எட்டுத்தொகை இலக்கியங்களுள் மூன்றாவதாக இடம்பெற்றுள்ள அக இலக்கியம் தான் ஐங்குறுநூறு. இந்த ஐங்குறுநூறு பாடலில் மொத்தம் 500 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலில் உள்ள பாடல்கள் அனைத்தும் சங்க காலத்தை சேர்ந்தவை ஆகும். ஐங்குறுநூற்றில் அடங்கியுள்ள பாடல்களில் ஒவ்வொரு திணைப் பாடல்களும், ஒவ்வொரு புலவரால் இயற்றப்படுள்ளன. ஆகமொத்தம் ஐந்து புலவர்கள் இவற்றை இயற்றியுள்ளனர். சங்க இலக்கிய தொகை நூல்களுள் பல சிறப்புகளை பெற்றுள்ளது ஐங்குறுநூறு. வாங்க இந்த பதிவில் ஐங்குறுநூறு நூல் விளக்கத்தினை தெரிந்துக்கொள்ளுவோம்.
சங்க இலக்கியங்களுள் மூன்றடியிலும் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல் ஐங்குறுநூறு தான். இந்த நூலினை தவிர வேறு எந்த நூலிலும் மருத திணை பாடல்கள் முதலாவதாக வைக்கப்படவில்லை. ஐங்குறுநூற்றில் வேளாண் பற்றிய சிந்தனைகள் அதிகமாக கிடைக்கிறது.