எதுகை மோனை சொற்கள் | Edhugai Monai in Tamil

Edhugai Monai in Tamil

எதுகை மோனை விளக்கம் | Edhugai Monai

வணக்கம் நண்பர்களே இன்றைய பொதுநலம்.காம் பதிவில் எதுகை, மோனை பற்றி பார்க்கலாம். இந்த எதுகை மோனை பள்ளி புத்தகங்களில் இருந்து கல்லூரி புத்தகங்கள் வரை அனைத்து செய்யுள் பாடலிலும் வரும். நாம் இந்த பதிவில் எதுகை, மோனை என்றால் என்ன? அதன் வகைகள் மற்றும் விளக்கம் என்ன என்பதை எல்லாம் இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

எதுகை மோனை என்றால் என்ன?

மோனை என்றால் என்ன?

ஒரு பாடல் அல்லது செய்யுளில் முதல் எழுத்து அடிகளில் அல்லது சீர்களில் ஒன்றாக வருவது மோனை எனப்படும்.

மோனை வகைகள்:

மோனை இரண்டு வகைப்படும் அவை:

 1. அடி மோனை
 2. சீர் மோனை

அடி மோனை:

அடி மோனை என்பது முதல் அடியில் உள்ள முதல் எழுத்தும், இரண்டாம் அடியில் உள்ள முதல் எழுத்தும் ஒன்று போல வருவது அடி மோனை எனப்படும்.

உதாரணம்:

ன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்தபின்
ன்னெஞ்சே தன்னைச் சுடும்

சீர் மோனை:

சீர் மோனை ஏழு வகைப்படும் அவை:

 1. இணை
 2. பொழிப்பு
 3. ஒரூஉ
 4. கூழை
 5. கீழ்க்கதுவாய்
 6. மேற்கதுவாய்
 7. முற்று

இணை மோனை:

ஒரு பாடலில் முதல் சீர் மற்றும் இரண்டாம் சீர்களில் வருகிற எழுத்து ஒன்றாக வருவது இணை மோனை எனப்படும்.

உதாரணம்:

டிப்பாரை ல்லாத ஏமரா மன்னன்

பொழிப்பு மோனை:

ஒரு பாடலில் முதல் சீர் மற்றும் மூன்றாம் சீர்களில் வருகிற எழுத்து ஒன்றாக வருவது பொழிப்பு மோனை எனப்படும்.

உதாரணம்:

ரிக்குரல் கிண்கிணி ரற்றும் சீறடி

ஒரூஉ மோனை:

ஒரு பாடலில் முதல் சீர் மற்றும் நான்காம் சீர்களில் வருகிற எழுத்து ஒன்றாக வருவது ஒரூஉ மோனை எனப்படும்.

உதாரணம்: 

ம்பொன் கொழிஞ்சி நெடுந்தேர் கற்றி

கூழை மோனை:

ஒரு பாடலில் முதல் மூன்று சீர்களிலும் முதல் எழுத்து ஒன்று போல வருவது கூழை மோனை எனப்படும்.

உதாரணம்: 
கன்ற ல்குல்ந்நுண் மருங்குதல்

கீழ்க்கதுவாய் மோனை:

ஒரு அடியில் முதல் சீர், இரண்டாவது சீர் மற்றும் நான்காவது சீர் முதல் எழுத்து ஒன்று போல வருவது கீழ்க்கதுவாய் மோனை எனப்படும்.

உதாரணம்: 

ருள்சேர் ருவினையும்
சேர றைவன்

மேற்கதுவாய் மோனை:

ஒரு அடியில் முதல் சீர், மூன்றாவது சீர் மற்றும் நான்காவது சீர் முதல் எழுத்து ஒன்று போல வருவது மேற்கதுவாய் மோனை எனப்படும்.

உதாரணம்: 

ரும்பிய கொங்கை வ்வளை
மைத்தோள்

முற்று மோனை – எதுகை மோனை சொற்கள்:

ஒரு செய்யுளில் சீர் முழுவதும் உள்ள முதல் எழுத்து ஒன்றாக வருவது முற்று மோனை எனப்படும்.

உதாரணம்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு

எதுகை:

ஒரு பாடல் அல்லது செய்யுளில் இரண்டாம் எழுத்து அடிகளில் அல்லது சீர்களில் ஒன்றாக வருவது எதுகை எனப்படும். எதுகை இரண்டு வகைப்படும் அவை:

 1. அடி எதுகை
 2. சீர் எதுகை

அடி எதுகை:

ஒரு பாடலின் அடிகளில் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது அடி எதுகை எனப்படும்.

உதாரணம்:

ர முதல எழுத்தெல்லாம் ஆதி
வன் முதற்றே உலகு

சீர் எதுகை:

சீர் எதுகை ஏழு வகைப்படும் அவை:

 1. இணை
 2. பொழிப்பு
 3. ஒரூஉ
 4. கூழை
 5. கீழ்க்கதுவாய்
 6. மேற்கதுவாய்
 7. முற்று

இணை எதுகை:

ஒரு அடியின் முதல் சீர் மற்றும் இரண்டாவது சீரில் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது இணை எதுகை எனப்படும்.

உதாரணம்:

ற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை

பொழிப்பு எதுகை:

ஒரு அடியில் முதல் சீர் மற்றும் மூன்றாவது சீரில் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது பொழிப்பு எதுகை எனப்படும்.

உதாரணம்:

தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்

ஒரூஉ எதுகை – எதுகை மோனை சொற்கள்:

ஒரு அடியில் முதல் சீர் மற்றும் நான்காவது சீரில் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது ஒரூஉ எதுகை எனப்படும்.

உதாரணம்:

ழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்

கூழை எதுகை:

ஒரு அடியின் முதல் மூன்று சீர்களிலும் இரண்டாவது எழுத்து ஒன்றாக வருவது கூழை எதுகை எனப்படும்.

உதாரணம்:

ற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

கீழ்க்கதுவாய் எதுகை:

ஒரு அடியின் முதல் சீர், இரண்டாவது சீர் மற்றும் நான்காவது சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக வருவது கீழ்க்கதுவாய் எதுகை எனப்படும்.

உதாரணம்:

ழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்

மேற்கதுவாய் எதுகை:

ஒரு அடியின் முதல் சீர், மூன்றாவது சீர் மற்றும் நான்காவது சீர்களில் இரண்டாவது எழுத்து ஒன்றாக வருவது மேற்கதுவாய் எதுகை எனப்படும்.

உதாரணம்:

ற்க கசடற கற்பவை கற்றபின்

முற்று எதுகை:

ஒரு செய்யுளில் சீர் முழுவதும் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றாக வருவது முற்று எதுகை எனப்படும்.

உதாரணம்:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி துப்பார்க்கு

உரிச்சொல் என்றால் என்ன? அதன் வகைகள்
அணி இலக்கணம்

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil