ரம்ஜான் நோன்பு இருப்பது எப்படி? | Ramadan Nombu Irupathu Eppadi

Advertisement

நோன்பின் நன்மைகள் | Ramadan Fasting Benefits in Tamil

விரத முறைகளில் மிக கடினமான விரதம் எதுவென்றால் இந்த இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கும் நோன்பு விரதம் தான். சூரியன் உதயமாகும் முன்பே சாப்பிட்டு பின்னர் நாள் முழுவதும் நீர் அருந்தாமல் எச்சில் விழுங்காமல் விரதத்தை கடைப்பிடிப்பார்கள். உடல்நிலை ஒத்துவராதவர்கள் மட்டும் தண்ணீர், பால் அருந்துவார்கள். வருடா வருடம் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த நோன்பினை எடுப்பது வழக்கமாக இருக்கிறது. வாங்க இந்த பதிவில் ரம்ஜான் நோன்பு எடுக்கும் முறையும், அந்த விரதத்தை எடுப்பதால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கிறது என்று தெரிந்துக்கொள்ளலாம்.

ரம்ஜான் நோன்பு இருப்பது எப்படி?

இந்த ரமலான் விரதமானது 30 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் இந்த விரதத்தை அல்லாவிற்காக மேற்கொள்கிறார்கள்.

இந்த வருடம் ரமலான் நோன்பானது ஏப்ரல் 03 தொடங்கி வானில் பிறை நிலையை பொறுத்து மே 2 அன்று நோன்பு முடிவடைகிறது.

காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே உணவு உண்டு பின்னர் ஒரு சிறு பிரார்த்தனை (நிய்யத்) செய்து நோன்பு வைக்கப்படுகிறது. மாலை சூரியன் அஸ்தமிக்கும் நேரம் சிறு பிரார்த்தனை (துஆ) செய்து உணவு உண்டு நோன்பு திறக்கப்படுகிறது (முடித்து வைக்கப்படுகிறது).

நோன்பு வைத்தத்திலிருந்து நோன்பு திறக்கும் வரையில் எதுவும் உண்ணவோ அருந்தவோ கூடாது. அப்படி நாம் நோன்பு நேரத்தில் ஏதேனும் உணவு உண்டால் நாம் எடுக்கும் விரதமானது செல்லாது.

இஸ்லாமியர்களின் நிய்யத், துஆ, ஸலாஹ், ஸஹர், இஃப்தார் என்பதற்கு அர்த்தம்:

  • நிய்யத் – உங்கள் நோக்கத்தையும் மன விருப்பத்தையும் அல்லாவிடம் கேட்கும் சிறுவேண்டுதல் .
  • துஆ – அல்லாஹ்விடம் கேட்கும் வேண்டுதல்.
  • ஸலாஹ் – தொழுகை – இஸ்லாமிய தொழுகை
  • ஸஹர் – நோன்பு வைக்கும் அதிகாலை நேரம்.
  • இஃப்தார் – நோன்பு திறக்கும் நேரம்.
சோமவார விரதம் இருக்கும் முறை

ரமலான் நோன்பினை கடைப்பிடிக்கும் முறை:

