எண்ணம் போல் தான் வாழ்க்கை | Ennam Pol Vazhkai in Tamil
Ennam Pol Vazhkai | ennam pol vazhkai meaning in tamil: பெரியவர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்வதை நாம் அனைவரும் கேட்டு இருப்போம். நம் எண்ணங்களில் எது மாதிரியான செயல்கள் தோன்றிகிறதோ அதெல்லாம் தான் வாழ்க்கையில் நமக்கு நடக்கும். நம்முடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய ஒவ்வொரு நிகழ்வுகளும், நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களும் நம்முடைய எண்ணங்களின் பிரதிபலிப்பே. சிலர் எப்போதும் எனக்கு மட்டும் வாழ்க்கையில் பிரச்சனை வந்துக்கொண்டே இருக்கிறது என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். வாழ்க்கையில் இயல்பாக நடக்கக்கூடிய சாதாரண பிரச்சனைகளையும் தங்கள் பிரச்சனையுடன் சேர்த்துக்கொள்வார்கள். இந்த நிலையில் இருப்பவர்களால் வாழ்க்கையில் எப்போதும் நிம்மதி என்ற நிலை ஒருபோதும் இருக்காது. நம்முடைய எண்ணங்கள் எப்போதும் தவறாக இருந்தால் நடப்பவை அனைத்தும் தவறாகத்தான் இருக்கும். இதற்கு உதாரணமாகத்தான் நம்முடைய முன்னோர்களின் சிறந்த அனுபவ பழமொழிகளில் ஒன்றுதான் இந்த எண்ணம் போல் வாழ்க்கை (Ennam Pol Vazhkai) என்ற வரி. ஒரு குட்டி கதை மூலம் எண்ணம் போல் வாழ்க்கைக்கு உதாரணம் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ளுவோம்..!
எண்ணம் போல் வாழ்க்கை எடுத்துக்காட்டு:
ennam pol vazhkai: மனதில் நல்ல எண்ணத்தினை தன்னம்பிக்கையோடு சிந்தித்து செயலாற்றுபவன் வெற்றியை அடைகிறான். எந்த செயலிலும் கெட்ட எண்ணத்துடன் தன்னம்பிக்கை இல்லாதவன் செயல் தோல்வியில் முடிகிறது.
சிறந்த எடுத்துக்காட்டு:
ennam pol vazhkai in tamil: கர்ப்பம் நிறைந்த மான் தன்னுடைய குட்டிகளை பிரசவிப்பதற்கு குகைக்கு சென்றது. கர்ப்பம் நிறைந்த மான் குட்டிகளை ஈன்றேடுத்த பிறகும் அந்த குகையினுள் வாழ்ந்தது. அந்த குகையானது காட்டுக்கே ராஜாவான சிங்கத்தின் குகையாகும். சிங்கமானது நீண்ட நாட்களாக மான் தங்கியுள்ள குகைக்கு வரவில்லை. வேறு காட்டிற்கு சென்ற அந்த சிங்கம் திடீரென்று ஒரு நாள் மான் தங்கியிருந்த குகைக்கு வந்து விட்டது.
மான்கள் பொதுவாகவே சிங்கத்தினை பார்த்தால் அச்சத்துடன் ஓடிவிடும். ஆனால் சிங்கத்தினி குகையில் இருந்த மானோ பயம் கொள்ளாமல் அந்த குகையில் இருந்தது. மான் தன்னுடைய குட்டிகளின் பக்கத்தில் சிங்கம் வந்ததும் உடனே மான் குட்டிகளிடம் சிங்கத்தினையுடைய கறி வேண்டும் என்று சத்தமாக கத்துமாறு சொன்னது
மான் கத்த சொன்னதை அடுத்து மான் குட்டிகளும் உடனே கத்த ஆரம்பித்துவிட்டன. சத்தத்தினை கேட்டதும் குகைக்குள் திறமையான மான்கள் இருப்பதாக மனதில் நினைத்து ஓட தொடங்கியது. சிங்கம் ஓடியதும் மானும் அந்த மான் குட்டிகளும் சந்தோசமாக அந்த குகைக்குள் வாழ்ந்தன. சிங்கத்தினை கண்டவுடனே பயந்து ஓடும் இனத்தில் பிறந்த ஒரு மான், தன்னுடைய தைரியத்தினை துணையாக கொண்டு, காட்டுக்கே ராஜாவான சிங்கத்தை துரத்திவிட்டது. மனதில் எப்போதும் தைரியமும் தன்னம்பிக்கையும் இருந்தால் வாழ்க்கையில் எந்த கஷ்டத்தினையும் கடந்து வெற்றியை பெறலாம். எண்ணம் போல் வாழ்க்கை என்ற தத்துவத்திற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மனதில் எப்போதும் நல்ல எண்ணத்தினை மட்டுமே வளர்த்துக்கொள்ளுங்கள்..! நல்லதையே அடைவீர்கள்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |