ஏலாதி பாடலின் நூல் குறிப்பு

yelathi in tamil

ஏலாதி நூல் குறிப்பு 

வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஏலாதி பாடலின் நூல் குறிப்பு பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். பதினொன்னு கீழ் கணக்கு நூல்களில் இதுவும் ஒன்றாகும்.  ஏலாதி நூல் ஆனது இன்னும் சில பாட புத்தங்களில் இடம்பெற்று  கொண்டுதான் இருக்கிறது. ஏலாதி ஏழு வகையான மூலிகை பொருட்களை உள்ளடக்கிய ஒரு சொல் தான் ஏலாதி ஆகும். மேலும் ஏலாதி நூல்களின் நூல் குறிப்பு, பெயர் காரணம், சிறப்பு மற்றும் ஏலாதி ஆசிரியர் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.

96 வகை சிற்றிலக்கியங்கள் பெயர்கள் தெரியுமா.?

 

ஏலாதி ஆசிரியர் குறிப்பு:

 • பண்டையத்  தமிழ்  நீதி நூல்களில் ஏலாதியும் ஒன்றாகும்.
 • ஏலாதி நூலை இயற்றியவர் சமண சமயத்தை சேர்ந்த கணிமேதாவியர் ஆவர்.
 • இவரை கணிதமேதயார் என்றும் அழைப்பார்கள்.
 • இவர் ஜோதிடத்தில் வல்லவர் என்றும் சொல்வார்கள்.
 • திணைமாலை மற்றும் நூற்றைம்பது என்ற அகப்புறம் நூலையும் இயற்றியுள்ளார்.
 • இவர் வட மொழியில் புலமை மிக்கவர் ஆவர்.
 • ஏலாதியில் மெத்தம் 81 பாடல்களை கொண்டுள்ளது.

ஏலாதி பெயர்க்காரணம்:

 • ஏலாதி 5 ஆம் நூற்றாண்டை சார்ந்த நூலாகும்.
 • இந்த ஏலாதியானது ஏலத்தை முதலாகக் கொண்ட ஏழு வகை மூலிகைகளான சுக்கு, மிளகு, துப்பிலி, இலவங்கம், சிறுநாவற் பூ, ஏலம்  போன்ற ஆறு வகை பொருட்களை கொண்டு செய்யப்பட்ட மருந்து ஒன்றின் பெயரை அடியொற்றி கொண்டதாகும்.
 • இந்த நூலின் பாடல்கள் ஒவ்வொன்றும் கருப்பொருள் தொடர்பில் நீதிகளை கொண்டுள்ளது.
 • மக்களை ஒழுங்குபடுத்தும் மருந்தாக இருப்பதால் ஏலாதி என்று பெயரிடப்பட்டது.
 • ஏலாதி பாடல்கள் நான்கு அடிகளையும் ஆறு கருத்துக்களையும் கொண்டுள்ள பாடலாகும்.
 • இந்த பாடல்களானது சிறப்பாயிரம் மற்றும் தற்சிறப்பாயிரம் உட்பட 81 வெண்பாக்களை கொண்டுள்ளது.

ஏலாதியின் சிறப்புகளை எடுத்துரைக்கும் பாடல் வரிகள்:

தோளின் அழகோ ஈடு இல்லாத வேறு அழகுகளோ, இடையின் அழகோ,நடை அழகோ, கழுத்தின் அழகோ உண்மையான அழகு, நாணத்தினால் ஏற்படும் அழகோ என்று எண்ணும் எழுத்தும் சேர்ந்த பாடலாகும். எடுத்துக்காட்டாக ஏலாதி பாடல்களில் ஒன்று.

இடைவனப்பும், தோள்வனப்பும்,

ஈடில் வனப்பும் நடைவனப்பும்

நாணின் வனப்பும் – புடைசால் கழுத்தின் வனப்பும் வனப்பல்ல

எண்ணோ(டு) எழுத்தின் வனப்பே வனப்பு.

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –>பொதுநலம்.com