ஐந்திணை ஐம்பது மற்றும் ஐந்திணை எழுபது நூல்கள் பற்றிய தகவல்கள்..!

ஐந்திணை ஐம்பது  ஐந்திணை எழுபது 

ஐந்திணை ஐம்பது | ஐந்திணை எழுபது 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… இன்று நம் பதிவில் ஐந்திணை ஐம்பது மற்றும் ஐந்திணை எழுபது பற்றிய தகவல்களை பார்க்கப்போகிறோம். தினமும் இந்த பதிவின் மூலம் பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த வகையில் இன்று நாம் ஐந்திணை ஐம்பது மற்றும் ஐந்திணை எழுபது நூல்களில் கூறும் கருத்துக்களை பற்றி பார்ப்போம். இந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஓன்று. அகப்பொருள் கூறும் நூல்களுள் ஐந்திணை ஐம்பது நூலும் ஓன்று. மேலும், ஐந்திணை ஐம்பது பற்றிய செய்திகளை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ சங்க நூல் தரும் செய்திகள்..!

ஐந்திணை ஐம்பது நூல் குறிப்பு:

 • இந்த நூலை மாறன் பொறையனார் என்னும் புலவர் எழுதியுள்ளார். இவருடைய இயற்பெயர் பொறையனார். மாறன் என்பது இவருடைய தந்தை பெயர் ஆகும்.
 • இந்த நூல் கி.பி. 4 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நூல் என்று கூறப்படுகிறது.
 • இந்நூல் குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் போன்ற ஐந்திணைகளுக்கும் பத்துப் பாடல்களை பெற்று 50 பாடல்களை கொண்டுள்ளதால் இந்நூல் ஐந்திணை ஐம்பது” என்று பெயர் பெற்றது.
 • ஐந்திணை பற்றி பாடும் நூலில் 50 பாடல்களை உள்ளது.
 • இந்த நூலை எழுதிய ஆசிரியர் நூலின் முதல் செய்யுளில் உவமையாக முருகன், சிவன், மாயோன் என்ற மூவரையும் குறிப்பிட்டு பாடியுள்ளார். அதனால், இவரை வைதிக சமயத்தவர் என்று கூறுகிறார்கள்.
 • இந்நூல் முல்லை திணையை முதலாவதாக கொண்டுள்ளது.
 • மாறன் பொறையனார் என்ற பெயரில் மாறன் என்பது பாண்டியனையும், பொறையனார் என்பது சேரனையும் குறிக்கிறது.
 • இந்நூல் பாயிரத்தில் கூறப்படுகிறது.
 • நச்சினார்கினியார் இந்நூலின் பாடல்களை மேற்கொள் காட்டியுள்ளார்.
 • இந்நூலில் உள்ள பாடல்கள் சிறந்த மற்றும் கருத்து வளம் கொண்டவைகளாகவும் உள்ளன.
திரிகடுகம் நூல் குறிப்பு

ஐந்திணை எழுபது நூல் குறிப்பு:

 • இந்நூலை மூவாதியார் என்னும் புலவர் எழுதியுள்ளார்.
 • இந்நூல் கி.பி. 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த நூல்.
 • குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற ஒவ்வொரு திணையிலும் 14 செய்யுள்களை கொண்டுள்ளது. “மொத்தம் 70 பாடல்களை கொண்டதால் இந்நூல் “ஐந்திணை எழுபது” எனப் பெயர் பெற்றது”.
 • அகத்துறை பற்றிய 65 பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
 •  இந்நூலில் நான்கு திணைகளுக்கும் பொதுவாய் ‘நடுவண் ஐந்திணை’ என்று சிறப்பிக்க பெறுவதாலும் பாலைத் தினை நடுவில் அமைக்கப்பட்டுள்ளது.
 • இந்நூல் அன்பு கொண்ட உள்ளங்களின் அக உணர்வுகளையும், அக்கால சமூக வாழ்க்கை முறைகளின் பண்பாடுகளையும் பற்றி கூறுகிறது.
 • பதினெண்கீழ்க்கணக்கு நூலான ஐந்திணை ஐம்பது நூலை தழுவி இந்நூல் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது. இதனால் தான் இந்த இரண்டு நூல்களுக்கும் பெயர் ஒற்றுமை உள்ளதாக கூறப்படுகிறது.
 • மேலும், இரண்டு நூல்களிலும் உள்ள அடிகளும், கருத்துக்களும் ஓன்று போல அமைந்துள்ளன.
 • இந்நூலின் தொடக்கத்தில் விநாயகரை பற்றி கடவுள் வாழ்த்து பாடல் பாடப்பட்டுள்ளது.
 • மணமாகும் தலைவி தலைவனிடம் இருந்து உறுதி பத்திரம் எழுதி வாங்கியதை இந்நூல் பதிவு செய்துள்ளது.
 • பகைவரை அளித்த வீரர்களுக்கு பாலை நிலத்தில் கல் நடும் வழக்கம் இருந்ததை இந்நூலில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil