அடக்கமுடைமை அதிகாரம் விளக்கம் | Adakkam Amararul Thirukkural Porul in Tamil

Advertisement

Adakkam Amararul Thirukkural Porul in Tamil

நாம் பள்ளி பருவத்தில் மட்டுமே திருக்குறளை படித்திருப்போம். அதுவும் அதனை படித்தால் தேர்வுகளில் கேட்கப்படும் திருக்குறளை நாம் எளிது ஆசிரியர்களும் மதிப்பெண் வாங்குவதற்கு மட்டுமே படித்திருப்போம். ஆனால் அந்த திருக்குறளை யாரும் புரிந்துகொண்ட படிப்பதில்லை, மடப்பாடம் செய்து தான் அந்த திருக்குறளை நாம் படித்து வைத்திருப்போம். உண்மையில் நமது வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்து விஷயங்களும் வெறும் 1330 திருக்குறளில் அடங்கி உள்ளது. இதனை நாம் தின்தோறும் படித்தால் நம் வாழ்க்கைநெறிகளை சரியாக பின்பற்றுவோம் அல்லது முயற்சியாவது செய்வோம். ஆகவே நாம் தினமும் ஒரு திருக்குறளை படித்து அதனையுடைய விளக்கத்தை தெரிந்து கொள்வது சிறந்த ஒரு செயலாகும். சரி இந்த பதிவில் அடக்கமுடைமை அதிகாரத்தில் விளக்கத்தை படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

அடக்கமுடைமை திருக்குறள்:

பால்: அறத்துப்பால்.
இயல்: இல்லறவியல்.
அதிகாரம்: அடக்கமுடைமை.

குறள் 121:

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

அடக்கமுடைமை அதிகாரம் விளக்கம்:-

மணக்குடவர் உரை:

மன மொழி மெய்களை யடக்கி யொழுக அவ்வடக்கம் தேவரிடத்தே கொண்டு செலுத்தும்: அவற்றை யடக்காதொழிய அவ்வடங்காமை தானே நரகத்திடைக் கொண்டு செலுத்திவிடும். மேல் பலவாகப் பயன் கூறினாராயினும், ஈண்டு அடக்கத்திற்கும் அடங்காமைக்கு மிதுவே பயனென்று தொகுத்துக் கூறினார்.

பரிமேலழகர் உரை:

அடக்கம் அமரருள் உய்க்கும் – ஒருவனை அடக்கம் ஆகிய அறம் பின் தேவருலகத்து உய்க்கும்; அடங்காமை ஆர்இருள் உய்த்துவிடும் – அடங்காமையாகிய பாவம் தங்குதற்கு அரிய இருளின்கண் செலுத்தும். (‘இருள்’ என்பது ஓர் நரக விசேடம். “எல்லாம் பொருளில் பிறந்துவிடும்” (நான்மணி.7) என்றாற்போல, ‘உய்த்துவிடும்’ என்பது ஒரு சொல்லாய் நின்றது.).

மு. வரதராசன் உரை:

அடக்கம் ஒருவனை உயர்த்தித் தேவருள் சேர்க்கும்; அடக்கம் இல்லாதிருத்தல், பொல்லாத இருள் போன்ற தீய வாழ்க்கையில் செலுத்தி விடும்.

மு. கருணாநிதி உரை:

அடக்கம் அழியாத புகழைக் கொடுக்கும். அடங்காமை வாழ்வையே இருளாக்கி விடும்.

சாலமன் பாப்பையா உரை:

அடக்கம் ஒருவனைப் பிற்காலத்தில் தேவர் உலகிற்குக் கொண்டு சேர்க்கும்; அடங்காமல் வாழ்வதோ அவனை நிறைந்த இருளுக்குக் கொண்டு போகும்.

தொடர்புடைய பதிவுகள்
திருக்குறள் அதிகாரம் 9
முகநக நட்பது நட்பன்று திருக்குறள்
அலகிட்டு வாய்பாடு 10th திருக்குறள்
திருக்குறள் இயல்கள்
திருக்குறள் அதிகாரம் 2 வான் சிறப்பு

 

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Today Useful Information in tamil
Advertisement