வெஜிடபிள் கோப்தா கிரேவி | Veg Kofta Curry Recipe in Tamil

Advertisement

மிக்ஸ் வெஜிடபிள் கோஃப்தா செய்முறை | Veg Kofta Curry Ingredients in Tamil

காய்கறிகள் உடலுக்கு மிகவும் சத்து நிறைந்தவை. குழந்தைகளுக்கு காய்கறிகள் என்றால் பிடிக்காது, சாப்பிட அடம்பிடிப்பார்கள். காய்கறி சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு காய்கறிகளை வைத்து வித்தியாசமாக சாப்பாடு செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். அந்த வகையில் நாம் இந்த தொகுப்பில் வெஜிடபிள் கோப்தா கிரேவி எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க. இது உடலுக்கு மிகவும் நன்மை அளிக்க கூடியவை.

தேவையான பொருட்கள் – Veg Kofta Curry Recipe in Tamil

  1. உருளைக்கிழங்கு – 2 வேக வைத்து மசித்தது
  2. பீன்ஸ் – அரை கப் (நறுக்கியது)
  3. காலிபிளவர் – அரை கப் (நறுக்கியது)
  4. பீட்ரூட் – அரை கப் (துருவியது)
  5. பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
  6. இஞ்சி பூண்டு விழுது – கால் டேபிள் ஸ்பூன்
  7. மிளகாய் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
  8. கரம் மசாலா – 1/4 டேபிள் ஸ்பூன்
  9. Bread Crumbs – 2 டேபிள் ஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. மைதா – 1 டேபிள் ஸ்பூன்

உருண்டை செய்முறை – Veg Kofta Curry Recipe in Tamil Ingredients:

ஸ்டேப்: 1

முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்து மசித்து வைத்த உருளைக்கிழங்கு 2, அரை கப் நறுக்கிய பீன்ஸ், அரை கப் வேகவைத்து நறுக்கிய காலிபிளவர், அரை கப் துருவிய பீட்ரூட், நறுக்கிய பச்சை மிளகாய் 2, கால் டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக கலக்கவும்.

ஸ்டேப்: 2

பின் அதில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1/4 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 2 டேபிள் ஸ்பூன் Bread Crumbs, உப்பு தேவையான அளவு, 1 டேபிள் ஸ்பூன் மைதா சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 3

மிக்ஸ் செய்த மாவை சிறிய, சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி இந்த உருண்டைகளை வறுக்கவும். உருண்டைகளை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்து கொள்ளவும்.

தேவையான பொருட்கள் – Veg Kofta Curry Ingredients in Tamil:

  1. எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
  2. வெங்காயம் – 3 (நறுக்கியது)
  3. தக்காளி – 2 (நறுக்கியது)
  4. இஞ்சி, பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
  5. தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
  6. மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  7. காஷ்மீரி மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  8. கரம் மசாலா – 1/2 டேபிள் ஸ்பூன்
  9. மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. தண்ணீர் – 1 கப்

கிரேவி செய்முறை – Veg Kofta Curry Recipe in Tamil:

ஸ்டேப்: 1

ஒரு கடாயில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடான பிறகு நறுக்கிய வெங்காயம் 3, நறுக்கிய தக்காளி 2, முந்திரி 7, இஞ்சி பூண்டு விழுது 1/4 டேபிள் ஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இதை மிக்ஸியில் போட்டு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப்: 2

கடாயில் 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்திருக்கும் பேஸ்டை அதில் போட்டு வதக்கவும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 1/2 டேபிள் ஸ்பூன் கரம் மசாலா, 1 டேபிள் ஸ்பூன் மல்லி தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.

ஸ்டேப்: 3

பின் அதில் 1 கப் தண்ணீர் சேர்த்து 3 நிமிடம் கொதிக்க வைக்கவும். 3 நிமிடம் கழித்து நாம் வறுத்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்த்து 2 நிமிடம் வேக வைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இப்போது சுவையான வெஜிடபிள் கோப்தா கிரேவி தயார்.

பன்னீர் கோலா உருண்டை செய்வது எப்படி?
செட்டிநாடு மட்டன் கோலா உருண்டை

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement