Advertisement
யானை பற்றிய தகவல்கள் தமிழ் | Yanai Patriya Thagavalgal in Tamil
இந்த உலகத்தில் பல விதமான விலங்குகள் உள்ளன. ஒவ்வொரு விலங்கும் உருவத்திலும், நிறத்திலும், குணத்திலும் வேறுபட்டவையாக இருக்கும். எப்படி மனிதர்களுக்கு ஒரு தனித்துவமான சிறப்புகள் உள்ளதோ அதே போன்று விலங்குகளுக்கும் தனித்துவமான சிறப்புகள் உள்ளது. நாம் இந்த பதிவில் உருவத்தில் பெரிய அளவில் இருக்கும் யானை பற்றிய ஒரு தொகுப்பை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.
யானை பற்றிய 5 வரிகள்:
- இந்த உலகத்தில் மிகப்பெரிய பாலூட்டி இனம் யானை ஆகும். யானைகளில் மூன்று சிற்றினங்கள் உள்ளன அவை ஆப்பிரிக்கப் புதர்வெளி யானைகள், ஆப்பிரிக்கக் காட்டு யானைகள், ஆசிய யானைகள்.
- இந்தியாவில் உள்ள பெண் யானைக்கு தந்தம் கிடையாது, ஆசியாவில் உள்ள பெண் யானைக்கு தந்தம் உண்டு. இதன் சராசரியான வாழ்நாள் எழுபது ஆண்டுகள். ஏறக்குறைய மனித வாழ்நாளை ஒத்த உயிரினமாக இது உள்ளது.
- ஆண் யானையை களிறு என்றும், பெண் யானையை பிடி என்றும் அழைக்கின்றனர். பெண் யானைகளின் கர்ப்ப காலம் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
- ஆண் யானை பொதுவாக மூன்று மீட்டர் உயரமும் 6000 கிலோ கிராம் எடையையும் கொண்டிருக்கும். யானையின் தோல் சுமார் 3 செ.மீட்டர் தடிமனாக இருக்கும்.
- யானைகளால் மனிதர்களின் குரலை வைத்து ஆணா, பெண்ணா என்று அடையாளம் கண்டு கொள்ள முடியும்.
யானை பற்றிய 10 வரிகள்:
- இரண்டு முதல் மூன்று மணி நேரம் மட்டுமே யானைகள் உறங்குகின்றன. மற்ற நேரத்தில் காடுகளை உலாவி வருகின்றன.
- விலங்குகளில் அதிக அளவு நியாபகத்திறனை கொண்டுள்ள விலங்கினம் யானை.
- யானை இறந்துவிட்டால் மற்ற யானைகள் இறந்த யானையை அடக்கம் செய்கின்றன. அதே போல் யானைக்கு உடம்பு சரி இல்லையெனில் மற்ற யானைகள் தொற்று உள்ள யானையை கவனித்து கொள்கின்றன.
- யானைகள் மற்ற விலங்குகளை போல அடித்து கொள்ளாமல் ஒற்றுமையாக வாழக்கூடியவை.
- யானையால் துள்ளி குதிக்க முடியாது. மன அழுத்தம் போன்ற நோய்கள் யானைக்கும் உள்ளது.
- யானையின் இரண்டு தந்தமும் சம அளவில் இருக்காது. யானையின் தும்பிக்கை 40,000 தசைகளால் ஆனது.
- இவற்றின் தந்தங்கள் நல்ல விலைக்கு போவதால் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. யானையின் பற்கள் ஐந்து கிலோ எடை கொண்டது.
- யானை இனத்தை அழிக்காமல் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செப்டம்பர் 2-ம் தேதி யானைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
- இவைகள் நீர் நிலைகளை கண்டால் சிறு குழந்தைகளை போல விளையாடி மகிழ்கின்றன. சரக்குகள் மற்றும் பெட்டிகளை இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்தபட்டன.
- இவைகள் பிறக்கும் போது பார்வை திறன் அற்றவையாக உள்ளது. அளவில் பெரியதாக இருக்கும் யானைக்கு எறும்பு, தேனீக்கள் எதிரியாக உள்ளது. இந்தோனேஷிய தீயணைப்பு துறையில் யானைகள் தீயை அணைப்பதற்கு பயன்படுகிறது.
யானை எத்தனை வருடத்திற்கு ஒரு முறை குட்டி போடும்?
- நான்கு வருடங்களுக்கு ஒரு முறை குட்டி போடும்.
யானைகளுக்கு பிடிக்காத நிறம் எது?
- சிவப்பு நிறம் பிடிக்காது
ஒட்டகச்சிவிங்கி பற்றிய தகவல்கள் |
இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today useful information in tamil |
Advertisement