புதிர் விடுகதைகள் | Tamil Vidukathaigal | Easy Riddles in Tamil
நம் முன்னோர்கள் மூளை வளர்ச்சியை அதிகரிப்பதற்காகவும், மூளை திறனை மேம்படுத்துவதற்கும் பயன்படுத்தி வந்த விளையாட்டு முறைகளில் விடுகதைகளும் ஒன்று. இந்த விளையாட்டு விளையாடுவதற்கு மிகவும் எளிமையாகவும் அதே சமயத்தில் மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். விடுகதைகள் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அனைவருக்கும் பிடித்த சில எளிமையான விடுகதைகளை இந்த பதிவில் விடையுடன் கொடுத்துள்ளோம், அதை படித்து அனைவரும் பயன்பெறுங்கள்.
தமிழ் விடுகதைகள் With Answer:
1.அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை அது என்ன
விடை: தலை வகிடு
2. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்
விடை: நிழல்
3.வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?
விடை: முட்டை
4. நீ எங்கு சென்றாலும் தொடர்ந்து வருவான் அவன் யார்?
விடை: நிழல்
5. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
விடை: நத்தை
6. வாயில் இருந்து நூல் போடுவான், மந்திரவாதி இல்லை; கிளைக்கு கிளை தாவுவான் ஆனால் குரங்கு இல்லை; வலை விரித்து பதுங்கி இருப்பான் ஆனால் வேடன் இல்லை – அவன் யார்?
விடை: சிலந்தி
7. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
விடை: தையல் ஊசியும் நூலும்
8. எவர் கையிலும் சிக்காத கல், எங்கும் விற்காத கல் அது என்ன?
விடை: விக்கல்
விடுகதைகள் தமிழில்:
9. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
விடை: நிழல்
10. செய்தி வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே அவன் யார்?
விடை: தொலைபேசி
11. அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது அது என்ன?
விடை: தண்ணீர்
12. ஊர் முழுவதும் சுற்றுவேன், வீட்டுக்குள் நுழைய மாட்டேன் நான் யார்?
விடை: செருப்பு
13. கூரை வீட்டைப் பிரித்தால் ஓட்டு வீடு. ஓட்டு வீட்டுக்குள்ளே வெள்ளை மாளிகை. வெள்ளை மாளிகையின் நடுவே ஒரு குளம். அது என்ன?
விடை: தேங்காய்
14. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன் அவன் யார்
விடை:தலையணை
15. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்
விடை:சீப்பு
16. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
விடை: பூசனிக்கொடி
17. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
விடை: பென்சில்
18. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான் அவன் யார்?
விடை: கரும்பு
19. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
விடை: தலைமுடி
20. மூன்றெழுத்துப் பெயர், உடல் முழுவதும் வெள்ளை நிறம் அது என்ன?
விடை: பஞ்சு
விடுகதைகள் தமிழில் வேண்டும் – Easy Tamil Riddles With Answers:
21. இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
விடை: தேள்
22. உடம்பெல்லாம் சிவப்பு அதன் குடுமி பச்சை அது என்ன?
விடை: தக்காளி
23. எத்தனை தடவை சுற்றினாலும் தலை சுற்றாது அது என்ன?
விடை: மின் விசிறி
24. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
விடை: வாழைப்பழம்
25. முதுகிலே சுமை தூக்கி முணு முணுக்காமல் அசைந்து வரும் அது என்ன?
விடை: நத்தை
26. ஊர் சுற்ற கூட வருவான் ஆனால் உள்ளே வரமாட்டன் அவன் யார்?
விடை: செருப்பு
27. உரச உரச குழைவான், பூச பூச மனப்பான் அவன் யார்?
விடை: சந்தனம்
28. தொப்பி போட்ட காவல் காரன், உரசி விட்டால் சாம்பல் ஆவான் அவன் யார்?
விடை: தீக்குச்சி
29. கரைந்து போகுது வெள்ளி தட்டு
விடை: தேய் பிறை
30. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
விடை: கண்
31. இவனும் ஒரு பேப்பர் தான் ஆனால் மதிப்போடு இருப்பான் அவன் யார்?
விடை: பணம்
32. வீட்டுக்கு வந்த விருந்தாளியை வரவேற்க ஆளில்லை அது என்ன?
விடை: செருப்பு
33. ஒற்றை கால் மனிதனுக்கு ஒன்பது கை அது என்ன?
விடை: மரம்
34. தாகம் தீர்க்கும் தண்ணீர் சொம்பு அந்தரத்தில் தொங்குது அது என்ன?
விடை: இளநீர்
விடுகதைகள் தமிழில் பதில் கொண்டு வேண்டும்:
35. சின்ன கதவுகள், லட்சம் முறை மூடி திறந்தாலும் ஓசை வராத கதவுகள் அது என்ன?
விடை: கண் இமைகள்
36. எண்ணெய் குடித்துவிட்டு ஏழு கடல் தாண்டுவான் அவன் யார்?
விடை: விமானம்
37. குண்டு ராஜாவுக்கு குடல் முழுக்க பல் அது என்ன?
விடை: மாதுளை
விடுகதைகள் With Answer in Tamil:
38. தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான் அவன் யார்?
விடை: தொலைபேசி
39. முறையின்றி தொட்டால் ஒட்டிக்கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?
விடை: மின்சாரம்
40. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்க முடியாது அவன் யார்?
விடை: நிழல்
மேலும் விடுகதை கேள்வி பத்திகளை தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்து படியுங்கள் |
விடுகதைகள் | Vidukathaigal |
சிறந்த விடுகதைகள் மற்றும் விடைகள் |
குழந்தைகளுக்கான விடுகதைகள் |
விடுகதை விளையாட்டு விடைகள் |
கணக்கு விடுகதைகள் |