அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 2022 | Agni Natchathiram 2022 in Tamil
அக்னி நட்சத்திரம் 2022: அக்னி நட்சத்திரத்தின் போது வெயிலின் தாக்கம் சற்று கூடுதலாகவே இருக்கும். பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் அதிகரித்து காணப்படும். சில மாவட்டங்களில் வெயில் 110 டிகிரியை தாண்டி கூட இருக்கும். அக்னி வெயில் காலத்தின் போது பொதுமக்கள் வெளியில் செல்வதை பெரும்பாலும் தவிர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
இந்த 2022-ம் வருடம் அக்னி நட்சத்திரம் என்று சொல்லக்கூடிய கத்திரி வெயில் எப்போது ஆரம்பித்து எத்தனை நாட்களுக்கு இருக்க போகிறது என்று தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..
அக்னி நட்சத்திரத்தில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது? |
கோடை காலத்தில் சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள் |
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் 2022:
கத்திரி வெயிலானது இந்த வருடம் **மே மாதம் 04-ம் தேதி** ஆரம்பமாகிறது. இந்த கால கட்டத்தின் போது வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.
கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. அதிலும் இந்த கத்திரி வெயில் நேரத்தில் பொதுமக்களால் வெளியில் நடமாடுவது மிகவும் சிரமம்.
உங்க சருமத்த அழகா வெச்சிக்க கோடை கால டிப்ஸ் |
தமிழகத்தில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிய நிலையில், பல்வேறு இடங்கள் மற்றும் சென்னையில் வெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது.
அக்னி நட்சத்திரம் ஆரம்பம் மற்றும் முடிவு 2022:
அக்னி நட்சத்திரம் மே மாதம் 04-ம் தேதி ஆரம்பித்து மே 28-ம் தேதி வரை தொடர்ந்து அதாவது கத்திரி வெயில் 25 நாட்களுக்கு நீடிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
அக்னி வெயிலின் தாக்கம்:
இதன் காரணமாக பகல் நேரங்களில் அதிகமாக அனல் காற்று வீசக்கூடும். அக்னி வெயில் காலகட்டத்தின் போது மே 11 முதல் 24-ம் தேதி வரை வெயில் மிகவும் அதிகமாக காணப்படும். எனவே பொதுமக்கள் இதுபோன்ற நாட்களில் பகல் நேரத்தில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
கோடை கால ஆரோக்கிய டிப்ஸ் |
பாதுகாத்து கொள்ள:
கத்திரி வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்கு தர்பூசணி, நீர்ச்சத்து நிறைந்த பழங்களான நுங்கு, இளநீர், வெள்ளரிக்காய், மோர் போன்ற குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக்கொண்டால் வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |