செவ்வாய் கிரகத்தின் குணங்கள் | Sevvai Kiragam in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று இந்த பதிவில் செவ்வாய் கிரகத்தை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். சூரிய குடும்பத்தில் மொத்தம் ஒன்பது கோள்கள் உள்ளது. அதில் ஒன்று தான் செவ்வாய் கோள், இந்த செவ்வாய் கோளின் தனி தன்மை என்னவென்றால் பூமியை போல் செவ்வாய் கிரகம் இருக்கிறது என்பதுதான். இந்த கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்காக எல்லா ஆராய்ச்சியும் செய்து வருகிறார்கள். அதில் வாழ்வதற்கான சோதனையில் 25% சாத்தியம் என்பது நிருபித்து இருக்கிறார்கள். இது போல் செவ்வாய் கிரகத்தின் முக்கியமான தகவல்களை பற்றி இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் கோள் ஆராய்ச்சியில் இந்தியாவின் இடம் | Sevvai Kol in Tamil
- பல குழந்தைகளுக்கு வானத்தில் பறப்பது, கோள்களை பார்ப்பது என நிறைய ஆசைகள் உள்ளன. உங்கள் ஆசைகளை நிறைவேற்ற தான் விஞ்ஞானிகள் நிறைய விஷயங்களை தினமும் கண்டுப்பிடித்து கொண்டிருக்கிறார்கள். இப்போது செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்காக எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறார்கள்.
- செவ்வாய் கிரகத்தின் மொத்த அளவு பூமியின் பாதிதான். அதனால் சூரியனை சுற்றிவர அதிக அளவு நேரம், நாட்கள் எடுத்துகொள்கிறது. செவ்வாய் கிரககத்தில் ஒரு வருடம் என்பது 687 நாட்கள் ஆகும்.
- செவ்வாய்கிரகம் அடர்த்தி புவியை விட குறைவானது.
- செவ்வாய் கிரகத்தில் அதிக அளவு கார்பன் நைட்ரஜன் இருப்பதால் பூமியில் மனிதனின் அளவு 100 கிலோ இருந்தால் செவ்வாய் கிரகத்தில் 50 கிலோ தான் இருக்கிறார்கள்.
- முன் இருந்த காலகட்டத்தில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்து இருக்கின்றன. செவ்வாய் கிரகத்தில் நீர்கள் இருந்தது போல தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. காலங்கள் மாற மாற தண்ணீர் வறண்டு மணல் நிறைந்த பகுதியாக மாறிவிட்டது. அதே போல் செவ்வாய் கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்கு பல ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள்.
- பூமியில் இருப்பது போல செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கும் இடம் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் உள்ள பனி பாறையாக நிரம்பி இருக்கிறது. இந்த சூரிய குடும்பமான கோள்களில் செவ்வாய் கோளில் மட்டும் தண்ணீர் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- சூரியனை சுற்றி வர செவ்வாய் கோள் அதிகம் நேரம் எடுத்துகொள்ளும், ஏனென்றால் இந்த செவ்வாய் கிரகம் மட்டும் தான் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றி வருகிறது. அதனால் ஒரு தடவை அருகிலும், ஒரு கட்டத்தில் அதிகமான தூரத்தில் சுற்றி வருகிறது. அதனால் தான் சூரியனை சுற்றி வருவதற்கு அதிகம் நாட்கள் ஆகிறது.
- செவ்வாய் கிரகத்துக்கு இந்தியா முதல் முயற்சியில் மங்கள்யான் என்ற விண்கலத்தை அனுப்பியது. அது மட்டும் இல்லாமல் குறைந்த பட்ஜெட்டில் அனுப்பிய பெருமையும் இந்தியாவை சாரும். இந்த விண்கலத்தை அனுப்புவதற்கான செலவு 75 மில்லியன் டாலர்ஸ் தான். கிராவிட்டி என்ற படத்தை எடுத்த செலவை விட இந்த விண்கலத்தை அனுப்பிய செலவுகள் குறைவுதான்.
- இப்போது MARS ONE என்ற ப்ராஜெக்ட் செயல்படுத்த உள்ளார்கள். செவ்வாய் கிரகத்துக்கு 1,00,000 லட்சம் பேர்கள் செல்வதற்காக கையெழுத்து போட்டு உள்ளார்கள்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> |
Today Useful Information in Tamil |