வசம்பு பற்றிய சில குறிப்புகள்..! | Acorus Calamus in Tamil

Acorus calamus information in tamil

வசம்பு பற்றிய தகவல்..! | Acorus Calamus in Tamil

இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் பார்க்க இருப்பது நாம் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்த வசம்பு பற்றிய சில தகவல்களை பற்றி தான். பொதுவாக நாம் அனைவருக்குமே வசம்பு பற்றியும் அதனுடைய மருத்துவ குணங்களை பற்றியும் தெரிந்திருக்கும். ஆனால் அதனை பற்றிய முழுவிவரங்களும் தெரிந்திருக்காது.

உதாரணமாக அதனின் பிறப்பிடம், வேறுபெயர்கள் போன்ற தகவல்கள் தெரிந்திருக்காது. அதனால் இன்றைய பதிவில் வசம்பு பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் விரிவாக காணலாம்.

Acorus calamus information in tamil :

Vasambu uses in tamil

பொதுவாக வசம்பு (Acorus calamus மற்றும் Sweet Flag) என்பது ஒரு மூலிகை தாவரமாகும். மேலும் இந்த வசம்பு என்பது ஏரி மற்றும் ஆற்றுக்கரையோரங்களில் வளரக்கூடிய ஒருவகை பூண்டு ஆகும்.

பொதுவாக இதற்கு சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் நீர் பிடிப்புள்ள பகுதிகள் மிகவும் ஏற்றவையாக உள்ளது. மேலும் வசம்பின் வேர் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் இலைகள் 2-3 அடி உயரம் வரை வளரக்கூடியது. இதன் வேர்கள் மஞ்சள் கிழங்கைப்போல் நெருக்கமான கணுக்களையுடையது. இதன் தண்டு மற்றும் வேர் பெருவிரல் அளவு தடிமன் உடையதாகவும் தண்டின் மேற்பகுதி சாம்பல் நிறத்துடனும் காணப்படும்.

இதன் வேர்கள் பூமிக்கடியில் சுமார் 3 அடி நீளம் வரை படரக்கூடியது. இந்த வேர்கள் தான் வசம்பு என்பார்கள். வசம்பை  நட்ட ஒரு ஆண்டில் பயிர் முதிர்ந்து மஞ்சள் நிறமாக மாறும் தருணத்தில் கிழங்கை வெட்டி எடுக்க வேண்டும்.

இது நல்ல நறுமணத்தை கொண்டிருக்கும். இது தனது கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்கின்றது.

பிறப்பிடம்:

வசம்பு பொதுவாக தென்கிழக்கு அமெரிக்கா பிறப்பிடமாக கொண்டுள்ளது.

வசம்பு இந்தியாவில் மணிப்பூரிலும், நாகமலையிலும், கேரளாவிலும் அதிகமாக வளர்கிறது.

மேலும் அரபு நாடுகளிலும், ஐரோப்பா முழுவதிலும், தென் உருசியாவிலும், சின்னாசியாவின் வடக்கிலும், தென் சைபீரியா, சீனா, இந்தோனேசியா, ஜப்பான், மியான்மர், இலங்கை, அவுத்திரேலியா, தென் கனடா, ஐக்கிய அமெரிக்காவின் வடபகுதி ஆகிய இடங்களிலும் பரவலாகக் காணப்படுகிறது.

வேறுபெயர்கள்: 

வசம்பு பொதுவாக Acorus calamus அல்லது Sweet Flag, பேர் சொல்லா மருந்து, பிள்ளை வளர்த்தி, மற்றும் உரைப்பான் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறது.

பயன்கள்:

Vasambu in tamil

வசம்பு பொதுவாக காரச்சுவை கொண்டது. இது பசியைத் தூண்டுகிறது, வயிற்று உப்புசம், வயிற்றுப் பொருமல், வயிறு கனமான உணர்வு போன்றவற்றுக்கு சிறந்த மருந்தாகும். மேலும் வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது.

இதையும் படியுங்கள்=>வசம்பு மருத்துவ குணங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil