உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘A’ வாக இருந்தால் உங்களின் குணம் இப்படி தான் இருக்கும்..!

Advertisement

‘A’ Letter Name Characteristics in Tamil..!

வணக்கம் நண்பர்களே… இன்றைய பதிவில் ‘A’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை  கொண்டவர்களின் குணங்கள் எப்படி இருக்கும்.?  என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்வோம். இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனுக்குமே ஒவ்வொரு விதமான குணங்கள் இருக்கும். ஒவ்வொரு மனிதனுமே வெவ்வேறு குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். நாம் இதுவரை இந்த பதிவில் ராசியை வைத்து அவர்களின் குணத்தை தெரிந்திருப்போம். ஆனால் இன்று நாம் இந்த பதிவின் மூலம் அவர்களின் முதல் எழுத்தை வைத்து குணங்களை தெரிந்து கொள்ள போகிறோம். வாங்க நண்பர்களே ‘A’ எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர்களை கொண்டவர்களின் குணங்கள் எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் ⇒ P என்ற எழுத்தில் தொடங்கும் பெயரின் குணங்கள்

A எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் எப்படி இருப்பார்கள்..? 

ஒவ்வொரு மனிதனுக்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் பெயர்கள் தான். இந்த உலகத்தில் பெயர்களே இல்லாத உயிரினம் என்று எதுவும் கிடையாது. அனைத்து உயிரினத்திற்கும் அனைத்து பொருட்களுக்கும் ஒரு பெயர் கட்டாயமாக இருக்கும். அந்த வகையில் ‘A’ எழுத்தில் தொடங்கும் பெயர்கள் கொண்டவர்களின் குணங்கள் பற்றி பார்ப்போம்.

‘A’ என்ற எழுத்தை பெயராக கொண்டவர்கள் அனைவரிடத்திலும் அன்புடனும் பாசமாகவும் இருப்பார்கள். இவர்கள் வாழ்க்கையில் பொறுப்பானவர்களாகவும் இருப்பார்கள். வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

‘A’ என்ற எழுத்தை முதலாக கொண்டவர்கள் புத்திசாலிகளாக இருப்பார்கள். இவர்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நீங்கள் சொந்த முயற்சியில் எதையும் சாதிக்கும் வல்லமை படைத்தவர்களாக இருப்பீர்கள். இந்த எழுத்தை கொண்டவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

எந்த ஒரு பிரச்சனையையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். உங்கள் மனதில் பயம் இருந்தாலும் அதை வெளிப்படுத்தமாட்டீர்கள். அனைத்து விஷயங்களிலும் பிடிவாதம் பிடிப்பவர்களாக இருப்பார்கள்.

இந்த ‘A’ எழுத்தை கொண்டவர்கள் தங்கள் பேச்சை தான் மற்றவர்கள் கேட்கவேண்டும் என்று நினைப்பீர்கள். இவர்கள் நினைத்ததை முடிப்பதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள். அதிகளவு கோபம் உடையவர்களாக இருப்பீர்கள்.

இந்த ‘A’ எழுத்தை கொண்டவர்கள் கல்வியில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள். தன்னுடைய சொந்த முயற்சியால் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும்.

இவர்களிடம் மன்னிக்கும் குணம் குறைவாகவே காணப்படும். இவர்களுக்கு கஷ்டம் தந்தவர்களை மன்னிக்க தயங்குவார்கள்.

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> www.pothunalam.com
Advertisement