கண் திருஷ்டி என்பது உண்மையா ? பொய்யா ?

Advertisement

கண் திருஷ்டி பற்றிய தகவல்கள் 

வணக்கம் பொதுநலம் பதிவின் இனிமையான நேயர்களே. இன்று இந்த பதிவில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல் ஒன்றை பற்றி பார்ப்போம். அது என்ன தகவல் என்று யோசிக்கிறீர்களா..? வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து அது என்ன தகவல் என்பதை தெரிந்துகொள்வோம்…

கண் திருஷ்டி என்பது இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் பார்க்கக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது. இந்த கண் திருஷ்டி என்பது உண்மையா..? பொய்யா..? என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

கண் திருஷ்டி என்பது என்ன:

உலகில் உள்ள மனிதர்களில் கண் திருஷ்டிக்கு பயப்படாதவர்களே இருக்கமாட்டார்கள். கண் திருஷ்டி என்பதை நம் மக்கள் எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால், ஒருவர் பளபளக்கும் புதிய உடை அணிந்தாலோ அல்லது புதிதாக தொழில் தொடங்கினாலோ, வீடு கட்டினாலோஅதற்கு மற்றவர்கள் பொறாமை படுகிறார்கள்.

இதோபோன்ற நல்ல நல்ல விஷயங்கள் ஒருவர் வாழ்க்கையில் நடப்பதை பார்த்து மற்றவர்கள் பொறாமை படுவதையே கண் திருஷ்டி என்று கூறுகிறார்கள். திருஷ்டியை பற்றி கவலை படாத நாடும் இல்லை மக்களும் இல்லை. இந்த கண் திருஷ்டியில் இருந்து தப்பிப்பதற்கு நம் மக்கள் அரைஞாண் கயிறு, கைகயிறு கட்டுதல், கழுத்தில் தாயத்தை கட்டுதல் என்று பலவகையான முயற்சிகளில் ஈடுபடுகின்றன. திருஷ்டி கழிப்பதற்கு பலவகையான பொருட்கள் வந்துகொண்டிருக்கிறது. கிரேக்க நாகரீக இலக்கத்தில் “பொறாமையுடன் பார்க்கப்படும் பார்வை பொல்லாத பார்வை” என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த கண் திருஷ்டியை பற்றி ஆலன் டுண்டஸ் ஒரு பெரிய ஆராய்ச்சி நூலையே எழுதியுள்ளார். அந்த நூலின் பெயர் (The Evil Eye:A Casebook ). இந்த நூலில் அந்த கெட்ட திருஷ்டியின் மகிமையை எடுத்து கூறியுள்ளார். ஒவ்வொரு நாடுகளிலும் இந்த திருஷ்டிக்கு பல்வேறு பெயர்கள் உள்ளது. கிரேக்க, ரோமானிய, ஹிந்து நூல்களில் இந்த கண் திருஷ்டியை பற்றி அதிகமாகவே சொல்லப்பட்டிருக்கிறது. உள்ளிப்பூண்டை திருஷ்டி கழிக்கும் பொருளாக சில தேசத்தில் பயன்படுத்துகின்றனர். இதை பயன்படுத்தினால் திருஷ்டி போய்விடும் என்று நம்புகிறார்கள்.

கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்

 

சில பொல்லாத கண்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தான் குழந்தைகளுக்கு திருஷ்டி போட்டு வைக்கப்படுகிறது. மணமக்கள் வீட்டிற்கு வரும்போது கற்பூரத்தை ஏற்றி அவர்களை சுற்றி திருஷ்டி கழிப்பது வழக்கமாக உள்ளது. இதுபோன்று அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு முறையில் திருஷ்டி சுற்றி போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள்.

கண் திருஷ்டியின் அறிவியல் விளக்கம்:

கண் திருஷ்டியை அறிவியல் ரீதியில் முன்வந்து விளக்கம் கொடுத்த பிரபலமான முதல் அறிஞர் ப்ளூடார்க். மனிதர்களின் கண்களிலிருந்து வெளிவரும் சில ஆற்றல் மிக மோசமானது என்று அவர் கூறுகிறார். மேலும், “சிலருக்கு இன்னும் அதிகமான ஆற்றல் கண் பார்வையில் இருக்கிறது” என்று அவர் விளக்குகிறார். இதனால் அவர்கள் பார்வையிலையே சாபம் இட வல்லவர்கள் என்று கூறுகிறார். பொறாமை கொண்ட கண்ணுடன் ஒருவன் பார்த்தால் சுற்றி இருக்கும் சூழ்நிலையை ஒருவன் மாற்றிவிடுவான் என்று கூறுகிறார்.

திருஷ்டியினால் தலைவலி, வயிற்றுவலி போன்றவை வந்து கஷ்ட படுபவர்களுக்கு அதை போக்க சில சடங்குகள் இருக்கு என்று கூறுகிறார். இறுதியில் இதுபோன்று கண் திருஷ்டியை பற்றி ஆராய்ச்சியாளர்கள் கூறும் கருத்து இதை மூடநம்பிக்கை என்று ஒதுக்கி விட முடியாது, கண் திருஷ்டியை அனைத்து நாட்டு மக்களும் நம்புகிறார்கள்.

பல விஞ்ஞானிகள் ஆராய்ந்தும் கண் திருஷ்டி என்பது மூடநம்பிக்கை தான் என்று உணர்த்த முடியவில்லை. எனவே கண் திருஷ்டி எல்லோரிடமும் உள்ள நம்பிக்கைத் தான் என்று கூறுகிறார்கள்.

இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> ஆன்மிக தகவல்கள் 
Advertisement