வானிலை செய்திகள் தமிழ்நாடு | Vaanilai Seithigal
Vaanilai Arikkai in Tamil Today 2024 / இன்றைய வானிலை: தமிழ்நாட்டில் பல மாவட்டத்தில் வெயில் கடுமையாக இருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் மக்களை மகிழ்ச்சி நிலையில் வைத்திருக்கிறது. மக்கள் அனைவருக்கும் மழை காலம் வந்து விட்டாலே இன்று எந்த மாவட்டத்தில் அதிக மழைக்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ள செய்தியை தினம்தோறும் பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். வெளியில் பணிக்கு செல்லும் நபர்களுக்கு வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் வானிலை செய்திகளை தெரிந்துக்கொள்ள நேரம் இருக்காது. அவர்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க எங்களுடைய பொதுநலம்.காம் பதிவில் வானிலை செய்திகளை (vaanilai seithigal) பற்றி அப்டேட் செய்கிறோம். இந்த பதிவானது அனைவருக்கும் மிக பயனுள்ள பதிவே.. அனைவரும் படித்து பயன் அடையுங்கள்..!
வானிலை செய்திகள் தமிழ்நாடு:
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்:
மதியம் 1 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அவை என்னென்ன மாவட்டங்கள் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
இன்றைய வானிலை நிலவரம் (14.05.2024):
செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா 7 செ.மீ., மழைப் பொழிவு பதிவாகியுள்ளன.
நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும்.
தென், மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வானிலை அறிக்கை சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Today Useful Information in tamil |