ஆன்லைன் மூலமாக பிறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

Birth Certificate Download Online in Tamil

பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்வது எப்படி?

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம் இன்றைய பதிவில் பிறப்பு சான்றிதழை ஆன்லைன் மூலமாக எப்படி டவுன்லோடு செய்வது என்பதை பற்றி பார்க்கலாம். இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு விதிமுறை படி, ஒவ்வொரு பிறப்பும் 14 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு மரணமும் 7 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் அந்தந்த நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்து வாங்கிய பிறப்பு சான்றிதழை நீங்கள் ஒருவேளை தொலைத்து விட்டிர்கள் என்றால் கவலை பட வேண்டும். ஆன்லைன் மூலம் பிறந்த சான்றிதழை எப்படி பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்பதை பற்றி பதிவில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

பிறப்பு சான்றிதழின் முக்கியத்துவம்:

  • பள்ளி முதல் சேர்க்கை
  • பாஸ்போர்ட் விண்ணப்பிக்க
  • வெளிநாடு பயணம்
  • குடும்பம் குடும்ப அட்டை நுழைவு
  • அரசு சேவைகள் நுழைவு

Birth Certificate Download Online in Tamil

பிறப்பு சான்றிதழ் பதிவிறக்கம் செய்ய அவசியம் தெரிந்திருக்க வேண்டிய விஷயங்கள்.

  • குழந்தையின் பிறந்த தேதி
  • குழந்தை எந்த மாவட்டத்தில், எந்த ஊரில் பிறந்தார்கள் என்ற விவரமும் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு விஷயங்கள் தெரிந்திருந்தால் போதும் ஆன்லைன் மூலம் நீங்கள் மீண்டும் பிறப்பு சான்றிதழை டவுன்லோட் செய்துகொள்ளலாம். சரி வாங்க அதற்கான வழிமுறைகளை இப்பொழுது பார்க்கலாம்.

birth certificate download

முதலில் https://www.crstn.org/birth_death_tn/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.

அவற்றில் Certificate Download என்பதில் Birth என்பதை கிளிக் செய்யுங்கள்.

Birth என்பதை கிளிக் செய்ததும் Print Certificate என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அவற்றில் Birth Certificate என்பதை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

பின் அவற்றில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து view என்பதை கிளிக் செய்திர்கள் என்றால். அவற்றில் அன்றைய நாள் பிறந்தவர்களின்

view என்ற ஆப்ஷனை கிளிக் செய்த பிறகு மேல் படத்தில் உள்ளது போல் வரும் அவற்றில் உங்களது பெயரை தேர்வு செய்து உங்கள் பிறப்பு சான்றிதழை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இந்த Process-ஐ வெறும் ஐந்தே நிமிடத்தில் செய்து விட முடியும்.

ஆன்லைன் மூலம் பிறப்பு/ இறப்பு சான்றிதழ் பெறுவது எப்படி?

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil Tech News