  1. நோன்பு எடுக்கும் நாளில் நோன்பினை கடைப்பிடிக்கும் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே நாம் எழுந்துவிட வேண்டும்.
  2. பல் துலக்கி விட்டு காலை உணவினை சாப்பிடலாம் காலையில் உணவினை அதிகமாக சாப்பிட வேண்டாம், அன்றைய நாளில் பேரீச்சம் பழத்தை அதிகமாக சாப்பிடுங்கள். ஏனெனில் அது நாள் முழுவதும் உடலுக்கு ஆற்றலை கொடுத்து அசதியை ஏற்படுத்தாது.
  3. நோன்பு எடுக்கும் போது மனதில் பதட்டம் இல்லாமல் இருக்க வேண்டும்.
  4. இப்போது உங்கள் நிய்யத்தை சொல்லி நோன்பினை ஆரம்பிக்கலாம். நிய்யத்தை எந்த மொழியில் வேண்டுமானாலும் சொல்லலாம்.
  5. அரபு மொழி (وَبِصَوْمِ غَدٍ نَّوَيْتُ مِنْ شَهْرِ رَمَضَانَ) | ஒலிபெயர்ப்பு (வ பிசவ்மி கதின் நவ்வய்த்து மின் சஹரி ரமலான்) | தமிழ் மொழி (அல்லாஹ்வுக்காக ரமலான் மாதத்தில் நோன்பு நோற்க விரும்புகிறேன்).
  6. உங்கள் நிய்யத்தை சொல்லி முடித்தவுடன் அதன் பிறகு உணவினை உண்ணுதல் கூடாது.
  7. நோன்பு திறப்பதற்கு தேவையான உணவுகளை முன்னரே தயாரித்து வைத்துக்கொள்ளுங்கள்.
  8. நீங்கள் நோன்பு திறக்க தயாராகிவிட்டால் நோன்பு திறக்கும் நேரத்தை அதாவது இப்தார் நேரத்தை சரியாக பார்த்துக்கொள்ளுங்கள்.
  9. நோன்பு திறப்பதற்கு 05 அல்லது 10 நிமிடத்திற்கு முன்பே உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும்.
  10. நோன்பு திறப்பதுற்கு முன் நீங்கள் அல்லாஹ்விடம் துஆ வேண்டுதல் செய்யலாம். தமிழிலேயே கேட்கலாம். துஆ உங்களை பற்றியோ, பெற்றோர்களை பற்றியோ, கல்வி, செல்வம், வாழ்க்கை வளத்தை பற்றியோ கேட்கலாம். அல்லாஹ் உங்களுக்கு அருளையும், வளத்தையும் கொடுப்பார்.
  11. நோன்பு திறக்கும் நேரம் வந்தவுடன் துஆ பிரார்த்தனையை கூறி நோன்பினை முடித்து கொள்ளலாம்.
  12. ஒலிபெயர்ப்பு (அல்லாஹும்ம இன்னி லக சம்து வ பிக்க ஆமன்து வ அலைக்க தவக்கல்த்து வ அலா ரிஸ்கிக்க அஃப்தர்த்து) | அரபு மொழி (اللَّهُمَّ اِنِّى لَكَ صُمْتُ وَبِكَ امنْتُ وَعَليْكَ تَوَكّلتُ وَ عَلى رِزْقِكَ اَفْطَرْتُ) | தமிழ் மொழி (அல்லாஹ்வே! நான் உனக்காக நோன்பு இருந்தேன் மேலும் நான் உன்னை நம்புகிறேன், நான் உன் மீது நம்பிக்கை வைக்கிறேன் மேலும் உன் வாழ்வாதாரத்தால் எனது நோன்பை திறக்கிறேன்).
  13. இப்போது நீங்கள் உணவினை உண்ணலாம். பேரீச்சம்பழத்தில் ஆரம்பித்து உணவை முடிக்கவும்.
  14. உணவு உண்ட பின் விரும்பினால் மாலை நேர தொழுகையை (மக்ரிப்) தொழுங்கள். பின்னர் இரவு தொழுகையை (இஷா) தொழுங்கள்.
  15. இரவு நேரத்தில் கொஞ்சமாக உணவு உண்டு, மறுநாள் காலை இதே போல் நோன்பு நோற்கவும். 30 நாட்களும் நோன்பை நிறைவு செய்து ரமலான் பெருநாளை கொண்டாடுங்கள்.

நோன்பின் நன்மைகள்:

  1. ரமலான் நோன்பு இருக்கும் போது உடலில் தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய தொடங்கும்.
  2. உடலில் கொலஸ்ட்ரால் அளவானது குறைந்து இரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்.
  3. உடலில் கலோரிகள் பிரச்சனைகள் ஏற்படாது.
  4. நோன்பு என்பது நமக்கு உண்டாகும் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும் நோய்த் தொற்றுக்களை எதிர்த்துப் போராடவும் பேருதவி புரிகிறது.
  5. நோன்பின் கடைசி 15 நாட்களில் நம்முடைய உடல் சில மாற்றம் அடைந்து காணப்படும். பெருங்குடல், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவை இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் உடலில் இருக்கும் கழிவுகளை அகற்றி வெளியேற்றும்.
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement