தமிழ் இலக்கணம் அகப்பொருள் | Agaporul Ilakkanam in Tamil
தமிழில் மிகவும் தொன்மையான இலக்கண நூலான தொல்காப்பியத்தில் பொருள் இலக்கணம் இடம் பெற்றுள்ளது. பாடல்களில் வரும் பொருள் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை எடுத்து கூறுவது பொருள் இலக்கணம் எனப்படும். இந்த இலக்கணம் இரண்டு வகைப்படும் அவை அகப்பொருள், புறப்பொருள் ஆகும். நாம் இந்த தொகுப்பில் அகப்பொருள் இலக்கணம் பற்றி விரிவாக படித்தறியலாம் வாங்க.
அகப்பொருள் இலக்கணம் என்றால் என்ன?
- Agaporul Ilakkanam: பாடல்களில் தலைவன், தலைவியின் காதலை மையமாக கொண்டு எழுதுவது அகப்பொருள் எனப்படும். பாடலில் காதல் உணர்வை வெளிப்படுத்தும் போது பொதுவாக தலைவன், தலைவி என்று மட்டுமே குறிப்பிடுவார்கள், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படாது.
- பாடலில் நடைபெறும் செய்திகளை தலைவன், தலைவி, தோழி இவர்களில் யாரேனும் ஒருவர் கூறுவதாக இருக்குமே தவிர மூவரும் ஒன்றாக ஒரே நேரத்தில் பேசுவது போல இருக்காது. ஒவ்வொரு பாடலுக்கும் திணை, துறை கூறப்பட்டிருக்கும்.
- திணை நிலத்தையும், துறை பாடலின் சூழலையும் குறிப்பிடும். இந்த அகப்பொருள் இலக்கணம் நிலத்தை சார்ந்து அதாவது தினை அடிப்படையில் அமைந்திருக்கும். திணைகள் ஐந்து அவை:
- குறிஞ்சித் திணை
- முல்லைத் திணை
- மருதத் திணை
- நெய்தல் திணை
- பாலைத் திணை
அகப்பொருள் இலக்கணம் இந்த திணைகளை பொறுத்து மூன்று வகைப்படும் அவை
- முதற்பொருள்
- கருப்பொருள்
- உரிப்பொருள்
முதற்பொருள் என்றால் என்ன?
Agaporul Ilakkanam in Tamil: இந்த பொருளில் நிலமும், பொழுதும் குறிப்பிடப்பட்டிருக்கும். உலகில் உள்ள அனைத்து மனிதர்களும், விலங்குகளும் உயிருடன் இருப்பதற்கும், வாழ்வதற்கும் முக்கியமானவையாக இருப்பதால் இது முதற்பொருள் எனப்படும்.
நிலம்:
குறிஞ்சி | மலையும் மலை சார்ந்த இடமும் |
முல்லை | காடும் காடு சார்ந்த இடமும் |
மருதம் | வயலும் வயல் சார்ந்த இடமும் |
நெய்தல் | கடலும் கடல் சார்ந்த இடமும் |
பாலை | பாலை நிலமும் பாலை நிலம் சார்ந்த இடமும் |
பொழுது:
பொழுது என்பதை காலத்தை குறிக்கும். சிறுபொழுது, பெரும்பொழுது என இரண்டு வகை உள்ளது.
சிறுபொழுது:
ஒரு நாளில் உள்ள காலத்தை குறிப்பது சிறுபொழுது.
வைகறை | விடியற்காலம் |
காலை | காலை நேரம் |
நண்பகல் | உச்சி வெயில் நேரம் |
எற்பாடு | சூரியன் மறையும் நேரம் |
மாலை | முன்னிரவு நேரம் |
யாமம் | நள்ளிரவு நேரம் |
பெரும்பொழுது:
Agaporul Ilakkanam in Tamil: ஒரு வருடத்தில் உள்ள 12 மாதங்களையும் ஆறு பிரிவாக பிரிப்பது பெரும்பொழுது. இது நீண்ட காலப்பிரிவாக இருப்பதால் இதனை பெரும்பொழுது என்று குறிப்பிடுகிறார்கள்.
