சீறாப்புராணம் பற்றிய சிறு குறிப்புகள்.!

Advertisement

சீறாப்புராணம் | சீறாப்புராணம் கதை சுருக்கம்

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் சீறாப்புராணம் குறிப்பு வரைக (seerapuranam nool kurippu) பற்றி பின்வருமாறு விவரித்துளோம். வாருங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.வணக்கம் நண்பர்கவே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் சீறாப்புராணம் பற்றிய சில குறிப்புகளை பற்றித்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். இவை தமிழில் எழுத்தப்பட்ட மிக சிறந்த நூலாகும். இன்னும் பல பாட  புத்தகங்களில் இடம் பெற்று வருகிறது. சீறாப்புராண பாடல்கள் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை கூறும் நூலாகும். மேலும் சீறாப்புராண நூல் குறிப்புகளையும், ஆசிரியர் குறிப்பு மற்றும் நூலின் சிறப்புகளை நம் பதிவில் தெளிவாக படித்து அறியலாம் வாங்க.

கம்பராமாயணம் பற்றிய குறிப்பு

சீறாப்புராணம் பெயர் காரணம்: 

சீறாப்புராணம்= சீறா+புராணம் என்று சீறா என்பது வாழ்க்கையை குறிக்கும், புராணம் என்பது வரலாறு என்றும் பொருள். சீறாப்புராணம் என்பதற்கு நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை பற்றி கூறும் நூலாகும். இந்த நூலானது மூன்று காண்டங்களையும் முதல் பாகத்தில்  45 படலங்களையும், இரண்டாம் பாகத்தில் 47 படலங்களையும், மூன்றாம் பாகத்தில் 92 (45+47) படலங்களையும் கொண்டுள்ளது. மொத்தம் 5027 விருத்தப்பாக்களை கொண்டுள்ளது.  இந்த நூலானது அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் உணர்த்தும் காப்பியமாக உள்ளது.

சீறாப்புராணம் ஆசிரியர் குறிப்பு| seerapuranam asiriyar kurippu:

  • சீறாப்புராணத்தை எழுதியவர் உமறுப்புலவர் ஆவர், இவரை அமுதா கவிராசர்  என்றும் அழைப்பார்கள். இவர் இஸ்லாமிய கம்பர் எனவும் அழைக்கபடுக்கிறார்.
  • இவர் இராமநாதபுரத்தை அடுத்த கீழைக்கரை என்னும் ஊரில் பிறந்தார். இவரது தந்தை செய்துமுகமது அலி ஆவார்.
  • இவரை ஆதரித்த வள்ளல் சீதக்காதி ஆவார்.  மற்றொருவர் அபுல்காசிம் மரைக்காயர் ஆவார்.
  • இவர் எட்டையபுரத்தியல் அரசவை புலவராகவும் இருந்திருக்கிறார். இவருடைய ஆசான் கடிகை முத்து புலவர் ஆவார்.
  • அப்துல்காதிர் மரைக்காயரின் வேண்டுகோலின் படி சீறாப்புராணத்தை இயற்றியுள்ளார்.
  • இவர் முதுமொழி மலை என்னும் பாக்களால் ஆனா நூலையும் இயற்றியுள்ளார்.

சீறாப்புராணம் எத்தனை காண்டங்களை உடையது:

சீறாப்புராணம் மொத்தம் மூன்று காண்டங்களை கொண்டுள்ளது, அவை

  • விலாதத்துக் காண்டம் (பிறப்பியல் காண்டம்)
  • நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்)
  • ஹிஜிறத்துக் காண்டம் (செலவியல் காண்டம் )

விலாதத்துக் காண்டம் (பிறப்பியல் காண்டம்):

சீறாப்புராணத்தில் முதல் காண்டமான விலாதத்துக் காண்டமாகும். விலாதத் என்பதற்கு  அரபுச் சொல்லுக்குப் பிறப்பு என்பது பொருள். இதில் நபிகள் நாயகத்தின் பிறப்பும், இளமையும் மற்றும் தொழில் முயற்சிகளை பற்றி  கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு கதீஜா நாயகியாரின் உறவு, அவர்கள் திருமணம் மற்றும்  பாத்திமாபிறப்புகளை பற்றி செய்தியாக கூறப்பட்டுள்ளது. இவை இருபத்து நான்கு படலங்களைக் கொண்டு உள்ளது.

நுபுவ்வத்துக் காண்டம் (செம்பொருள் காண்டம்):

இரண்டாவது காண்டமான. நுபுவ்வத் என்ற அரபுச் சொல்லானது  பொருள் தீர்க்க தரிசனம் என்பதாகும். இது நபிகள் நாயகம் நபித்துவம் என்னும் நபிப் பட்டம் பெற்றதைப்  பற்றி பாடுகிறது. வானவர் தலைவர் ஓதிய திருக்குர்ஆன் வேத உரைகள் நபிகள் நாயகத்திற்கு வெளிப்படுத்தப்பெற்றதும், அதனை நபிகள் நாயகம் மக்களுக்கு எடுத்துரைத்து அறிவுரை கூறியதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்  முஸ்லீம்களின் பொறுமையைப் பற்றியும், இசுலாம் உறுதி பெற்றது பற்றியும் இக்காண்டம் சிறப்பாக தெரிவித்துள்ளது.  இந்த காண்டத்தில்  இருபத்தொரு படலங்கள் உள்ளன.

ஹிஜிறத்துக் காண்டம் (செலவியல் காண்டம்):

இவை சீறாப்புராணத்தில் மூன்றாவதுகாண்டமாக உள்ளது, இவை ஹிஜ்ரத் என்ற அரபுச் சொல்லுக்கு இடம் பெயர்தல் என்பதுபொருளாகும்.  இவை மக்காக் குறைகளை பற்றி கூறியது ஆகும். மக்காக் குறைசிகள், நபிகள் நாயகத்திற்குக் கொடுமைகள் அதிகம் செய்தனர் . நபிகள் நாயகம் மக்காவை விட்டு, மதீனாவிற்கு வரவேண்டுமென்று அங்குள்ள மக்கள் இவரை அழைத்தனர். அந்த அழைப்பை நபிகள் நாயகம் ஏற்று அவர் அங்கு சென்றார். அதன் பிறகு இசுலாமிய அறநெறிகளை வளர்க்க மக்காவை விட்டு மதீனா நகர் சென்றார். அங்கு இசுலாமிய அறநெறி வளர்த்த வரலாறும் இக்காண்டத்தில் விவரிக்கப்படுகிறது. ஆனால் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாறு முடிவுபெறவில்லை. நபிகள் நாயகத்தின் 57  வயதுவரை நடந்த நிகழ்ச்சிகளோடு சீறாப் புராணம் நிறைவு அடைகிறது. இவை நாற்பத்தேழு படலங்களால்கொண்டுள்ளது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil

👉இதுபோன்ற பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ள pothunalam.com தளத்தை பார்வையிடவும்.

Advertisement