தயிர், கடலை வைத்து இந்த சட்னி அரைத்து பாருங்கள் இட்லி மாவு காலியாகிவிடும்..!

Yogurt verkadalai satni in tamil

தயிர் வேர்கடலை சட்னி அரைப்பது எப்படி?

நண்பர்களே வணக்கம் இன்றைய சமையல் குறிப்பு பதிவில் தயிர் வேர்க்கடலையை வைத்து சூப்பரான சுவையான சட்னி செய்வது என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்வோம்..! பொதுவாக நிறைய வகையான சட்னி செய்து சாப்பிட்டிருப்போம். அவ்வளவு எங்க வேர்க்கடலை சட்னி கூட சாப்பிட்டிருப்போம் ஆனால் இந்த தயிர் மற்றும் வேர்க்கடலை சேர்த்து சட்னி செய்து சாப்பிட்டிருக்கிர்களா? வாங்க அதனை எப்படி செய்வது என்பதை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

Yogurt Verkadalai Satni in Tamil:

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை – 1 கப்

பச்சை மிளகாய் – 4

இஞ்சி – 1 துண்டு

தேங்காய் துருவியது – கால் கப்

புளிக்காத தயிர் – 1/4 கப்

கடுகு – 1 டீஸ்பூன்

சீரகம் – டீஸ்பூன்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

புளி – 1 கொட்டைப்பாக்கு அளவு

காய்ந்த மிளகாய் –2

கருவேப்பிலை – சிறிதளவு

◊  உப்பு – தேவையான அளவு

தயிர் வேர்கடலை சட்னி செய்முறை:

ஸ்டேப்: 1

முதலில் கடாயை வைத்து அதில் வேர்க்கடலையை சேர்த்து வறுக்கவும். அதில் தோல் பிரிந்து வரும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 2

பின்பு அந்த கடாயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள். அதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும். ஒரு துண்டு இஞ்சியும் சிறிதாக நறுக்கி அதையும் வதக்கி எடுத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 3

இப்போது மிக்சி ஜாரை எடுத்து அதில் முதலில் நாம் வறுத்து வைத்த வேர்க்கடலையை சேர்க்கவும். வதக்கிய பச்சை மிளகாய், இஞ்சி அனைத்தையும் சேர்த்த பிறகு துருவிய தேங்காயும் சேர்த்துக்கொள்ளவும் அதன் பின் அதில்  தண்ணீர் ஊற்றாமல் ஒரு முறை மிக்ஸியில் அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 4

ஓரளவு வேர்க்கடலை அறைபட்டு விடும். அதன் பின் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.

தண்ணீர் ஊற்றிய பின் உப்பு, புளி சேர்த்து நல்ல மாவு போல் பதத்திற்கு அரைத்து கொள்ள வேண்டும்.

கடைசியாக கால் கப் (1/4) புளிக்காத தயிர் சேர்த்து ஒருமுறை அரைத்துக்கொள்ளவும்.

ஸ்டேப்: 5

ஒரு கிண்ணத்தில் தனியாக அரைத்த சட்னியை வைத்துக்கொள்ளவும். கடாயை வைத்து அதில் தாளிப்புக்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் அதில் கடுகு, சீரகம் போட்டு பொரிந்தவுடன் இரண்டு காய்ந்த மிளகாய் கிள்ளி போட்டு கருவேப்பிலையும் சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.

இப்போது இட்லி தோசை ஊற்றிக்கொள்ளவும். அந்த சட்னியை வைத்து சூடாக சாப்பிட்டு பாருங்கள் ஆஹா அதன் சுவையே வேற மரித்தாங்க..!👌

தர்பூசணி தோலில் சட்னி செய்வது எப்படி..!

 

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!