சித்திரை, வைகாசி | இளவேனில் காலம் |
ஆனி, ஆடி | முதுவேனில் காலம் |
ஆவணி, புரட்டாசி | கார் காலம் |
ஐப்பசி, கார்த்திகை | குளிர்காலம் |
மார்கழி, தை | முன்பனிக் காலம் |
மாசி, பங்குனி | பின்பனிக் காலம் |
திணைகளுக்குரிய சிறுபொழுது மற்றும் பெரும்பொழுது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தினை | பெரும்பொழுது | சிறுபொழுது |
குறிஞ்சி | குளிர்காலம், முன்பனிக்காலம் | யாமம் |
முல்லை | கார்காலம் | மாலை |
மருதம் | ஆறு காலமும் | வைகறை |
நெய்தல் | ஆறு காலமும் | எற்பாடு |
பாலை | முதுவேனில், பின்பனி | நண்பகல் |
கருப்பொருள் என்றால் என்ன?
Agaporul Ilakkanam in Tamil: ஒவ்வொரு திணையிலும் வாழும் மக்களின் தொழில், உணவு, பொழுதுபோக்கு, அந்த நிலத்தில் உள்ள மரங்கள், பறவைகள், விலங்குகள், நீர்நிலை போன்றவை வேறுபட்டுள்ளது. இவற்றை கூறுவது கருப்பொருள் எனப்படும். திணைக்குரிய கருப்பொருள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது
கருப்பொருள் பட்டியல் | |||||
கருப்பொருள் | குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |
தெய்வம் | முருகன் | திருமால் | இந்திரன் | வருணன் | கொற்றவை |
மக்கள் | குறவர், குறத்தியர் | ஆயர், ஆய்ச்சியர் | உழவர், உழத்தியர் | பரதவர், பரத்தியர் | மறவர், மறத்தியர் |
பறவை | கிளி, மயில் | காட்டுக்கோழி | அன்னம், நாரை | கடல் காகம் | பருந்து, கழுகு |
விலங்கு | புலி, யானை | முயல், மான் | நீர்நாய், எருமை | சுறா | செந்நாய் |
பூ | வேங்கை, குறிஞ்சி | முல்லை, பிடவம் | கழுநீர், தாமரை | முண்டகம், நெய்தல் | குராமரா |
மரம் | அகில், தேக்கு | காயா, கொன்றை | மருதம், காஞ்சி | ஞாழல், புன்னை | பாலை, ஊழிஞை |
பண் | குறிஞ்சிப் பண் | சாதாரி | மருதம் | செவ்வழி | பஞ்சுரம் |
யாழ் | குறிஞ்சி யாழ் | முல்லை யாழ் | மருத யாழ் | விளரி யாழ் | பாலை யாழ் |
உணவு | தினை, மலை நெல் | முதிரை, வரகு சாமை |
வெண்ணெல், செந்நெல் | மீன் | வழிப்பறி உணவு |
தொழில் | தேன் எடுத்தல், வெறியாடல் | ஏறு தழுவுதல், மேய்த்தல் | நெல் அரிதல், விழா எடுத்தல் | மீன் பிடித்தல், கடலாடுதல் | சூறையாடல், வெஞ்சமம் எடுத்தல் |
உரிப்பொருள் என்றால் என்ன?
- Agaporul Ilakkanam in Tamil: ஒவ்வொரு திணைக்கும் உரிய பொருளை கூறுவது உரிப்பொருள் எனப்படும். உரிப்பொருள் திணைக்கு உரிய முக்கிய உணர்ச்சியைக் குறிக்கிறது.
குறிஞ்சி | புணர்தலும் புணர்தல் நிமித்தமும் |
முல்லை | இருத்தலும் இருத்தல் நிமித்தமும் |
மருதம் | ஊடலும் ஊடல் நிமித்தமும் |
நெய்தல் | இரங்கலும் இரங்கல் நிமித்தமும் |
பாலை | பிரிதலும் பிரிதல் நிமித்தமும் |
இவ்வாறு எல்லாத் திணைக்கும் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் சொல்லப்பட்டிருக்கின்றன.
ஐவகை நிலங்கள் |
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |