Vengaya Chutney Recipe
பொதுவாக அனைவருடைய வீட்டிலும் புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, பூண்டு சட்னி, தேங்காய் சட்னி, முள்ளங்கி சட்னி மற்றும் தக்காளி சட்னி இதுபோன்ற சட்னி வகைகளை மட்டும் தான் சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் வெங்காய சட்னி சாப்பிட்டு இருக்க மாட்டீர்கள். அதனால் தான் சட்னி பிரியர்களுக்கு பிடித்த மாதிரியான சுவையான வெங்காய சட்னி செய்வது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த வெங்காய சட்னியை வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்து கொடுத்து பாருங்கள். உங்களை போல யாராலும் வெங்காய சட்னி வைக்க முடியாது என்று சொல்லி பாராட்டி விட்டு விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க வெங்காய சட்னி செய்முறை பற்றி பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
வெங்காய சட்னி செய்வது எப்படி..?
தேவையான பொருட்கள்:
- சின்ன வெங்காயம்- 20
- காய்ந்த மிளகாய்- 7
- புளி- சிறிய துண்டு
- கடுகு- 1/4 தேக்கரண்டி
- உளுத்தம் பருப்பு- 1 தேக்கரண்டி
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
- கருவேப்பிலை- சிறிதளவு
இதையும் படியுங்கள்⇒ ஒரு நிமிடத்தில் இட்லி தோசைக்கு சூப்பரான சட்னி..! வறுத்து அரைக்க வேண்டியதில்லை..!
How to Make Onion Chutney:
கடாயில் வெங்காயம் சேர்த்தல்:
முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் காய்ந்த பிறகு அதில் 5 காய்ந்த மிளகாய் மற்றும் 20 சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.
வெங்காயம் வதக்குதல்:
வெங்காயம் சிறிது நேரம் வதக்கிய பிறகு அதில் புளி சிறிய துண்டு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் ஒரு 5 நிமிடம் வதக்கி சூடு ஆற வைத்து கொள்ளுங்கள்.
வதக்கிய பொருட்களை மிக்சியில் சேர்த்தல்:
இப்போது ஒரு மிக்சி ஜாரில் வதக்கி ஆற வைத்துள்ள பொருட்களை சேர்த்து அதனுடன் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள்.
வெங்காய சட்னியை தாளித்தல்:
அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெயை காய விடுங்கள்.
எண்ணெய் காய்ந்த பிறகு அதில் 1/4 தேக்கரண்டி கடுகு, 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு மற்றும் 2 காய்ந்த மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வறுத்து கொள்ளுங்கள்.
கடாயில் சட்னியை சேர்த்தல்:
கடைசியாக அடுப்பில் கடாயில் இருக்கும் பொருட்கள் பொன் நிறமாக வந்தவுடன் அதில் கிண்ணத்தில் அரைத்து இருக்கும் சட்னியை சேர்த்து தாளித்து சட்னி மேலே கருவேப்பிலை சேர்த்து சட்னியை இறக்கி விடுங்கள்.
அவ்வளவு தான் சுவையான வெங்காய சட்னி தயார். சுட சுட இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிடுங்கள்.
இதையும் படியுங்கள்⇒ புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி இந்த மாதிரி செய்து பாருங்க
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |