பாலை நிலம் பற்றி | Palai Thinai Details in Tamil
வாசகர்கள் அணைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பாலை நிலம் பற்றிய விவரங்களை பின்வருமாறு கொடுத்துள்ளோம். பாலை நிலத்தை நாம் படத்தில் பார்த்து இருப்போம். நீர் இல்லாமல், வெறும் மணலும் மணல் சார்ந்தும் இருக்கும் பகுதி பாலை வனம் ஆகும். அதனை தவிர்த்து வேறு எதுவும் பாலை நிலம் பற்றி தெரிந்திருக்காது. ஆகையால், அதனை பாலை நிலம் பற்றி தெரிந்துகொள்ளும் விதமாக இப்பதிவு அமையும்.
திணை வகைகளை பற்றி நாம் பள்ளி பாடத்தில் படித்து தெரிந்திருப்போம். திணை வகைகளில் திணைகளை ஐந்து வகையாக பிரித்து வைத்திருக்கிறார்கள். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பாலை நிலமானது மணலும் மணல் சார்ந்த இடத்தினையும் குறிக்கிறது. பாலை நிலத்தின் கருப்பொருள், பாலை நிலத்தினுடைய பொழுதுகள், இயல்பு ஆகியவற்றை படித்து தெரிந்துக்கொள்ளுவோம்.
முல்லைத் திணை விளக்கம் |
பாலை திணை:
மணலும் மணல் சார்ந்த இடத்தை தான் பாலை நிலம் என்று அழைத்து வருகிறார்கள். பாலை நிலத்தில் நீர் இல்லாமல் வறண்ட தன்மையுடன் உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதியற்ற வெப்பம் நிறைந்த நிலம் தான் பாலை திணை. பாலை நிலத்தில் வெப்பம் நிறைந்த மாதமான மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மாதங்களில் கடுமையான வெப்ப தன்மை நிலவும். பாலை திணை என்பது தனி நிலம் அல்ல. குறிஞ்சி நிலமும், முல்லை நிலமும் மழை இல்லாமல் காய்ந்து போன நிலமே பாலை திணையாகும்.
இந்த மாதங்கள் அந்த நிலத்திற்குரிய பெரும்பொழுதுகள் (1) என்று கூறப்படுகிறது. அதுபோன்று நண்பகல் பொழுதுக்கான சிறுபொழுது (2) ஆகும்.
(1) பெரும்பொழுது – ஓர் ஆண்டினுடைய பிரிவுகள்.
(2) சிறுபொழுது – ஒரு நாளின் பிரிவுகள்
பாலை நிலத்திற்குரிய உரிய பொழுதுகள்:
நிலம் | பெரும்பொழுது | சிறுபொழுது |
பாலை | இளவேனில் காலம் (சித்திரை, வைகாசி), முதுவேனிற்காலம் (ஆனி, ஆடி), பின்பனிக் காலம் (மாசி, பங்குனி). | நண்பகல் (காலை 10 மணி – பிற்பகல் 2 மணி) |
பாலை நிலம் கருப்பொருள்:
தெய்வம் | கொற்றவை |
மக்கள் | எயினர் (வேட்டுவர்), விடலை, காளை, மறவர், மறத்தியர் |
பறவை | பருந்து, கழுகு, புறா |
மரம் | உழிஞ, பாலை, இருப்பை |
மலர் | மராம்பு |
பண் | பஞ்சுரப் பண் (பாலை) யாழ் |
பறை | ஆறலை, சூறைகோள் |
தொழில் | வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல் |
உணவு | ஆறலைத்தலால் வரும் பொருள் |
நீர் | கிணறு |
விலங்கு | வலியிலந்த புலி, செந்நாய் |
யாழ் | பாலையாழ் |
ஊர் | குறும்பு |
ஐவகை நிலங்கள் |
பாலை நிலத்தின் உரிப்பொருள்:
- அக ஒழுக்கம் : பிரிதல்
- புற ஒழுக்கம் : வாகை
பாலை நிலத்தின் இயல்பு:
- விரிந்து பரந்த நெடிய மணல் பரப்பு.
- பொதுவாக உயிரினங்கள் வாழ்வதற்குப் பொருத்தமற்ற சூழல்.
- நீர் இல்லாத வறண்ட பகுதி.
- வெப்பம் அதிகமான நிலப் பகுதி.
- சுழல் காற்று (சுழன்று வேகமாக வீசும் காற்று) மிகுந்த பகுதி.
- வழிப்பறிக் கொள்ளையர்கள் (வழிப் போக்கர்களைத் தாக்கி அவர்களின் பொருள்களைக் கவர்ந்து செல்வோர்) வாழும் பகுதி.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |