கவிமணி இயற்றிய நூல்கள் | Kavimani Iyatriya Noolgal in Tamil

Advertisement

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இயற்றிய நூல்கள் 

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை குமரி மாவட்டத்திலுள்ள தேரூரில் வாழ்ந்த புகழ்பெற்ற கவிஞர் ஆவார். இவர் பக்தி சமபந்தமான பாடல்கள், குழந்தை பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள் போன்று பல நூல்களை படைத்துள்ளார். தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாக பாடல்களை எழுதினார். நாம் இந்த பதிவில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை இயற்றிய நூல்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.

பாரதியார் சிறு குறிப்பு

கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை சிறுகுறிப்பு:

  • பெற்றோர்: சிவதாணுபிள்ளை, ஆதிலட்சுமி அம்மையார்
  • துணைவியார்: உமையம்மையார்
  • ஆசிரியர்: சாந்தலிங்க தம்பிரான்
  • ஊர்: கன்னியாகுமரி மாவட்டம், தேரூர்
  • காலம்: 27.08.1876 – 26.09.1954

கவிமணியின் ஆரம்ப கால வாழ்க்கை:

  • தந்தை சிவதாணுப்பிள்ளை தான் வணங்கும் தேசிக விநாயகரின் பெயரை மகனுக்கு வைத்தார். இவர் தனது ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். இவர் தன்னுடைய 9 வயதிலையே தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்தவர்.
  • தனது பள்ளி படிப்பினை மலையாள மொழியிலே பயின்றவர்.
  • உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த பின்பு கல்லூரியில் சேர்ந்து கலையியல் மேதை (M.A) பட்டம் பெற்றார்.
  • 1901-ஆம் ஆண்டு தனது 25ஆவது அகவையில் உமையம்மையைத் திருமணம் செய்து கொண்டார்.
  • மனைவி உமையம்மை குமரி மாவட்டம் புத்தேரி என்னும் ஊரைச் சேர்ந்தவராவர்.
  • இவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாத காரணத்தால் கவிமணி தனது தமக்கை மகனான சிவதாணுவை தனது மகன் போல் வளர்த்து வந்தார்.

கவிமணி இயற்றிய நூல்கள்:

  • அழகம்மை ஆசிரிய விருத்தம் (இயற்றிய முதல் நூல்)
  • காந்தளூர் சாலை
  • மலரும் மாலையும்
  • ஆசிய ஜோதி
  • நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம் (நகைச்சுவை நூல்)
  • குழந்தைச் செல்வம்
  • தேவியின் கீர்த்தனைகள்
  • தீண்டாதார் விண்ணப்பம்
  • கவிமணியின் உரைமணிகள்
  • உமர்கய்யாம் பாடல்கள்

இவருடைய புகழ்பெற்ற பாடல் வரிகள்:

  • மங்கையராக பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா
  • தேடிப்பார்த்தாலும் சாதி தெரிவதுண்டா-அப்பா?
  • தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி.
  • தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை எடுத்துரைப்பது தமிழ்
பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

கவிமணியின் சிறப்பு பெயர்கள்:

  • கவிமணி
  • குழந்தை கவிஞர்
  • தேவி
  • நாஞ்சில் நாட்டு கவிஞர்
  • தழுவல் கவிஞர்

கவிமணியின் சிறு குறிப்பு:

  1. எட்வின் ஆர்னால்ட் என்பார் எழுதிய light of asia என்ற நூலை அழகிய தமிழில் ஆசிய ஜோதி என மொழிப்பெயர்த்துள்ளார்.
  2. பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.
  3. மும்மொழிப் புலமை வாய்ந்தவர்.
  4. தமிழின் முதல் குழந்தைக் கவிஞரான இவர் ‘Baby’ என்னும் ஆங்கிலப் பாடல் ஒன்றினைத் தமிழில் ‘குழந்தை’ என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார்.
  5. இவர் வெண்பா இயற்றுவதில் வல்லவர்.

பெற்ற விருதுகள்:

  • சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 24 டிசம்பர் 1940-ல் “தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை கவிமணி” என்ற பட்டம் வழங்கினார்.
  • 1943 இல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
  • 1954 இல் கவிமணிக்குத் தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது.
    அக்டோபர் 2005-ல் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டுச் சிறப்பித்தது.

ஆற்றிய பணி:

திருவனந்தபுரத்தில் உள்ள ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்ற இவர் ஆரம்பத்தில் கோட்டாறு நாகர்கோவில் பாடசாலையில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். இவரிடம் இருந்த ஆங்கிலப் புலமையும், தமிழ்ப் புலமையும் அவரை கல்லூரி ஆசிரியராகப் பணி உயர்த்தியது.

அதன் நிமித்தம் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். 36 வருடங்கள் ஆசிரியர் பணியைத் திறம்பட மேற்கொண்டதன் பின் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement