வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன் தெரியுமா.?

Pambu Veetukul Vanthal Kanavu Palan in Tamil

Pambu Veetukul Vanthal Kanavu Palan in Tamil

வணக்கம் நண்பர்களே.! இன்று வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வோம். எல்லாருக்குமே கனவு வரும். அந்த கனவு விடியற்காலையில் கண்டால் பழித்துவிடும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள். தினமும் ஒவ்வொரு விதமான கனவு வரும். இப்படி கனவு வருதே என்று பயந்துவிடும். அதில் ஒன்று தான் பாம்பு. பாம்பை நேரில் கண்டால் பயப்படுவதில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால் கனவில் கண்டாலே பயம் வந்துவிடும். அப்படி என்ன பலன்கள் இருக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ வெள்ளிக்கிழமை பாம்பு பார்த்தால்

வீட்டிற்குள் பாம்பு வருவது போல் கனவு கண்டால்:

பாம்பு வீட்டுக்குள் வந்துவிட்டு வெளியில் போவது போல் கனவு வந்தால் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றவேண்டும்.

நம் தலைக்குமேல் குடை பிடிப்பது போன்றோ, பாம்பு நம் மீது ஏறிச்செல்வது போன்றோ கனவு வந்தால், அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கப் போகிறதென்று பொருள்.

பாம்பு உங்களுடைய வீட்டில் வெளியேறுவது போல் கனவு கண்டால் இதுவரைக்கும் ஏற்பட்டிருந்த கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

வீட்டிற்குள் நுழைந்த பாம்பை அடித்து கொள்வது போல் கனவு கண்டால் உங்கள் சுற்றி உள்ளவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள்.

வீட்டிற்குள் நுழைந்த பாம்பு யாரையாவது கடிப்பது போல் கனவு கண்டால் நீங்கள் அதிகம் நம்பும் நபர் உங்களை ஏமாற்றி விடுவார்கள்.

நல்ல பாம்பு வீட்டிற்குள் வருவது போல் கனவு கண்டால் குடும்பத்தில் நன்மைகள் நடக்கும்.

நல்ல பாம்பு வீட்டில் சுற்றுவது போல் கனவு கண்டால் நோய்கள் ஏற்படும்.

நல்ல பாம்பு வீட்டில் மறைந்து இருப்பது போல் கனவு கண்டால் வீட்டில் உள்ளவர்களால் பிரச்சனை ஏற்படும்.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil