நாவிற்கு சுவை தரும் வெங்காய போண்டா..! | Vengaya Bonda in Tamil

vengaya bonda recipe in tamil

 வெங்காய போண்டா செய்வது எப்படி..?

பொதுவாக சிறியவர்களாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி ஈவ்னிங் நேரம் வந்தாலே அனைவருக்கும் ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்பது போல இருக்கும். ஆனால் அப்படி ஸ்னாக்ஸ் செய்தாலும் அனைவரும் அதை விரும்பி சாப்பிட மாட்டார்கள். சிலருக்கு அந்த ஸ்னாக்ஸ் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காமல் இருக்கும். சரி கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி சாப்பிடலாம் என்றாலும் அது உடலுக்கு அவ்வளவு நன்மையாக இருக்குமா என்று தெரியவில்லை. இது மாதிரி நீங்கள் அனைவருக்கும் பிடித்த மாதிரி என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்று யோசிக்க வேண்டாம். சுவையான வெங்காய போண்டா செய்வது எப்படி என்று இன்றைய பதிவில் தெரிந்துகொண்டு இன்றே உங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் செய்து கொடுத்து அசத்துங்கள்.

இதையும் செய்து பாருங்கள் ⇒ மாலை நேர திண்பண்டம் அவல் போண்டா செய்வது எப்படி ?

வெங்காய போண்டா செய்ய தேவையான பொருட்கள்:

 1. கடலை மாவு- 1 கப்
 2. அரிசி மாவு- 1/2 கப்
 3. வெங்காயம்- 2
 4. பச்சை மிளகாய்- 3
 5. மிளகாய் தூள்- 1/2 தேக்கரண்டி
 6. பெருங்காயத்தூள்- 1/4 தேக்கரண்டி
 7. பேக்கிங் சோடா- 1/4 தேக்கரண்டி
 8. உப்பு- தேவையான அளவு
 9. எண்ணெய்- தேவையான அளவு
 10. கருவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
 11. கொத்தமல்லி- 1 கைப்பிடி அளவு

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Make Onion Bonda Recipe in Tamil:

வெங்காய போண்டா செய்வது எப்படி

ஸ்டேப்- 1

முதலில் எடுத்துவைத்துள்ள வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை தண்ணீரில் அலசி விட்டு அதன் பிறகு பொடி பொடியாக நறுக்கி தனியாக வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 2

அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் 1 கப் கடலை மாவு, 1/2 கப் அரிசி மாவு போட்டு, நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகிய அனைத்தையும் போட்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து உங்களுடைய கைகளால் பிசைந்து விடுங்கள்.

ஸ்டேப்- 3

இப்போது பிசைந்து வைத்துள்ள போண்டா மாவுடன் மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் 1/4 தேக்கரண்டி, பேக்கிங் சோடா 1/4 தேக்கரண்டி மற்றும் உப்பு தேவையான அளவு சேர்த்து மீண்டும் போண்டா மாவினை பிசைந்து 5 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.

ஸ்டேப்- 4

5 நிமிடம் கழித்த பிறகு போண்டா மாவுடன் 1 கைப்பிடி அளவு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சேர்த்து மாவினை ஒரு பிசை பிசைந்து கொண்டு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெயை காய விடுங்கள். 

ஸ்டேப்- 5

எண்ணெய் காய்ந்த பிறகு தயார் செய்து வைத்துள்ள போண்டா மாவினை எண்ணெயில் போண்டா போல உருட்டி போட்டு நன்றாக வேக விடுங்கள். போண்டா வெந்து பொன் நிறம் போல வந்தவுடன் வெங்காய போண்டாவை வெளியே எடுத்து விடுங்கள். இது போல மீதம் உள்ள மாவினையும் செய்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்- 6

அவ்வளவு தான் வெங்காய போண்டா தயாராகிவிட்டது. நீங்கள் தயார் செய்த வெங்காய போண்டாவுடன் கார சட்னி அல்லது தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட்டாலும் போதும் அதனுடைய சுவை உங்களுக்கு மறக்கவே முடியாது.

இதையும் படியுங்கள்⇒ டீ கடை டேஸ்ட்டில் உருளைக்கிழங்கு போண்டா..!

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal