. சமையல் எண்ணெய் – தேவையான அளவு
  5. கடுகு – ஒரு ஸ்பூன்
  6. கருவேப்பிலை – ஒரு கொத்து
  7. பெரிய வெங்காயம் – ஒன்று (பொடிதாக நறுக்கியது)
  8. தக்காளி – 2 (பொடிதாக நறுக்கியது)
  9. குடைமிளகாய் – 1 (பொடிதாக நறுக்கியது)
  10. உப்பு – தேவையான அளவு
  11. மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

செய்முறை:

Variety Rice Recipes

முதலில் காய்ந்த மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் செய்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொர கொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பிறகு 1/4 கிலோ அரிசியை வடித்து சாதம் கிளற தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

அடுப்பில் ஒரு அகலமான பாத்திரத்தை ஊற்றி தேவையான அளவு சமையல் எண்ணெய் சேர்த்து சூடேற்றவும்.

எண்ணெய் சூடேறியதும் ஒரு ஸ்பூன் கடுகு சேர்க்கவும், கடுகு நன்கு பொரிந்து வந்ததும் ஒரு கொத்து கருவேப்பிலையை சேர்க்கவும்.

பிறகு ஒரு பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நைசாக அறிந்து அதனுடன் செய்து நன்றாக வைத்தவும்.

வெங்காயம் நன்கு வதங்கியது இரண்டு தக்காளியை பொடிதாக நறுக்கி அதனுடன் சேர்த்து வதக்கவும்.

தக்கவையை நன்கு வதக்கியதும் ஒரு கொடைமிளகாவை பொடிதாக நறுக்கி தாண்டு சேர்த்து நன்றாக வதக்கிவிடுங்கள்.

பிறகு தேவையான அளவு உப்பு செய்து மீண்டும் நன்றாக வாதிக்கிடுங்கள்.

பிறகு 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் ஏற்கனவே அரைத்து வந்துள்ள பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து மீண்டும் நன்றாக வதக்கிவிடுங்கள்.

இறுதியாக நாம் வடித்த சாதத்தை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி கொள்ளுங்கள். அதாவது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து ஒரு 5 நிமிடங்கள் மட்டும் கிளறி இறக்கினால் அருமையான சுவையில் வெரைட்டி ரைஸ் தயார். உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொத்தமில்லை இலையை பொடிதாக நறுக்கி இந்த சாதத்தில் தூவிவிடலாம்.

ஒரு முறை வீட்டில் ட்ரை செய்து பாருங்கள் நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 இட்லி தோசை மாவு இல்லாத நேரத்தில் 10 நிமிடத்தில் இந்த மொறு மொறு தோசை ட்ரை பண்ணுங்க..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Samayal kurippu tamil
Advertisement