வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதற்கு முன்னால் அதனை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்..!| Asafoetida Meaning in Tamil

Updated On: June 28, 2023 1:04 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

பெருங்காயம் பற்றிய தகவல் | Asafoetida Meaning in Tamil 

இனிய வணக்கங்கள் பொதுநலம். காம் நேயர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவரும் உணவில் நறுமணத்திற்காக பயன்படுத்தும் பெருங்காயத்தை பற்றிய தகவல்களை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். பொதுவாக நாம் அனைவருக்குமே பெருங்காயம் தெரிந்திருக்கும். அதனை பற்றிய முழுவிவரங்களும் தெரிந்திருக்காது. முழுவிவரங்கள் என்றால் அதனின் பிறப்பிடம், வேறுபெயர்கள் மற்றும் அதன் பயன்கள் என்பதை பற்றியெல்லாம் தெரிந்திருக்காது.

அதனால் இந்த பதிவில் பெருங்காயம் பற்றிய முழுவிவரங்களையும் பற்றி பார்க்கலாம். சரி வாங்க பதிவினுள் செய்லாலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பெருங்காயம் பற்றிய தகவல்:

perungayam in tamil

வேறுபெயர்கள் மற்றும் பிறப்பிடம்:

பெருங்காயம் (Asafoetida) என்பது 5 மீ உயரம் வரைக்கும்  வளரும் பூக்கும் தாவரம் ஆகும். இதன் பிறப்பிடம் பெர்சியா மற்றும் வட ஆப்பிரிக்க ஆகும்.

இதன் வேறுபெயர்கள் இன்குயா, காயம் ஆகிய பெயர்களை கொண்டுள்ளது. மேலும் இதனை சாத்தானின் சாணம்(Devil’s dung), நாற்றமடிக்கும் பசை, அசந்த், கடவுளின் உணவு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

இந்த பெருங்காயம் சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக் கொண்டிருக்கும். ஆனால் இதனை சமைத்த உணவுகளில் பயன்படுத்தும் போது மென்மையான சுவை மற்றும் நறுமணத்தையும் வழங்குகின்றது.

பயன்கள் :

பொதுவாக இந்த பெருங்காயம் உணவில் சுவையூட்டுப் பொருளாக பயன்படுகிறது. மேலும் ஊறுகாய்களிலும் செரிமானத்திற்கு உதவும் பொருளாகவும் பயன்படுகின்றது.

இதனை தொடர்ந்து உணவில் பயன்படுத்தும் பொழுது பெருங்காயம் குடலில் உள்ளிருக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் குறைக்கின்றது. வாயுத் தொல்லையைக் குறைக்கின்றது.

பெருங்காயம் 1918 ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் இன்புளுயன்சா தொற்று நோயை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது.

பெருங்காயம் ஆஸ்துமா மற்றும் மூச்சுக் குழாய் அழற்சி ஏற்படும் பொழுது உதவிகரமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

மிளகை உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதை பற்றிய சில தகவல்களை தெரிந்துகொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now