திருக்குறள் அலகிட்டு வாய்பாடு | Alagitu Vaipadu for Thirukural in Tamil

Alagitu Vaipadu for Thirukural in Tamil

தமிழ் அலகிட்டு வாய்பாடு | Alagitu Vaipadu Tamil

நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்.. இன்றைய பதிவில் அலகிட்டு வாய்ப்பாடு பற்றி பார்க்கலாம். இந்த அலகிட்டு வாய்ப்பாடானது மாணவர்கள் எழுதும் பொது தேர்வுகளில் தமிழ் மொழிப்படத்தில் இரண்டாம் தாளில் கேட்கப்படுகிறது. இந்த அலகிட்டு வாய்ப்பாட்டிற்கு முழுமையாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. அழகிரு வாய்ப்பாட்டை நன்றாக புரிந்துகொண்டால் ஈசியாக மார்க் வாங்கலாம். வாங்க அலகிட்டு வாய்ப்பாடு (alagitu vaipadu) பற்றி விரிவாக காண்போம்.

பெருக்கல் வாய்ப்பாடு

அலகிட்டு வாய்ப்பாடு எப்படி பிரிக்க வேண்டும் | alagitu vaipadu:

 • alagitu vaipadu for thirukural in tamil: திருக்குறளில் முதலாம் அடியில் நான்கு சீர்களும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் மொத்தம் 7 சீர்கள் இடம்பெற்றுள்ளது.
 • சீர்களை அவற்றிலுள்ள அசைகளின் அடிப்படையில் பிரிப்பதே அலகிட்டு வாய்ப்பாடாகும்.
 • ஒரு சீர்களை பிரிக்கும் போது மெய்யெழுத்திற்கு பக்கத்தில் கோடிடவும்.
 • நெடில் பக்கத்தில் கோடிடவும்
 • இருகுறில் அடுத்து கோடிடவும்
 • ஒற்று, ஆய்தம், அலகு பெறாது எனவே அவற்றை நீக்கி ஓர் எழுத்து இருப்பின் நேரசை எனவும், இரண்டு எழுத்துக்கள் இருப்பின் நிரையசை எனவும் நினைவில் கொள்ளவும்.

நினைவில் கொள்ளவேண்டியவை:

 • அலகிட்டு வாய்ப்பாட்டில் இரு நெடில்கள் சேர்ந்து வராது. நெடில் எழுத்திற்கு பிறகு குறில் சேர்ந்து வராது.
 • சீரின் முதலிலோ, இடையிலோ தனிக்குறில் வராது. கடைசியில் மட்டும் தனியாக வரும்.
 • வெண்பாவில் ஒரு ஈரசைசீர் எந்த அசையில் முடியுமோ அதற்கு எதிரசையில் அடுத்த சீர் தொடங்கும்.
 • வெண்பாவில் கடைசிசீர் ஓரசை சீராகத்தான் வரும்.
 • நேர் அல்லது நிரை அசைகளில் ஒன்றனை கொண்டு முடியும்.
 • கடைசி சீர் குற்றியலுகரத்தில் (கு, சு, டு, து, பு, று) முடிந்தால் நேர்பு அல்லது நிரைபு என்ற அசைகளில் ஒன்றனை கொண்டு முடியும். நேர்பு – காசு, நிரைபு – பிறப்பு எனும் வாய்ப்பாடுகளை பெறும்.
தமிழ் எழுத்துக்கள் அட்டவணை

அலகிட்டு வாய்ப்பாடு:

திருக்குறள் அலகிட்டு வாய்பாடு:

 1. ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
  எய்துவர் எய்தாப் பழி 
சீர்  அசை  வாய்ப்பாடு 
ஒழுக்/ கத்/ தின் நிரை / நேர் / நேர்  புளிமாங்காய் 
எய்/ துவர் நேர் / நிரை  கூவிளம் 
மேன்/ மை நேர் / நேர்  தேமா 
இழுக்/ கத்/ தின் நிரை / நேர் / நேர்  புளிமாங்காய் 
எய்/ துவர் நேர் / நிரை  கூவிளம் 
எய்/ தாப் நேர் / நேர்  தேமா 
பழி  நிரை  மலர் 
இந்த குறட்பா “மலர்” எனும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது. 

 

2. பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
    எண்ணிய தேயத்துச் சென்று

சீர்  அசை  வாய்ப்பாடு 
பொரு/ ளென்/ னும் நிரை / நேர் / நேர்  புளிமாங்காய் 
பொய்/ யா நேர் / நேர்  தேமா 
விளக்/ கம் நிரை / நேர்  புளிமா 
இரு/ ளறுக்/ கும் நிரை / நிரை / நேர்  கருவிளங்காய் 
எண்/ ணிய நேர் / நிரை  கூவிளம் 
தேயத்/ துச் நேர் / நேர் / நேர்   தேமாங்காய் 
சென்/ று நேர்பு  காசு 
இந்த குறட்பா “காசு” எனும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது. 

 

3. ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
    உயிரினும் ஓம்பப் படும் 

சீர்  அசை  வாய்ப்பாடு 
ஒழுக்/ கம் நிரை / நேர்   புளிமா 
விழுப்/ பம் நிரை / நேர்   புளிமா 
தர/ லான்  நிரை / நேர்   புளிமா 
ஒழுக்/ கம் நிரை / நேர்   புளிமா 
உயி/ ரினும் நிரை / நிரை  கருவிளம் 
ஓம்/ பப் நேர் / நேர் தேமா
படும்  நிரை  மலர் 
இந்த குறட்பா “மலர்” எனும் வாய்ப்பாட்டில் முடிந்துள்ளது. 

 

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil